Wednesday, December 3, 2025

GSTPS : நமது 46வது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!


அனைவருக்கும்,

 

வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (29/11/2025)  நடைபெற்ற நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் சொசைட்டி தனது உறுப்பினர்களுக்கு வழங்குவது போல,  பிறக்க போகும் உற்சாகமான புத்தாண்டுக்கு பரிசாக ஒரு அழகான நாட்குறிப்பும், மாதக்காலண்டர்கள் இரண்டும் வழங்கப்பட்டன.

 

தமிழ்த்தாய் வணக்கத்துடன் கூட்டம் துவங்கியது. டிட்வா புயல் தாக்கம் மாநிலம் முழுவதும் இருந்தது.  அதனால், கூட்டம் நடக்குமா என ஒரு ஓரத்தில் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் டிட்வா புயலே இரக்கப்பட்டு, கூட்டத்தை அறிவித்துவிட்டார்கள். நடத்திவிட்டு போகிறார்கள் என நேற்று காலையில் ஆமை வேகத்தில் வங்க கடலில் நகரத்துவங்கியது.  நேற்று திரளாக உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

 

முதல் நாட்குறிப்பை உறுப்பினர் திரு கருப்பையா அவர்கள் வெளியிட வழக்கறிஞர் திரு. சக்கரவர்த்தி பெற்றுக்கொண்டார்.   நாட்குறிப்பை தணிக்கையாளர் ஓம்பிராகாஷ் அவர்கள் வெளியிட திருமதி பொன்மணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.  மற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாட்குறிப்பும், காலண்டர்களும் வழங்கப்பட்டன.

 

நமது சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தலைவர் கோரினார்.

 

முக்கிய அனுபவங்களை பகிர்தல்

 

ஓவ்வொருவரும் தன் தொழிலில் நிறைய அனுபவங்களை பெற்றுவருகிறோம். அதை உறுப்பினர்களோடும் பகிர்ந்து வருகிறோம். அந்த அனுபவ அறிவு எல்லோருக்கும் அவசியமானது. ஆகையால் ஜூம் கூட்டம் நடத்தும் பொழுது, 10.30 முதல் 10.45 பகிரலாம் என திரு. சாதிக் ஆலோசனையாக பகிர்ந்தார்.

என்னென்ன தலைப்புகளில் கூட்டம் நடத்தலாம் என ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

 

ஜூம் கூட்டம் பற்றிய அறிவு

 

கடந்த வாரம் திரு. சாதிக் முதன்முதலாக ஜூம் கூட்டத்தில் பேசினார். அதில் சில தொழில்நுட்பத்தை அறியவேண்டியதால், கொஞ்சம் தாமதமானது. அனைவருகும் தெரியும் விதமாக ஒரு வகுப்பாகவே ஜூம் கூட்டம் நடத்தலாம் என திரு. கைலாச மூர்த்தி ஆலோசனையாக தெரிவித்தார். நல்ல ஆலோசனை.

 

சின்ன சின்ன தலைப்புகள்

 

ஜி.எஸ்.டியில் நாம் தொடர்ந்து எல்லா  தலைப்புகளையும் வரிசையாக எடுத்துவிட்டோம்.   ஆகையால் தான் புதிய தலைப்புகள் கேட்கிறோம் என திரு. பாலாஜி அருணாச்சலம் தெரிவித்தார்.

 

திரு. பத்ரேசன் அவர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் சின்ன சின்ன தலைப்புகளாக பிரித்து எடுத்தால், எல்லோருக்கும் பயன்படும் என ஆலோசனையாக தெரிவித்தார்.

 

இப்பொழுது நமது உறுப்பினர்கள் 136 பேர். பல தலைப்புகள் கவர் செய்யும் பொழுது நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை 75க்குள் தான். ஆகையால் மீண்டும் ஒரு சுற்று வந்தால் தப்பில்லை என திரு. முனியசாமி தெரிவித்தார்.

 

மின்னஞ்சல் குறித்த ஒரு கூட்டம்

 

மின்னஞ்சலில் நாம் தினசரி குறைந்தப்பட்சம்  நேரம் செலவழித்து வருகிறோம். அது குறித்து எளிதாக கையாள வகுப்பு எடுக்கிறேன் என திரு. ரமேஷ் அவர்கள் முன்வந்தார். மகிழ்ச்சி.

 

சந்தா & நிதி அதிகரிப்பு

 

நமது சொசைட்டி துவங்கிய பொழுது, வருடத்திற்கு ரூ. 2400 சந்தா என அறிவித்தோம்.   அதன்பிறகு ரூ. 2000 என மாற்றிவிட்டோம்.  கடந்த ஆறு வருடங்களில் பணமதிப்பு குறைந்ததை வைத்து கணக்குப் பார்த்தாலே ரூ. 1500 தான் இப்போதைய மதிப்பு. ஆகையால் சந்தாவை அதிகரிக்கலாம்.  இன்னும் நாம் செய்ய நினைக்கிற பல்வேறு விசயங்களுக்கு அந்த நிதியை பயன்படுத்தலாம் எனவும், வெளியே பல்வேறு அமைப்புகளில் சந்தா நம்மை விட இரண்டு மடங்கு, நான்கு மடங்கு இருப்பதையும் உதாரணமாக தெரிவித்தார் திரு. விக்கி.

 

சந்தா அதிகரிப்பு சில உறுப்பினர்களுக்கு சிரமமாகலாம். மாற்றாக ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களுடைய தொழில்முறை நண்பர்களை சொசைட்டிக்கு அறிமுகப்படுத்தினால் உறுப்பினர்களும் அதிகரிப்பார்கள்.  சந்தாவும் சேரும் என Dr. வில்லியப்பன் ஆலோசனையாக தெரிவித்தார்.

 

இப்படி பல விதத்திலும் பல உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துகளை ஆரோக்கியமாக பகிர்ந்துகொண்டார்கள். சந்தாவை அதிகப்படுத்தலாமா, கூடுதலாக தன் விருப்பத்திற்கு உறுப்பினர்கள் நிதி தருவதை அனுமதிக்கலாமா என நிர்வாகிகள் விவாதித்து அறிவிப்பதாக தெரிவித்தனர்.

 

உறுப்பினர்களின் நலன்களுக்காக ஒரு குழு காப்பீடு முன்பு எடுக்கப்பட்டதாக தலைவர் தெரிவித்தார்.  இப்பொழுதும் அது தொடர்கிறதா என தெரியவில்லை. அது தொடர்வது நல்லது.  ஒரு இழப்பு ஏற்படும் பொழுது சொசைட்டி சார்பில் பரிசீலியுங்கள் என திரு. முனியசாமி கேட்டுக்கொண்டார்.

 

உறுப்பினர்கள் பேச்சாளர்களாக வளரவேண்டும்.

 

நமது உறுப்பினர்கள் வகுப்பு எடுக்க முன்வரவேண்டும். ஆற்றல் உள்ளவர்கள் முன்வரவேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு நாங்கள் தேவையானவற்றை தருகிறோம்.  வாருங்கள் என தலைவர் கேட்டுக்கொண்டார்.

 

GSTR9, GSTR9C குறித்த வகுப்பு

 

31 டிசம்பர் 2025  இறுதி தேதியாக இருப்பதால், இப்பொழுது நமது உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டிருப்பார்கள். ஆகையால் அது தொடர்பாக ஜூம் கூட்டம் எடுத்தால் நல்லது என பரிசீலிக்கப்பட்டது. விரைவில் எடுக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

 

புதிய தொழிலாளர் கொள்கை

 

மத்திய அரசு புதிய தொழிலாளர் கொள்கையை அறிவித்துள்ளது.   மாநிலங்கள் அதற்கான விதிமுறைகளை அமைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆகையால் மாநிலங்கள் அதற்கான வேலைகளை செய்துவருகிறது.  நேற்று நமது மதிப்பிற்குரிய கோவையை சார்ந்த திரு. பெருமாள் அவர்கள் பேசப்போவதாக ஒரு பேனர் பார்த்தேன். அவரை அழைத்து  ஒரு ஜூம் கூட்டத்தில் பேச சொல்லலாம் என ஒரு ஆலோசனையாக திரு. முனியசாமி தெரிவித்தார்.

 

நாட்குறிப்பில் (Diary)  விளம்பரம்

 

இந்தமுறை நமது டைரியில் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன என நிர்வாகிகள் அறிவித்தார்கள்.  அதில் உறுப்பினர்கள் திரு. ரமேஷ், திரு. சக்கரவர்த்தி, திரு. நீலகண்டன், திரு. சொக்கலிங்கம் அவர்கள் என இன்னும் சிலர் விளம்பரம் தந்தார்கள்.  மேலும் வழக்கமாக நாம் பெறும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் பெற்றோம்.  அடுத்தாண்டு உறுப்பினர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என திரு. செல்வராஜ் தெரிவித்தார்.

 

நாட்குறிப்பு & காலண்டர்கள்

 

நாட்குறிப்பில் நமது வரித்துறை சம்பந்தமான ரிட்டல் தாக்கல் செய்யும் தேதி நினைவூட்டல்களை பதியலாம் என நினைத்தோம். அதற்கான செலவுகள் அதிகமாய் இருந்தன. வருங்காலத்தில் அதை வேறுவிதமாக யோசித்து செய்யலாம்.  மற்றபடி, இந்த நாட்குறிப்பு, காலண்டர்கள் தயாரிப்பு, கொண்டு வந்தது, விநியோகித்தது என பல நிலையில் நமது நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்களித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் செல்வராஜ்.

 

இந்த நேரடிக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத உறுப்பினர்கள் தங்களுக்கான மாதக்காலண்டர்கள், நாட்குறிப்பை பெற்றுக்கொள்ள செயற்குழு உறுப்பினர் திரு. செல்வராஜ் அவர்களை தொடர்புகொள்ளுங்கள். அவருடைய எண் : 9791046555

 

இடைவேளையில் சுவையான அல்வா, பாவ் பாஜி சூடான காபி, எல்லாம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.  நமது உறுப்பினர் திரு. சந்திரசேகர் தனது மகன் ஹாக்கி ஐஸ் கேட்டிங் பிரிவில் தேசிய அளவில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் டிசம்பரில் விசாகப்பட்டினத்தில் விளையாட இருக்கிறார்.  அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஸ்நாக்ஸ் சம்பந்தமான மொத்த செலவுகளையும் ஏற்றுக்கொண்டார் என்பது மகிழ்ச்சியான செய்தி.  அவர் மகன் திறம்பட விளையாட வாழத்துவோம்.

 

இது ஒரு நல்ல பண்பாடு. உறுப்பினர்கள் தங்களுடைய குடும்பத்தின் மகிழ்வான நிகழ்வுகளை உறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்வது. இதை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம்.

 

நிகழ்வின் அழகான தருணங்களை நமது உறுப்பினர் விக்கி அழகாக படம்பிடித்து குழுவில் பகிர்ந்தார்.  அவருக்கு நன்றி.

 

இரண்டாவ்து நிகழ்வாக AI தொழில்நுட்பம் குறித்தான அறிமுகத்தை ஒரு மணி நேரம் பிபிடி கொண்டு திரு. முனியசாமி அவர்கள் விளக்கினார்.

 

"AI தொழில்நுட்பம் புதிதல்ல! இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே ஒரு விஞ்ஞானி  விதைப் போட்டு, பின்பு வளர்ந்துகணிப்பொறி வளர்ந்து, அதில் நிறைய தரவுகள் (Data) வளர்ந்துகடந்த 12 ஆண்டுகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வேகத்துடனும், துல்லியமாகவும் வளர்ந்து நிற்கிறது.

 

AI –  விவசாயம், தொழிற்துறை, சுகாதாரம், கல்வி, வரித்துறை என சகல துறைகளிலும் நுழைந்துவிட்டது. உலகம் டிரில்லியன்  டாலர்களை AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கிறதுஅதன் பாதையின் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்து சில வருடங்களாகிவிட்டது.

 

குறிப்பாக, AI வரித்துறையில் Faceless  Assessment, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் கண்காணிப்பு என பயன்படுத்தப்படுகிறது.  11000 கோடி இதன்மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக அரசே வெளிப்படையாக அறிவித்துள்ளதுஇனி துறை சார்ந்த கேள்விகளும்/தணிக்கைகளும் என்பது காலங்கடந்ததாக இல்லாமல், உடனுக்குடன் இருக்கப்போகிறது

 

AI துணையுடன்மெல்ல மெல்ல GSTR1, 3B எல்லாம் ஆட்டோமேசனாக (Automation) மாறப்போகிறது. பணத்தை செலுத்துவது மட்டுமே வேலையாக இருக்கப்போகிறது.  

 

அப்பொழுது வரி ஆலோசகரான நமக்கான வேலை என்பது, அவர்கள் AI மூலமாக விரைவாக கேட்கும் கேள்விகளுக்கும், தணிக்கைகளுக்கும் மட்டும் வேலை செய்யவேண்டியது மட்டுமாகத்தான் இருக்கப்போகிறது..  அதற்கு நிறுவனங்களின் ஆவணங்களை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

 

துறை சார்ந்த அறிவு என்பது மேலோட்டமாக இல்லாமல், ஆழமாகவும், மிகவும் தெளிவாகவும் இருப்பது அவசியம்மெதுவாக அல்ல விரைவாக வேலை செய்வதும் அவசியம்.


ஆக இந்த திசை வழியில் நாம் வளரவில்லை என்றால்நாம் காலத்தின் போக்கில் பின் தள்ளப்பட்டுவிடுவோம் என்பது தான் கசப்பான உண்மை.


அதற்கு AIயின் உதவியை கொண்டு, நம் சட்ட அறிவை வளர்த்துக்கொள்ள பயன்படுத்துவோம்நமது அன்றாட வேலைகளையும் விரைவாக செய்வதற்கு பயன்படுத்துவோம்.


AI யின் துறை சார்ந்தவர்கள் AI இப்பொழுது காலவதியாகிவிட்டது. அடுத்த நிலைக்கு Artificial General Intelligence நகர்ந்துவிட்டது. அடுத்து Artificial Super intelligence ஒரு சில ஆண்டுகளில் நகர்ந்துவிடும் என அதன் வேகத்தை கணித்து சொல்கிறார்கள்.

 

கால மாற்றத்திற்கேற்ப நாம் மாறுவது அவசியம். இதை கவனத்தில் கொள்ளுங்கள்

 

இந்த பின்னணியின் புரிதலில் இருந்து  இங்கு நான் பகிர்ந்துள்ள பிபிடியை பாருங்கள். நன்றாக புரியும். அதன் தீவிரத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.

 

நன்றி." என தன் உரையை  முடித்தார்.

 

-    - GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment