வணக்கம். நமது சொசைட்டி ஒவ்வொரு துறை சார்ந்த தலைப்பு வாரியாக தொடர்ந்து ஜூம் கூட்டங்கள் வழியாகவும், உறுப்பினர்களுக்கு மட்டும் நேரடிக்கூட்டமாகவும் வகுப்புகள் நடத்திவருகிறோம்.
கடந்த ஆண்டில் நமது உறுப்பினர்களுக்கு துவக்கத்தில் இருந்து ஜி.எஸ்.டியை
அறிமுகப்படுத்துவோம் என தொடர்ந்து சில வகுப்புகளை தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள்
நேரடிக்கூட்டங்களில் எடுத்து வந்தார்.
இப்பொழுது
வரி ஆலோசகர்களுக்காகவும், புதியவர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், ஜி.எஸ்.டியின்
அடிப்படையான அம்சங்களை வகுப்பு எடுக்கலாம் என்ற இப்பொழுது முடிவு செய்து அறிவித்துள்ளோம்.
மாணவர்களுக்கு
தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறையில் இருக்கிற காலமிது. ஆகையால், அவர்களை மனதில் வைத்து இந்த மாதம் சனி,
ஞாயிறு தவிர்த்து மே 26 துவங்கி ஜூன் 6ந் தேதி வரை பத்து நாட்கள் இணைய வழியில் ஜூம்
கூட்டங்களை நடத்த இருக்கிறோம். கட்டணமும் அதிகமில்லை.
ஒரு நாளைக்கு ரூ.100 என கணக்கிட்டால் மொத்த வகுப்புகளுக்கும் ரூ. 1000 தான். மாலை 7 துவங்கி 8.30 வரை என்பது பலருக்கும் வசதியான
நேரம் தான்.
ஆகையால் இந்த
நல்ல வாய்ப்பை நமது உறுப்பினர்களும், மற்றவர்களும் தங்களது பிள்ளைகளுக்கு, தெரிந்த
மாணவர்களுக்கும் பரிந்துரைக்கலாம். கலந்துகொள்ள உற்சாகப்படுத்தலாம். நமது உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த சொந்தங்கள்
வட்டத்தில் நமது பேனரையும், இந்த செய்தியையும் பகிர்வதன் மூலம் தேவைப்படுகிறவர்களுக்கு பரவலாக கொண்டு சேர்க்கலாம்.
சில குழுக்களில்
புதிதாக தொழில் செய்பவர்கள், கணக்காளர்களும் கேட்கிற கேள்விகள் அடிப்படை புரிதல்கள்
இன்றி இருப்பதை நாம் காண்கிறோம். எப்பொழுதும் அடிப்படைகளை வலுவாக கட்டியமைத்து கொண்டால்,
மேலே மேலே நாமாக எத்தனை மாடிகளையும் நாம் உருவாக்கிக்கொள்ளமுடியும்.
இந்த வகுப்புகளை
எடுக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் நமது சொசைட்டி நிர்வாகிகள் தான். அவர்கள் வரி ஆலோசகராக
பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள். நடுத்தர,
பெரிய, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி ஆலோசகராக இருப்பவர்கள். ஆகையால், வரி ஆலோசகர்களும் நிச்சயம் பங்குகொண்டு பலன் பெறலாம்.
ஜி.எஸ்.டி
அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்து, இப்பொழுது வரைக்கும் ஆயிரம் திருத்தங்களுக்கும்
மேலாக செய்துவிட்டார்கள். தனிநபர்களால் எவ்வளவு முயன்றாலும் அப்டேட் செய்து கொள்வது
என்பது சிரமமான ஒன்று.
ஜி.எஸ்.டியின்
அடிப்படை அம்சங்களை பயிற்றுவிக்கும் இந்த முயற்சி அருமையான முயற்சி. அதை நாம் நமது தொழில் வளர்ச்சிக்கு சரியாக பயன்படுத்திக்கொள்வோம்.
ஆகையால் இந்த பத்து நாள் பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ளுங்கள்.
நன்றி.
-
GSTPS
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment