Tuesday, December 23, 2025

GSTPS : Consultant Series - Reg.

 


அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கு,


வணக்கம்.  வரி ஆலோசகர் குறித்த தொடரை இப்பொழுது தான் துவங்கியது போல இருக்கிறது.  அதற்குள் 44 கட்டுரைகளை நிறைவு செய்துவிட்டோம்.  


துவங்கிய நாளில் இருந்து, நமது குழுவில் நிறைய உற்சாகப்படுத்தல்கள்,  இந்த கட்டுரைகளை வேறு சில குழுக்களிலும் பகிரும் பொழுது, தனிப்பட்ட நபர்கள் வேறு வேறு குழுக்களிலும் பகிர்ந்தார்கள்.  தனிப்பட்ட முறையிலும் சில உறுப்பினர்கள் நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்கள்.  இதில் அதிகம் உற்சாகப்படுத்தியது எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் (Silent Readers) தொடர்ந்து படித்தவர்கள் தான். 🙂


கட்டுரையின் இறுதியில் நமது சொசைட்டியின் தளத்தை குறிப்பிட்டதால், பலரும் நம் தளத்திற்கு வந்து சேர்ந்து, பல்வேறு பிற தலைப்புகளையும் பார்த்து, படித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் தினமும் 25 வந்தார்கள் என்றால், இப்பொழுது அதன் எண்ணிக்கை 50க்கு மேல் வருகிறார்கள் என்பது உற்சாகமான செய்தி.


எழுதியது எப்படி என்பதை உறுப்பினர்கள் அறிவது அவசியம் என கருதுகிறேன். நாளை இன்னொருவர் கூட வேறு ஒரு தலைப்பில் இதே போல தொடர்ந்து எழுதலாம்.


கற்றதும், பெற்றதும்


இந்த தொடரில் ஒவ்வொரு தலைப்பில் இருந்தும் கற்றதும், பெற்றதும் அதிகம்.    பல அம்சங்கள் புதிதாக இருந்தன. புதிய மேலாண்மை சிந்தனைகள் நிறைய வளர்ச்சியடைந்து வருகிறது என தெரிய வருகிறது என அறிய முடிந்தது.  நீங்களும் இதை உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


துவங்கியது ஏன்?


AI கடந்த பத்து ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. பலரும் அதை தன் அறிவின், தொழிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் நாமும்  கற்றுக்கொண்டு பகிர்ந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் தான்.


கட்டுரைகளின் தலைப்புகள்


வரி ஆலோசகர் தன்னை வளர்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என கேட்டால், இணையமே குறிப்பிட்ட அம்சங்களைப் பட்டியலிட்டு தந்துவிடுகிறது.  மேலும் நமக்கு இருக்கும் அனுபவங்கள், அதில் இருந்து எழும் கேள்விகள், சக வரி ஆலோசகர்களுடன் உரையாடியதன் வழியாக எழும் கேள்விகள்,   துறை சார்ந்த நிபுணர்களின் பேட்டிகளை கேட்கும் பொழுது அவர்கள் சுட்டிக் காட்டும் அம்சங்கள் என  தலைப்புகளை தேர்ந்தெடுத்தேன்.


கட்டுரையின் வடிவம்


ஒரு தலைப்பு கொடுத்தால், சாட் ஜிபிடி கட கடவென நிமிடங்களில் எழுதி தந்துவிடுகிறது.  அது ஒரு பெரிய அறிவு பூதம்.  அதை வேலை வாங்க தெரிந்திருக்கவேண்டும் என்பதில் தான் நமது திறன் அடங்கியிருக்கிறது.


ஒரு தலைப்பை கொடுத்து,  துறை சார்ந்த நிபுணர்களின் மேற்கோள்களை பொருத்தமான இடத்தில் இணை, இந்த உதாரணம் வேண்டாம், வேறு கொடு.  என பல்வேறு வேண்டுதல்கள் மூலம் தான் அந்த கட்டுரை ஒரு நல்ல வடிவத்திற்கு வருகிறது.


அது போல தமிழர்கள் சாட் ஜிபிடி போன்ற AIயிடம் கேள்விகள் கேட்கும் பொழுது, சரளமாக ஆங்கில கலப்பு செய்கிறார்கள். ஆகையால் அதுவும் இப்படி கொடுத்தால் தான் பிடிக்கும் என சரளமாய் ஆங்கிலத்தை கலந்து அடித்து தருகிறது.  


95% புழக்க தமிழில் புரிகிறபடி கொடு! என்றால் அதன் ஆற்றலில் அதுவும் சாத்தியமாகிறது.  இது குறித்து அதனிடமே உரையாடிய பொழுது, மொழிப்பற்றாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் என வெகு சிலரே நாம் கேட்பது போல கேட்கிறார்கள் என்கிறது. பெரும்பாலும் ஆங்கில கலப்பு தான் கேட்கிறார்கள் எனவும் சொல்கிறது. சோகம்.


சாட் ஜிபிடி போன்ற AI


சாட் ஜிபிடி உதவியுடன் என துவக்கத்தில் கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  அதற்கு பிறகு Co pilot, Grok, Claude, Perplextity என எல்லாவற்றையும் கலந்து கலந்து பயன்படுத்திக்கொண்டிருந்தேன். நான் பல இடங்களில் சில அம்சங்களை இணைத்தேன். ஆகையால் சாட் ஜிபிடி உதவியுடன் என்பதை போடாமல் விட்டுவிட்டேன்.  இதில் ஒவ்வொரு AI க்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது.  ஆற்றல் இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.


முதலில் வந்த ஒரு வார கட்டுரைகளையும், இறுதி வாரத்தில் வந்த ஒரு வார கட்டுரைகளையும் ஒப்பிட்டு பாருங்கள். கற்றுக்கொள்ள, கற்றுக்கொள்ள அடுத்தடுத்த நிலைகளை வந்தடைந்திருக்கிறோம் என்பதை நாம் அறிய முடியும்.


இந்த 44 நாட்களில், AIயை பயன்படுத்தி ஜி.எஸ்.டி குறித்த கட்டுரைகளையும் அவ்வப்பொழுது குழுவில் பகிர்ந்து வந்தேன்.  அந்த கட்டுரைகள் எல்லாம் நல்ல தமிழில், புரிகிறபடி தெளிவாக கொடுத்ததற்கு நாம் கற்றுக்கொண்ட தொழில்நுட்பம் தான் காரணம்.


இறுதியாக…


வேலை நெருக்கடியில் நமது உறுப்பினர்கள் இந்த கட்டுரைகளை எல்லாம் விட்டு விட்டு வாசித்தார்கள் என அவர்களே சொன்னார்கள்.  நேரம் கிடைக்கும் பொழுது எல்லா கட்டுரைகளும் நமது தளத்தில் Consultant, GST Professionals என்ற தலைப்பை கிளிக் செய்தால், வரிசையாக எல்லா  கட்டுரைகளையும் பார்க்கமுடியும்.


புதிய முயற்சிகளை எப்பொழுதும் உற்சாகப்படுத்தும் நமது தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் இந்த தொடருக்கும் கொடுத்த உற்சாகம் மறக்க முடியாதது. அவருக்கு நன்றி.


இந்த தொடர் குறித்த உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். பாராட்டு என்றாலும் சரி. விமர்சனமாக என்றாலும் சரி.  குழுவில் இல்லையென்றாலும், தனிப்பட்ட முறையில் தெரிவியுங்கள். அடுத்து, சில நாட்கள், சில மாதங்கள் கழித்து நாம் புதிதாக எழுதுவதற்கு நிச்சயம் பயன்படும்.


நன்றி.


-          - இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721


தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/



No comments:

Post a Comment