Tuesday, February 3, 2026

GSTPS : Live demo on online filing of GST Tribunal Appeal - கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

 


வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (31/01/2026) நமது GSTPS உறுப்பினர்களுக்கான நேரடிக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.

 

தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன்  தன்னுடைய உரையில் விரைவில் டிரிப்யூனல் நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வரவிருப்பதை கருத்தில் கொண்டு, நமது உறுப்பினர்களை நடைமுறைக்கு தயார்படுத்தும் நோக்கில் இந்த தலைப்பு இப்பொழுது விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

கூட்டத்தின் பேச்சாளரான வழக்கறிஞர் திருமதி. ஹரிணி அவர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, மூத்த வரி ஆலோசகர் திரு. பெருமாள் அவர்களுடைய மகள் என்றும், இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளை நேர்த்தியாகவும், சிறப்பாகவும் வழக்காடி வருகிறார் என அறிமுகப்படுத்தினார்.  (மிக விரைவில் திருமதி ஹரிணி அவர்களின் அப்பா கோவை பெருமாள் அவர்கள் என பேசப்படுகிற காலம்  வந்துவிடும். வாழ்த்துகள்)

 

அதனைத் தொடர்ந்து, டிரிப்யூனலுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து நமது உறுப்பினரும் வழக்கறிஞருமான திருமதி. ஹரிணி அவர்கள், நடைமுறை சார்ந்த விளக்கங்களை  ஸ்கிரீன் ஷாட் வழியாக (அவர் போர்ட்டலை முழுவதும் நம்பவில்லை. நல்ல விசயம். ஒவ்வொரு ஷாட்டையும் அத்தனை தெளிவாக எப்படி எடுத்தார் என்பது ஆச்சர்யமான விசயம்) ஒவ்வொரு படியாகவும் (step-by-step) தெளிவாக எடுத்துரைத்தார்.

 

விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள், ஆவணத் தயாரிப்பு, நடைமுறை சிக்கல்கள் யாரெல்லாம் அங்கு வாதாட தகுதியுள்ளவர்கள்,  உள்ளிட்டவை விரிவாக விளக்கினார்.

 

GSTP என்று மட்டும் சொல்லாமல், தேர்வு மூலம் தேர்ச்சியானவர்கள் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை காலமாக ஏன் தேர்வு நடத்தவில்லை? அது குறித்து இந்திய அளவில் யாரேனும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்களா என தேடிப்பார்த்து, யாரும் தாக்கல் செய்யவில்லை என்பது ஆச்சர்யமாயிருந்தது என்றார். 

உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பொறுமையுடனும் தெளிவுடனும் பதிலளித்தார்.

 

அடுத்த கூட்டம் குறித்து தலைவர்மாதிரி நீதிமன்றம் (Mock Tribunal) நடத்த திட்டமிடப்பட்டிருப்பதை விளக்கினார்.  அதற்கான நடுவர்கள்,  இதில் அரசு தரப்பு வாதமாகவும், வணிகர்கள் தரப்பு வாதமாகவும் வாதங்களை முன்வைக்க உறுப்பினர்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டதில், பலரும் ஆர்வமுடன் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். (இது குறித்து விரைவில் நிர்வாகிகள் வெளியிடுவார்கள்.)

 

எல்லோரும் பேர்கொடுத்த பிறகு, டிரிப்யூனல் நடைமுறையில் ஆங்கில மொழியே அனுமதிக்கப்படுகிறது; எனவே வாதங்களும் ஆங்கிலத்திலேயே முன்வைக்கப்பட வேண்டும் என்பதை தலைவர் தெரிவித்தார்.

 

இதற்கு முன்பாக, வழக்குகளுக்கான வரைவு (Draft) தயாரிப்பு குறித்த பயிற்சி அவசியம் என்ற கருத்தை உறுப்பினர்கள் முன்வைத்தனர். அதனை ஏற்று, கீழ்க்கண்டவாறு பயிற்சி மற்றும் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டன:

 

             14/02 : வழக்கறிஞர் திருமதி ஹரிணி அவர்கள்

வழக்குக்கு தயாரிப்பது எப்படி?” என்ற தலைப்பில் Zoom மூலம் பயிற்சி வகுப்பு நடத்துவார்.

 

             21/02 :  மாதிரி நீதிமன்றத்தில் வாதங்களை எவ்வாறு முன்வைக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடல் வடிவில் (interactive session) பயிற்சி நடைபெறும். (இதில் நீதிமன்ற அமர்வில் கலந்துகொள்பவர்கள் மட்டுமா? எல்லோருமா? என நிர்வாகிகள் தெளிவுப்படுத்துவார்கள்.)

 

             28/02 : மதியம் உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் நேரடி கூட்டமாகமாதிரி நீதிமன்றம் நடத்தப்படும்.

 

மேலும், அந்த நாளில் அணிய வேண்டிய உடை குறித்த வழிகாட்டுதலும் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

 

மொத்தத்தில், இன்றைய கூட்டம் டிரிப்யூனல் நடைமுறைகளை புரிந்து கொள்ளவும், உறுப்பினர்களை வரவிருக்கும் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு தயார்படுத்தவும் முக்கியமானதாக அமைந்தது.

 

நமது சொசைட்டியில் வழக்கறிஞர்கள் அதிகமாகி கொண்டே வருகிறார்கள். அவர்கள் நமக்கு நல்ல பயிற்சி அளிப்பதும் வரவேற்க  தகுந்தது.

 

நன்றி.

 

-       GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

No comments:

Post a Comment