Friday, June 19, 2026

PF Code பெறுவது தொடர்பான நடைமுறை அனுபவம்

 



பல நிறுவனங்கள் தங்களது தொழில் துவக்கத்தின் ஆரம்ப கட்டத்தில், பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை  (Private Limited Company) பதிவு செய்வதற்காக தணிக்கையாளர் அல்லது பதிவு சேவை வழங்கும் நிறுவனங்களை அணுகுகின்றன.

 

இந்த பதிவு செயல்முறையின் போது, Employees’ Provident Fund (EPF) மற்றும் Employees’ State Insurance (ESI) ஆகிய பதிவுகளும் MCA Portal (MCA Portal) வழியாக தானாகவே மேற்கொள்ளப்பட்டு, தொடர்புடைய Code Number-கள் வழங்கப்படுகின்றன.

 

பதிவு செய்யப்பட்ட உடனேயே தேவையுள்ள நிறுவனங்கள், அந்த EPF மற்றும் ESI எண்ணுகளை பயன்படுத்தி செயல்பாடுகளை துவக்குகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் உற்பத்தி அல்லது சேவை செயல்பாடுகளை தாமதமாக துவங்குவதால், பின்னர் பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் மட்டுமே இந்த எண்ணுகளின் தேவையை உணருகின்றன.

 

சட்டப் பின்னணி (Legal Applicability):

 

·         Employees’ State Insurance Act (ESI Act) படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருந்தால் ESI பதிவு கட்டாயமாகும் (சில மாநிலங்களில் 20 ஆக இருக்கலாம் – Subject to notification).

 

·         Employees’ Provident Fund & Miscellaneous Provisions Act, 1952 (EPF Act) படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருந்தால் PF பதிவு கட்டாயமாகும்.

இந்த நிலைமையில், ஆரம்பத்தில் பதிவு செய்த தணிக்கையாளர் அல்லது சேவை வழங்குநர்களுடன் தொடர்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில்:

 

·         பதிவு செய்யும்போது அவர்களுடைய மொபைல் எண் / மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்

·         நிறுவனத்திற்கு உரிய Login தகவல்கள் கிடைக்காமல் இருக்கலாம்

 

PF Code கண்டறியும் எளிய முறை:


 

Employees’ Provident Fund Organisation (EPFO) தளம், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிறுவனம் தொடர்பான விவரங்களை தேடும் வசதியை வழங்கியுள்ளது.

 

கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்தி, நிறுவனத்தின் பெயரை உள்ளிடுவதன் மூலம் PF Establishment Code- அறியலாம்:

 

https://unifiedportal-emp.epfindia.gov.in/publicPortal/no-auth/misReport/home/loadEstSearchHome

 

நடவடிக்கை (Procedure):


1.      மேலுள்ள இணைப்பை திறக்க வேண்டும்

2.      “Establishment Name” பகுதியில் நிறுவனத்தின் பெயரை உள்ளிட வேண்டும்

3.      தேடல் முடிவில், நிறுவனத்தின் PF Code காண்பிக்கப்படும்

 

அடுத்து செய்ய வேண்டியது:

·         PF Code கிடைத்தவுடன், EPFO Unified Portal (Employer Login) பகுதியில் “Forgot Password” விருப்பத்தை பயன்படுத்தலாம்

·         பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP (One Time Password) வரும்

·         அதன் மூலம் Login அணுகலை மீட்டெடுக்கலாம்

 

மொபைல் எண் / மின்னஞ்சல் அணுகல் இல்லாத நிலை:

ஒருவேளை:

 

·         பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலை இருந்தாலோ

·         மின்னஞ்சல் முகவரி third party வசம் இருந்தாலோ

 

EPFO தளம், அத்தகைய சூழ்நிலைகளுக்காக மாற்று (Alternate) வசதிகளையும் வழங்கியுள்ளது. உரிய ஆதார ஆவணங்களுடன், KYC Update / Employer Details Update மூலம் அணுகலை திருத்திக் கொள்ள முடியும்.

 

இந்த செயல்முறைகள் EPFO Portal-ல் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். கீழே தந்துள்ள படத்தைப் பாருங்கள்.

 


(இந்த விளக்கத்தை பி.எப். அலுவலகமே தருகிறது)

இதே போன்ற முறையில் ESI Code கண்டறிதல் தொடர்பான நடைமுறைகள் தனியாக விளக்குகிறேன்.

 

இறுதியாக, நிறுவன பதிவு செய்யப்பட்ட உடனே EPF மற்றும் ESI தொடர்பான Login விவரங்கள், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவை சரிபார்த்து பாதுகாப்பாக பராமரிப்பது மிக அவசியம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721


No comments:

Post a Comment