பணியாளர் பதிவு சலுகைத் திட்டம் 2025 (Employees’
Enrollment Campaign)
1. இந்தத் திட்டம் எதற்காக?
முன்னர் EPF பெற
தகுதியுடையவர்களாக இருந்தும், கவனக்குறைவு அல்லது
தவறுகளால் EPF-ல்
பதிவு செய்யப்படாமல் விட்டுவிடப்பட்ட தொழிலாளர்களை இப்போது பின்னடைவு காலத்துடன் பதிவு செய்ய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒருமுறை சலுகைத் திட்டமாகும்.
2.
எந்த காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை பதிவு செய்யலாம்?
01.07.2017
முதல் 31.10.2025 வரை, EPF-க்கு
தகுதியுடையவர்களாக இருந்து EPFO-வில்
பதிவு
செய்யப்படாமல் விட்டுவிடப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிறுவனங்கள் இப்போது அறிவித்து EPF-ல்
பதிவு
செய்யலாம்.
3.
தொழிலாளரின் பங்கு (Employee’s share) – சலுகை
பொதுவாக EPF-ல், தொழிலாளர் பங்கு – 12% நிறுவன பங்கு – 12% இரண்டும் கட்டாயமாக செலுத்தப்பட
வேண்டும். ஆனால் இந்த Campaign-ன் கீழ், முன்பாக தொழிலாளரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படாத 12% தொகையை இப்போது தொழிலாளர்களிடமிருந்து கேட்கவும், நிறுவனங்கள் கட்டவும் தேவையில்லை. அதாவது, தொழிலாளர் பங்கு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது முக்கியமானது. இது நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக நன்மை தரும் அம்சமாகும்.4.
அபராதம் (Penal damages) – மிகப் பெரிய நிவாரணம்
சாதாரணமாக EPF பதிவு
செய்யாமல் விட்டால், Section 14B – அபராதம் Section 7Q – வட்டி என்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால்
இந்த
திட்டத்தின் கீழ்,
அபராதம் ஒரு தொழிலாளருக்கு அதிகபட்சம் ₹100/- மட்டுமே பல ஆண்டுகள் பதிவு
செய்யாமல் இருந்தாலும், அதற்கான அபராதம் மிகக்
குறைந்த அளவாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை கருணை / மன்னிப்பு அடிப்படையிலான சலுகைத் திட்டம் என்று புரிந்துகொள்ளலாம்.
5.
நிறுவனத்தின் பொறுப்பு என்ன?
சலுகைகள் இருந்தாலும், நிறுவன
பங்கு
– 12%, அதற்கான வட்டி (Section 7Q) இவை கட்ட வேண்டிய பொறுப்பாக தொடரும். வட்டிக்கு முழு
தள்ளுபடி வழங்கப்படுவதாக
இதுவரை
தனியான
அறிவிப்பு இல்லை.
அதனால்,
தற்போது உள்ள
நிலவரப்படி
வட்டி
செலுத்த வேண்டியது அவசியம் என
கருதப்படுகிறது
6.
யாருக்கு இந்தத் திட்டம் முக்கியமாக பயன்படும்?
இந்தத்
திட்டம், PF தணிக்கையைப் பற்றி
கவலைப்படுகின்ற நிறுவனங்களுக்கும், பழைய
தொழிலாளர்கள் EPF-ல்
விடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும், சட்டப்படி
முறையாக நடக்க
விரும்பும் நிறுவனங்களுக்கும், நோட்டீஸ் அல்லது
விசாரணை வருவதற்கு முன் தன்னார்வமாக சரி
செய்ய
நினைக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Employees’ Enrollment Campaign 2025 என்பது நிறுவனங்களுக்கும்
தொழிலாளர்களுக்கும்
முக்கியமான ஒரு
சட்ட ஒழுங்குமுறை வாய்ப்பு ஆகும். பழைய
தவறுகளை குறைந்த அபராதத்துடன் சரி
செய்து,
எதிர்கால சட்ட
சிக்கல்களைத் தவிர்க்க இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். தற்போதைய விளக்கம் EPFO வழங்கிய ஆரம்ப தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. விரிவான சுற்றறிக்கை அல்லது
நடைமுறை வழிகாட்டுதல் வந்த
பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.
பி.எப்.
பணத்தை பெற UPI வசதி
EPFO பங்குச் சந்தை முதலீட்டு
(equity) சந்தையில் அதிகரிக்கும் திட்டம்
பி.எப்.
தன் முதலீட்டு முறையில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. முதல்முறையாக, தனது பணத்தின் ஒரு பகுதியை equity
market-இல் 10% வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு, சந்தையில் முதலீடு செய்யும் அளவு குறைவாகவே இருந்தது.
இதன்
முக்கிய நோக்கம், PF கணக்கில் கிடைக்கும் வருமானத்தை (returns) நீண்ட
காலத்திற்கு நிலைத்ததாகவும்
அதிகமாகவும் வைத்திருப்பதுதான்.
பங்குச்
சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், காலப்போக்கில் அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதி, அதனால், தொழிலாளர்களின்
PF சேமிப்பில் கிடைக்கும் வட்டி (PF interest rate) தேவையான அளவில் உயர்ந்த வருமானம் கிடைக்க உதவும் எனவும் கருதி,
இதை செய்கிறது. இதில் ஆபத்துகள்
உண்டு. நீண்ட கால முதலீடு என்பதால்,
ஆபத்துகள் குறைவு எனலாம். ஆனால் வருங்காலம் தான் வருமானம் அதிகரித்ததா, இழப்பானதா
என பார்க்க முடியும்.
EPF Suvidha Providers என்ற உதவியாளர் அமைப்பு
EPFO அங்கீகாரம் பெற்ற EPF Suvidha Providers என்ற உதவியாளர் அமைப்பு அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனால், தொழிலாளர்கள் தங்களின் EPF கணக்கு தொடர்பான பிரச்சினைகள், விண்ணப்பங்கள், திருத்தங்கள், நிலுவைகள் போன்றவற்றை எளிதாக தீர்க்க உதவி பெற முடியும்
என்கிறது.
இதனால் பி.எப் அலுவலகம் செல்வதில் உள்ள சிரமங்கள் குறைந்து, சேவைகளை அணுகுவது எளிமையாகும். தொழிலாளர்களின்
திருப்தியை அதிகரிக்கும் வகையில் சேவை தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. பார்க்கலாம்.
EPFO 3.0 – பி.எப். உறுப்பினர்களுக்கான நவீன சேவை
EPFO, தொழிலாளர்களுக்கான சேவைகள் இன்னும் எளிதாகவும் வேகமாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், EPFO 3.0 என்ற புதிய டிஜிட்டல் அமைப்பை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் EPF மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே மைய கணினி அமைப்பில் செயல்படும். எந்த மாநிலத்தில் வேலை செய்திருந்தாலும்,
எந்த EPFO அலுவலகத்தில் கணக்கு இருந்தாலும், ஒரே PF கணக்கின் மூலம் எல்லா சேவைகளையும் பெறும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் காரணமாக அலுவலகம் மாறினாலும், சேவைகள் தடைப்படாது. மேலும், புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் இயந்திர மொழிபெயர்ப்பு
(AI language tools) வசதி இருப்பதால், உறுப்பினர்கள் தங்களுக்கு வசதியான மொழியில் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
இதோடு, உறுப்பினர்களின்
பதிவுகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI), பிளாக்செயின் (Blockchain), தன்னியக்க கற்றல் (Machine Learning) போன்ற நவீன தொழில்நுட்பங்களை
பயன்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர், பிறந்த தேதி, ஆதார், வேலை விவரங்கள் போன்ற பதிவுகளில் உள்ள பிழைகள் குறைக்கப்பட்டு,
சரியான தகவல்கள் உறுதி செய்யப்படும். பதிவு சரிபார்ப்பு வேகமாகவும் துல்லியமாகவும்
நடைபெறுவதால், பணம் பெறுதல், திருத்தங்கள் மற்றும் ஓய்வூதிய சேவைகள் காலதாமதமின்றி கிடைக்க உதவும். நாமும்
வரவேற்போம்.
ESIC : SPREE 2025 திட்டத்திற்கான கால எல்லை நீட்டிப்பு
கடந்த இரண்டு மாதங்களில் ESIC தொழிலாளர்களுக்குப் பயனுள்ள சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.
இதில் முக்கியமானது SPREE
2025 என்ற பதிவு திட்டம். இந்த திட்டத்தின் கால அவகாசம்
இப்பொழுது 31.01.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ESI-யில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களும் தொழிலாளர்களும்,
பழைய கால ESI பாக்கி, அபராதம், ஆய்வு போன்ற சிக்கல்கள் இல்லாமல் புதிதாக பதிவு செய்ய முடியும். இதனால் அதிகமான தொழிலாளர்கள் ESI மருத்துவ வசதி மற்றும் பணப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த SPREE திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏற்கனவே பல நிறுவனங்களும், கோடிக்கணக்கான தொழிலாளர்களும் ESI பாதுகாப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ESIC தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திட்டம் தற்போது விழிப்புணர்வு மற்றும் பதிவு ஊக்குவிப்பு நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுகிறது என்றும், எதிர்காலத்தில் புதிய சமூக பாதுகாப்புச் சட்ட விதிகள்
(Social Security Code) முழுமையாக அமலுக்கு வரும் வரை, கூடுதல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என்றும் ESIC தெளிவுபடுத்தியுள்ளது.
ESIC இன்
இந்த சமீபத்திய மாற்றங்கள், பதிவு செய்யாத தொழிலாளர்களையும்
ESI பாதுகாப்புக்குள் கொண்டு வந்து, மருத்துவ சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பு நன்மைகள் எளிதாக கிடைக்கச் செய்யும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்படுகிறது.
DSC பதிவு – புதிய நடைமுறை
DSC-யை பழைய
நடைமுறையில் பதிவு
செய்ததும், PF தளம்
தானாகவே ஒரு
கடிதத்தை (Request Letter – PDF) உருவாக்கும். அந்தக்
கடிதத்தை தரவிறக்கம் (Download) செய்து, நிறுவனத்தின் Letter Head-ல் Print எடுக்க வேண்டும்.
கையெழுத்து விதிமுறைகள்
தனிநபர் நிறுவனத்தில் முதலாளி மூன்று
மாதிரி
கையெழுத்து (Specimen Signatures) இட வேண்டும். நிறுவன
முத்திரை (For Seal) வைத்து, அதன்மேலும் கையெழுத்து இடப்பட
வேண்டும்.
கூட்டு நிறுவனம் (Partnership Firm), உரிய பங்குதாரர் மூன்று
மாதிரி
கையெழுத்திட வேண்டும். நிறுவன
முத்திரை பயன்படுத்தப்பட வேண்டும். கூடுதலாக, மற்றொரு பங்குதாரரின் கையெழுத்தும் அவசியமாகும்.
Form 5A & Authorised Signatory
Proof – மிக முக்கியம்
நிறுவனம் PF-ல்
முதன்முறையாக பதிவு
செய்யப்படும் போது
Form 5A பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். அதன்
பின்னர் வங்கி
விவரங்களை பதிவு
செய்யும் போதும்,
Proprietor / Partner / Director மாற்றம் ஏற்பட்டாலும், Form 5A-ஐ புதுப்பித்து (Update) செய்ய வேண்டும். நடைமுறையில் Form 5A புதுப்பிக்கப்படாத நிறுவனங்களில், தற்போது DSC பதிவு
செய்யும் நேரத்தில், புதுப்பிக்கப்பட்ட Form 5A – தரவிறக்கம் செய்த
நகல்,
அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்திடுபவரின் (Authorised Signatory) அடையாளச் சான்று,
மேலும்
கையெழுத்திடுபவரின் ஆதார்
நகல் ஆகியவற்றையும் இணைக்க
PF அலுவலகம் வலியுறுத்துகிறது. இவ்வாவணங்கள் இணைக்கப்படாவிட்டால், DSC பதிவு
தற்காலிகமாக நிறுத்தப்படுவதோ அல்லது
நிராகரிக்கப்படுவதோ நிகழும்.
இதுகுறித்து PF துறை
இதுவரை
தெளிவான சுற்றறிக்கை (Circular) வெளியிடாததும், நிறுத்தி வைக்கும் பொழுது
காரணத்தை தெரிவிக்காததும், ஒரு
முக்கியமான நடைமுறைச் சிக்கலாக இருந்து வருகிறது.
PF அலுவலக
ஒப்புதல் & DSC நிலை
PF அலுவலகம் Request Letter மற்றும் இணைப்புகளை சரிபார்த்து ஒப்புதல் அளித்த
பிறகு, PF Portal → DSC – Signature Status பகுதியில்
“Active” என காட்டப்படும். அப்போது DSC பதிவு
முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக உறுதி
செய்யலாம். ஒப்புதல் பெற
அதிகபட்சம் 7 நாட்கள் வரை
ஆகலாம்.
கடிதத்தில் பிழை
இருந்தால், அவை
திருத்தப்பட்ட பின்னரே ஒப்புதல் வழங்கப்படும்.
இன்னும்
வளரும்….!
வணக்கங்களுடன்,
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,
9551291721
குறிப்பு : இந்தக் கட்டுரை தொழில் உலகம் பிப்ரவரி 2026 இதழில் வெளிவந்துள்ளது.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987







No comments:
Post a Comment