எப்பொழுது நோட்டிஸ் போடுவார்களோ என பதட்டத்தில் தான் எப்பொழுதும் இருக்கிறோம். ஜி.எஸ்.டி நோட்டிஸ்களை தொடர்ந்து கண்காணிக்க நாம் ஒவ்வொருவரும் ஏதொவொரு வடிவத்தை பின்பற்றுகிறோம். சிலர் ஆண்டுக்கு சந்தா செலுத்தி கூட ஆப்பை பயன்படுத்திவருகிறோம்.
சந்தையில்
கிடைக்க கூடிய சில மென்பொருட்களை குறித்து எழுதியிருந்த எழுதியப் படிவை படித்த, கோவையைச்
சேர்ந்த தணிக்கையாளர் திரு. பால் தங்கம் அவர்கள் விடிகாலையிலேயே தொலைபேசியில் அழைத்தார்.
”நாங்கள் இதே பிரச்சனையை எதிர்கொண்டோம். அதற்காக எங்களது
தொழில்நுட்ப குழுவைக் கொண்டே இதற்காக ஒரு மென்பொருளை உருவாக்கினோம். அதற்கு பெயர் Zentax Software. அது வெற்றிகரமாக இயங்கி
வருகிறது. அதை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே தருகிறோம்.”
”தில்லியில்
ஒரு கருத்தரங்கில் நாங்கள் ஸ்டால் போட்டிருந்தோம். எங்களைப் போலவே ஒரு மென்பொருளை உருவாக்கி, சந்தைப்படுத்தி
வரும் ஒரு நிறுவனத்தினர் எங்களிடம் வந்து பேசினார்கள். “நீங்கள்
எப்படி இலவசமாக கொடுக்கலாம்? அதற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்” என பேசினார்கள்.
நாங்கள் அதற்கு பிறகும் இலவசமாக தந்துகொண்டிருக்கிறோம்”
என்றார். https://www.zentaxclinic.com/ இந்த தளத்தைப் பாருங்கள்.
”அருமையான
வேலை. இலவசமாக தருவதற்கு நன்றி. எங்களது சொசைட்டி
உறுப்பினர்களுக்கும், சக வரி ஆலோசகர்களுக்கும் விநியோகிக்கலாம் கொடுங்கள் சார்” என்றதற்கு,
அவருடைய அலுவலகத்தில் இருந்து ஒருவரை விரைவில் தொடர்புகொள்ள சொல்கிறேன் என்றார். மகிழ்ச்சி.
தணிக்கையாளர்
திரு. பால் தங்கம் அவர்கள் வேறு யாருமில்லை. நம்முடைய தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு
நன்கு பழக்கமானவர். நம்முடைய சொசைட்டியில் ”எப்படி
ஜி.எஸ்.டி நோட்டிசுகளை கையாள்வது?” என கடந்த ஏப்ரல் 2025ல் நம் சொசைட்டியில் இணைய
வழிக் கூட்டத்தில் ஒரு அருமையான உரை தந்தவர்.
அனைவருக்குமான
பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதும், குழுவில் பகிர்வதும் நல்ல பலன்களை எப்பொழுதும்
தருகின்றன என்பது ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்வோம்.
****
சொன்னது போலவே
அவருடைய அலுவலகத்தில் இருந்து.. தணிக்கையாளர் திரு. பால் தங்கள் அவர்களுடைய குழுவைச்
சார்ந்த திரு. தனசேகர் என்பவர் 9092951122 என்ற எண்ணில் இருந்து அழைத்தார். என்னுடைய சிஸ்டத்தில் ultra viewer மூலமாக அவர்களுடைய
மென்பொருளை நிறுவி, எப்படி பயன்படுத்துவது எனவும் மிக குறைவான நேரத்தில் விளக்கினார்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் அழைக்கிறேன் என்றதற்கு சரி என்றார்.
ஒரு நோட்டிசுக்கு
அவர்கள் தளத்திலேயே உருவாக்கியுள்ள AI யை கொண்டு
பதில் தயாரித்து தரவேண்டும் என்றால், அதற்கு மட்டும் கட்டணம் உண்டு என தெரிவித்தார்.
எங்களுடைய
சொசைட்டி உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தலாம் அல்லவா! என கேட்டதற்கு ”நிச்சயமாக” என்றார்.
கடந்த ஏப்ரலில்
2025 எங்களது சொசைட்டி கூட்டத்தில் தணிக்கையாளர் திரு. பால் தங்கம் அவர்கள் பேசும் பொழுது, இந்த மென்பொருள் தயாராக இருந்ததா? அவர் அது குறித்து
எதுவும் சொல்லவில்லையே? என்றதற்கு… அப்பொழுது தான் நாங்கள் உருவாக்கி சோதித்துக்கொண்டிருந்தோம். சமீபத்தில் தான் முழுமையான அளவுக்கு தயாராகி இருக்கிறது
என்றார்.
இது சம்பந்தமாக
நமது தலைவரிடம் தெரிவித்தேன். நல்ல விசயம்.
நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். தணிக்கையாளரிடமும் பேசுகிறேன் எனவும் தெரிவித்தார்.
வரி ஆலோசகர்களுக்கு
இந்த மென்பொருள் ஒரு அருமையான விசயம். அதை
தன் குழுவை வைத்து உருவாக்கி, அதை இலவசமாகவும் தரும் தணிக்கையாளர் திரு. பால் தங்கம்
அவர்களுக்கும், அவர்களுடைய குழுவிற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வோம்.
அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு, இன்னும் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என
வாழ்த்துவோம்.
நன்றி.
-
இரா.
முனியசாமி,
உறுப்பினர்,
9551291721
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

No comments:
Post a Comment