NotebookLM என்பது Google உருவாக்கிய ஒரு AI-ஆधாரமான ஆய்வு மற்றும் குறிப்பெடுக்கும் (Research & Note-Taking) தளம். இதன் முக்கிய நோக்கம் —
நீங்கள் பதிவேற்றும் ஆவணங்களையே ஆதாரமாகக் கொண்டு, அதனைப்
புரிந்து, சுருக்கி, விளக்கி, பகுப்பாய்வு செய்து,
உங்களுக்கு தெளிவான பதில்
வழங்குவது.
சாதாரண AI விட மிக முக்கியமான வித்தியாசம் என்ன?
👉 NotebookLM உங்கள்
ஆவணங்களையே மட்டுமே reference ஆகப் பயன்படுத்தும்.
அதாவது,
நீங்கள் கொடுத்த PDF / DOC / Website ல் உள்ள
தகவல்களிலிருந்து மட்டும் பதில்
உருவாக்கும்.
இது என்ன செய்ய முடியும்?
1)
ஆவணங்களை தானாகச் சுருக்கம் செய்யும்
நீங்கள் 200 பக்க
circular கொடுத்தாலும்,
சில
விநாடிகளில் அதன்
சாரத்தைத் தரும்.
2)
சிக்கலான தகவலை எளிமைப்படுத்தும்
"இந்த guideline-னுடைய நோக்கம் என்ன?"
"இதன்
முக்கிய rule changes என்ன?"
என்று
கேட்கலாம்.
3)
ஆவணங்களுக்குள் தேட முடியும்
PDF ல் buried ஆயிரம் தகவல்கள் இருந்தாலும்,
எந்த
வரியில் என்ன
இருக்கிறது என்று
பறக்கும் பறவையைப் போல
தேடி
சொல்லிவிடும்.
4)
பல ஆவணங்களையும் ஒன்றாக்கி பகுப்பாய்வு செய்யும்
GST Notification + Circular + News
Article + High Court Order
இவற்றைப் பற்றி
ஒரே
நேரத்தில் ஒப்பிட்டு சொல்ல
முடியும்.
5)
உங்களுக்கே தனிப்பட்ட research assistant போன்றது
நீங்கள் கொடுக்கும் தகவலிலிருந்துதான் வேலை
செய்பதால்
‘hallucination’ குறைவாக இருக்கும்.
ஒரு வரி ஆலோசகர் NotebookLM ஐ எப்படி பயன்படுத்தலாம்?
1)
GST Notifications / Circulars படிக்க
- ஒரு புதிய
Notification வந்தால் PDF upload செய்யுங்கள்
- "இதன் முக்கிய மாற்றங்கள் என்ன?"
- "இந்த notification யாருக்கு பொருந்தும்?"
- "சுருக்கமாக 10 bullet points"
இவற்றைப் கேட்டால் உடனே கிடைக்கும்.
2)
Case Laws Analyse செய்ய
Judgement upload செய்தால்:
- முக்கிய
facts
- issue involved
- court reasoning
- outcome
- practical impact
எல்லாமே neatly தரும்.
3)
Return Filing Guidance உருவாக்க
நீங்கள் கிளையண்ட் data, mail guidelines upload செய்தால்:
- missing data என்ன
- next steps
- due dates
- கவனிக்க வேண்டிய புள்ளிகள்
இவற்றைத் தானாகக் கண்டுபிடித்து சொல்லும்.
4)
Lecture / Training Material தயாரிக்க
GSTPS போன்ற training sessions நடத்தும் போது:
- நீங்கள்
upload செய்த study materials அடிப்படையில்
PPT Outline
Handout
Quiz questions
Class notes
இவற்றையெல்லாம் உருவாக்கும்.
5)
Client Explanation Drafts
கிளையண்ட் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை
அவருடைய case papers அடிப்படையில் உருவாக்கலாம்.
6)
Compliance Checklist
Return filing / registration /
revocation / refund
எதை
upload செய்தாலும்,
“Checklist format-ஆ
Start to End Steps” கொடுக்க சொல்லலாம்.
வரி ஆலோசகருக்கு இது தரும் நன்மைகள்
✓ நேர சேமிப்பு
200 பக்க circular ஐ 2 நிமிடத்தில் புரிந்துகொள்ளலாம்.
✓ துல்லியமான வேலை
நீங்கள் கொடுத்த ஆவணத்திலிருந்து மட்டும் பதில்
வரும்.
✓ தவறுகள் குறைவு
Manual தேடல், page-by-page reading தேவையில்லை.
✓ உள் அலுவலக அமைப்பு மேம்பாடு
Junior staff-க்கு SOP, notes உருவாக்க மிகவும் உதவும்.
✓ கற்றல் வேகம்
புதிய
system, புதுப்
பிரிவு,
புதுப்
procedure
எல்லாம் எளிதாகப் புரிய
வைக்கும்.
சுருக்கமாக…
NotebookLM = உங்களுக்கே
தனிப்பட்ட, ஆவணங்களின் மீது மட்டும் செயல்படும் AI வரி உதவியாளர். ஒரு
வரி
ஆலோசகருக்கு இது
“உடனடி ஆய்வு + துல்லியமான
விளக்கம் + கூர்மையான சுருக்கம்”
என்ற
நன்மைகளை தரும்.
- - இரா. முனியசாமி
வரி ஆலோசகர்
GSTPS உறுப்பினர்
📞 95512 91721


No comments:
Post a Comment