வணக்கம்.
நேற்று சனிக்கிழமையன்று நடைபெற்ற (21/02/2026) ஜூம் கூட்டம்
அடுத்த வாரம் 28/02/2026 நடைபெற இருக்கும் மாதிரி நீதிமன்றத்திற்கு (Moot
court) தயாரிப்பு என்ற நிலையில் இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைக்கு
வெளியில் யாருக்கும் தெரியப்படுத்தாமலேயே, நமது GSTPS உறுப்பினர்களே திரளாக கலந்துகொண்டார்கள்.
மகிழ்ச்சி.
அடுத்த வாரம்
மாதிரி நீதிமன்றத்தில் பெயர் கொடுத்தவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர பெரும்பாலோர்
கலந்துகொண்டனர்.
மாதிரி நீதிமன்றத்தை
நாம் எதற்காக ஏன் நடத்துகிறோம்? என்பதை விரிவாக நமது GSTPS தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன்
அவர்கள் ஒரு அறிமுக முறை தந்தார்.
வழக்கறிஞர்
திரு. சங்கர் கணேஷ் அவர்களால் கலந்துகொள்ள இயலாததால், நமது தலைவர் கடைசி நேரத்தில்
கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியும், இப்பொழுது வழக்கறிஞராகவும்
பணியாற்றிவரும் திரு. சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு துவக்கத்தில்.. சட்டம் என்ன சொல்கிறது?
அதிகாரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? நடைமுறையில் என்னவிதமான சிக்கல்களை வணிகர்கள்
எதிர்கொள்கிறார்கள் என நல்ல ஒன்றை தந்தார்.
பங்கேற்பாளர்களை
நோட்டிசுகள் அனுப்புங்கள் என தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சிலர் அனுப்பியிருந்தார்கள்.
அது நாம் விவாதிக்கும் அளவிற்கு அத்தனை பொருத்தமாக இல்லை. ஆகையால், வழக்கறிஞர் திரு.
ஹரிணி அவர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் ஒன்றை எடுத்துகொள்ளலாம் என அவரே முன்மொழிந்தார்.
உதாரணம்
: GST Registration, Input credit etc…
ஒரு குறிப்பிட்ட
நோட்டிசை எடுத்துகொண்டு, அதில் என்னென்ன வாதங்களை நாம் வைக்கலாம் எனவும் ஒரு தெளிவாக
விளக்கினார்.
என்னென்ன
நோட்டிசுகளை எடுத்திருக்கிறோம் என குழுவில் பகிரச் சொல்லி (பெயர், முகவரி, ஜி.எஸ்.டி எண் போன்றவற்றை மறைத்து) தலைவர் கேட்டுக்கொண்டார். அதை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டு உரிய
பதிலை தயார் செய்து, புதன்கிழமைக்குள் குழுவில் பகிர்ந்தால், அதை வைத்துக்கொண்டு அரசு
தரப்பில் இருந்து வாதிடுபவர்கள் உரிய பதிலை
தயார் செய்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள்
தாங்கள் எதிர்கொண்ட சில நோட்டிசுகள் குறித்து தெரிவித்து, விளக்கம் கேட்டார்கள். விரிவாக விவாதிக்கப்பட்டது.
நோட்டிசுகள்
அடை மழை போல கொட்டுவதைப் பார்த்தால், ஒவ்வொரு நேரடிக் கூட்டத்திலும் முக்கியமான இரண்டு
வழக்குகளை நாமே வாதாடி, சட்ட அறிவை நாம் வளர்த்துக்கொள்ளலாம் போல! வருகிற காலம் அப்படித்தான் இருக்கப்போகிறது.
இந்த வாரம்
GSTR3B பில் பலரும் நெருக்கடியாக இருந்துவிட்டோம். ஆகையால் இந்த வாரம் மாதிரி நீதிமன்றத்திற்கு
அதற்காக பெயர் கொடுத்தவர்கள் சிலர் தயார் செய்வதில் சுணக்கம் கொண்டார்கள். வருகிற வாரம் அனைவரும் வழக்குக்காக சிறப்பாக தயார் செய்து, வணிகர்களை சட்ட
ரீதியான வலுவான வாதங்களை வைத்து காப்பாற்ற போராடுவார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளை இப்பொழுதே தெரிவிப்போம்.
மற்றவர்கள்
இந்த மாதிரி டிரிபியூனலில் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இல்லாமல், குழுவில் பகிரும் நோட்டிசுகளுக்கு
நாமும் ஒரு பதில் தயாரித்தால், நாமும் தயாராகிவிடலாம். வாதங்களையும், நடைமுறைகளையும் கவனித்தால், இதில்
ஒரு தெளிவு கிடைக்கும்.
பொதுவாக தினசரி
சட்டம், வழக்கு குறித்து படிக்கவேண்டும். நேரடிக் கூட்டம் கலந்துகொள்ளவேண்டும் என பலரும்
ஆசைப்படுகிறோம். நேரில் பார்க்கும் பொழுது, கலந்துகொள்ளவில்லை என வருத்தப்படுகிறார்கள்.
பொதுவாக தனது
தொழிலில் பரபரப்பாக இருப்பவர்கள் எத்தனை வேலைகள் இருந்தாலும், புதிதாய் ஒரு வேலை வந்தால்,
அதோடு இணைத்து உற்சாகமாய் செயல்படுகிறார்கள். மற்றவர்கள் தான் நேரம் இல்லை என காரணம் சொல்கிறார்கள்.
என்ன காரணம்
சொன்னாலும், தொழில் ரீதியாக அப்டேட் ஆகவில்லை என்றால், காலம் நம்மை பின்தள்ளிவிட்டு
கருணையே இல்லாமல் முன்சென்றுவிடும் என்பது தான் இதில் நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய
முக்கிய செய்தி.
மாதிரி நீதிமன்றத்தையும்
அதன் செயல்முறைகளையும், வாதங்களையும் காண ஆர்வமாய் இருக்கிறேன். அடுத்த வாரம் அரங்கு
நிறைந்த கூட்டத்தில் சந்திப்போம்.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

No comments:
Post a Comment