Monday, May 25, 2026

Prompt என்றால்? ஒரு சுமாரான promptக்கும், நல்ல Promptக்கும் என்ன வித்தியாசம்?

 



Prompt என்றால்?


👉 AI-க்கு (Artificial Intelligence) நாம் கொடுக்கும் கட்டளை / கேள்வி / விளக்கம் ஆகும்.


“தெளிவாக கேட்கும் கேள்வியே தெளிவான பதிலை உருவாக்கும்” — Andrew Ng


சுமாரான Prompt :


ஒரு GST அலுவலக படம் உருவாக்கு.”

👉 முடிவு என்ன வரும் தெரியுமா?
மூன்று பேர் லேப்டாப் பார்த்துக்கொண்டு,
ஒருவர் சிரித்துக்கொண்டு,
பின்னாலே காரணமே இல்லாமல் graph…
மேசையில் coffee cup…
அதுவும் “freepik corporate people” மாதிரி முகங்கள். 😄

 

Good Prompt :

சென்னையில் இயங்கும் ஒரு வரி ஆலோசகர் அலுவலகம்.
மேசையில் GST கோப்புகள், notice papers, dual monitor setup.
ஒருவர் client call-ல் பதட்டமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
மற்றொருவர் reconciliation sheet பார்க்க வேண்டும்.
Corporate blue + white theme. Realistic lighting.

தமிழ் பெயர்ப் பலகை: ‘GST Professionals Society’.”

 

👉 இப்போது வரும் படம்?

இது நம்ம ஆபீஸ்ல எடுத்த photoவா?” என்று உறுப்பினர்களே கேட்பார்கள். 😄

 

சுருக்கமாக சொன்னால்:

 

சுமாரான Prompt :   சாப்பாடு வேணும்.”

 

Good Prompt :    சூடான நெய் தோசை, கெட்டிச் சட்னி, மிதமான கார சாம்பார், மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லிஸ்டீல் தட்டில் வேண்டும்.” 😄

 

-          -          இரா. முனியசாமி

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

No comments:

Post a Comment