Wednesday, December 3, 2025

DeepSeek AI –ஒரு வரி ஆலோசகருக்கு எப்படி பயன்படும்?

 


 1. 
DeepSeek என்றால் என்ன?

 

DeepSeek என்பது *சீனாவின் புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு மாடல்*.
இது மிக வேகமாக செயல்படும், அதிக தகவலை நுட்பமாக புரிந்து கொள்ளும், செலவு குறைவாக பயன்படுத்தக்கூடிய ஒரு பெரிய மொழி மாடல்.  *மற்ற AI மாடல்களை விட கணக்கீடு, probability, data reasoning போன்ற வேலைகளில் இது பலம் என்று சொல்லலாம்.*

 

2. DeepSeek பயன்படுத்தப்படும் முக்கிய துறைகள்

 

      (a)     தரவு பகுப்பாய்வு  - பெரிய அளவு தகவலை சில நொடிகளில் பிரித்து, சட்டங்கள், விதிமுறைகள், எண்ணிக்கை அடிப்படையிலான முடிவுகளை சொல்லி தரும்.

 

(b) நிரலாக்க உதவி - கோடு எழுதுதல், பிழை திருத்துதல், மென்பொருள் வடிவமைப்பு பரிந்துரைகள் போன்றவற்றில் பலம் காட்டுகிறது.

 

(c) மொழி புரிதல் - தேவையான தகவலை எளிமையான மொழியில் அமைத்து கொடுக்க முடியும். 

 

(d) தானியங்கி வேலைகள் - PDF வாசித்தல், எக்சல் கணக்கீடு, தரவு ஒப்பீடு, சுருக்கம், அறிக்கை உருவாக்குதல் போன்ற repetitive வேலைகளில் பயன்படுத்தலாம்.

 

3. ஒரு வரி ஆலோசகருக்கு DeepSeek எப்படி உதவும்?

 

(a) சட்ட விளக்கங்களை விரைவாகச் சொல்லித்தரும்  - GST, Income Tax, ROC போன்ற சட்டப் பிரிவுகளில் வரும் நீளமான ஆவணங்களை DeepSeek உடனடியாக சுருக்கி, பயன்படும் அம்சங்களை மட்டும் எடுத்து தரும்.

 

     (b)   நோட்டிசுக்கு பதில் தயாரித்தல்

 

  • GSTR-2A/2B முரண்பாடு
  • ITC மறுப்பு
  • RCM பிரச்சினைகள்
  • உண்மை விற்பனை உறுதி (fake billing)
    இவற்றில் logic–ஆக, புள்ளிப்புள்ளியாக பதில் மாதிரி உருவாக்கி தர முடியும்.

 

(c) கணக்குப் பிழையை கண்டுபிடித்தல்

 


எக்சல் ஷீட்டுகளை வாசித்து

  • ITC vs Liability
  • Purchase mismatch
  • Turnover variation
    இவற்றை ஒப்பிட்டு பிழைகளை துல்லியமாகச் சொல்வது DeepSeek-ன் பலம்.

 

(d) வரித்துறைக்கு சுருக்கமான விளக்கப்படங்கள்

உங்களுக்கு வாடிக்கையாளரிடம் சொல்ல வேண்டிய சுருக்கமான குறிப்புகள், presentation-style bullet points, மாதிரி formats – இவற்றையும் உருவாக்க முடியும்.

 

(e) முடிவெடுக்க உதவும் பகுப்பாய்வு

 

  • எந்த நடவடிக்கை குறைவான அபாயம்?
  • எந்த வழி எளிது?
  • எந்த ஆதாரம் litigation-ல் நிற்குமா?

 

இந்த மாதிரி நடைமுறைக் கருத்துக்களை logic–ஆகப் பகுப்பாய்வு செய்து கொடுக்கும்.


-              இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

 

No comments:

Post a Comment