நமது 50வது நேரடிக்கூட்டம் திரளான உறுப்பினர்களுடன் சிறப்பாக நடைபெற்றது!
தமிழ்த்தாய்
வாழ்த்துடன் கூட்டம் இனிதே துவங்கியது.
தலைவர் SS உரை – “நமக்கு நாமே ஆசிரியர்”
”ஜி.எஸ்.டி.
அறிமுகமாகி, 9 ஆண்டுகளை கடந்துவிட்டோம். எல்லா தலைப்புகளிலும் நாம் வகுப்பு நடத்தியிருக்கிறோம்.
ஆகையால், இனியும் வெளியில் இருந்து பேச்சாளர்களை அழைப்பதை விட சட்டம் குறித்த புரிதலை இன்னும் செழுமைப்படுத்த,
கூர்மையாக்க, அடுத்தக்கட்டத்திற்கு உறுப்பினர்களை கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக
தான் “நமக்கு நாமே ஆசிரியர்” திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அதில் முதலாவதாக முன்வந்த உறுப்பினர் திரு. ஜெயப்பிரகாசை
வாழ்த்தி வரவேற்போம் என தலைவர் துவங்கி வைத்தார்.
திரு. ஜெய் Tally லிருந்து டேட்டா, GSTR1, 2B, 3B. 9 என எல்லாவற்றையும் ஒரு வருடத்திற்கு டேட்டாவை எடுத்து
ஒருங்கிணைத்து எவ்வளவு வித்தியாசம் என்பதை கண்டுபிடிக்கலாம் என விளக்கினார்.
நமது உறுப்பினர்கள்
ஒவ்வொருவரும் அவரவர் தன்மைக்கேற்ப இந்த Excel ஐ பயன்படுத்தி ஒழுங்கமைவு செய்து பயன்படுத்துகிறோம். திரு. ஜெய் பயன்படுத்தியது இன்னும் தெளிவான
Format யாக இருந்தது. குழுவில் பகிர்ந்துள்ளார்.
அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Tally, ஜி.எஸ்.டி
ரிட்டன்ஸ், வருமான வரி தாக்கல் செய்த கணக்குகளில் எப்பொழுது முரண்பாடு இல்லாத மாதிரி
வைத்துக்கொள்வது சமகாலத்தில் மிக அவசியமாகிறது. நேரமின்மை, நெருக்கடி கருதி பிறகு பார்த்துக்கொள்ளலாம்
என யார் கருதுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நோட்டிஸ் நிச்சயம் என்பது சமகால நிலைமையாக இருக்கிறது.. அதற்கு பதிலளிப்பது
என்பது கூடுதல் சுமையாகிவிடுகிறது. ஆகையால்,
எங்கும் எப்பொழுதும் துல்லியத்துடன் வேலை செய்வது மிக அவசியமாகிறது.
நேற்று கடுமையான
வெயில். இருப்பினும் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Dr. வில்லியப்பன் அவர்கள் ஜி.எஸ்.டி ரிட்டனில் சமீபத்தில் எதிர்கொண்ட இரண்டு சந்தேகங்களை முன்வைத்தார். பலரும் அதில் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். நேரடிக் கூட்டங்களின் பலனே இப்படிப்பட்ட கருத்துரையாடல்கள் தான்.
இடைவேளையில்…
கடுமையான
வெயிலில் வந்தவர்களுக்கு உள்ளே வந்ததும், குளிர்ச்சியான மோர், இடைவேளையில், சமோசா,
பஜ்ஜி, ஆவின் ஜூஸ், காபி என எல்லாம் அருமையாக இருந்தது. இன்றைய ஸ்நாக்ஸ் செலவுகளை உறுப்பினர்
திரு. சாதிக் பாட்சா ஏற்றுக்கொண்டார் என நிர்வாகிகள் தெரிவித்தார்கள். என்ன விசேசம் என சொல்லவில்லை. விசேசம் இருந்தால் தான் பகிர்ந்துகொள்ள வேண்டுமா
என்ன! நன்றி திரு. சாதிக்பாட்சா.
TDS மாற்றங்கள் என்னென்ன?
இரண்டாவது
அமர்வில், செயலர் திரு. செண்பகம் அவர்கள் வருமான வரியில் குறிப்பாக TDS யில் செய்த
மாற்றங்கள் என்னென்ன என்பதை விரிவாக விளக்கினார்.
தவறுதலாக எதை செய்துவிடக்கூடாது என்பதையும் விளக்கினார். சந்தேகங்களுக்கும்
பதில் அளித்தார்.
ஆண்டு விழா கொண்டாட்ட பயணம்
திரு. பாலாஜி
இந்த முறை ஆண்டு விழா பயணமாக எங்கு செல்லலாம் என ஆலோசனையாக கேட்டார். கடந்த வருடங்களில் காலை சென்று மாலை என ஒரு நாள் பயணமாக போய் திரும்பியுள்ளோம்.
கடந்த ஆண்டு காலையில் சென்று, இரவு தங்கி அடுத்த நாள் காலையில் திரும்பியுள்ளோம். அது
ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
உறுப்பினர்கள்
சிலர் இரண்டு நாள் பயணமாக ஏலகிரி, ஏற்காடு செல்லலாம் என உற்சாகமாக தெரிவித்தனர். இரண்டு நாள் பயணம் என்றால், ரயிலிலோ பேருந்திலோ
செல்லலாம். ரூ. 5000 வரை ஆகலாம் என சொன்னதும், உடனே திரு. சந்திரசேகர் பணத்தை கொடுக்க
தயாராகிவிட்டார்.
பயணங்கள்
எல்லோருக்கும் அவசியம். வரி ஆலோசகர்கள் கணக்குகளோடு
மல்லுக்கட்டுகிறவர்கள். ஆகையால் மற்றவர்களை விட இன்னும் அவசியம். ஜூலை, ஆகஸ்டில் வருமான வரி தாக்கலில் பரபரவென இருப்போம்.
ஆகையால், ஜூன் நாலாவது வாரத்தில், சனி, ஞாயிறு திட்டமிடலாம் என தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக
விசாரித்து, குழுவில் பகிர்கிறோம் என தெரிவித்தார். செல்லும் இடத்தை முடிவு செய்து,
செலவுகளை கணக்கிட்டு எவ்வளவு பட்ஜெட் என சொல்லிவிட்டால், பணத்தை இரண்டு தவணைகளாக கூட
செலுத்துவதற்கு கூட உறுப்பினர்களிடம் கோரலாம். பலரும் வருவதற்கு ஏதுவாக இருக்கும்.
சந்தா
2026 –
2027 ஆண்டுக்கான சந்தாவை பலரும் செலுத்திவிட்டீர்கள். நன்றி. ஆனால் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அந்த பட்டியலை குழுவில் பகிர்கிறோம். செலுத்தாதவர்கள்
உடனே செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம் என திரு. பாலாஜி தெரிவித்தார்.
புதிய இடம்
”வழக்கமாக
சேம்பர் ஆப் காமர்சில் கூட்டங்கள் நடத்துவோம். அவர்கள் அந்த இடத்தை காலி செய்து, புதிய
இடத்திற்கு நகர்கிறார்கள். இன்னும் நாலைந்து மாதங்களில் அவர்களின் நிலைமை தெரியும். இந்த இடம் புதியது. பாரிஸ் பக்கம் தேடலாம் என நினைத்தோம். ஆனால் அங்கு
வாகனம் நிறுத்தும் இட பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது” என்றார்.
இந்த இடம்
நந்தனம் மெட்ரோவில் இருந்து அணுக கூடிய தூரமாக இருக்கிறது. இடமும் நன்றாக இருந்தது. ஆடியோ கொஞ்சம் கேட்பதற்கு சிரமமாக இருந்தது. அதை
சரிப்படுத்தினால் நல்லது என தோன்றியது.
உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த மெட்ரோ, பேருந்து வசதியுடன் 50 பேர் வரை கலந்துகொள்கிற இடமாக இருந்தால் குழுவில் தெரிவியுங்கள்.
புதிய உறுப்பினராக அறிமுகமான திரு. இராஜ்
”ஒரு ஏற்றுமதி & இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களுடைய புத்தகத்தை வாங்கிப் படித்தேன். அவரிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் விவாதித்தேன். அவருடைய அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சென்னையில் ஒரு சொசைட்டி வைத்து இயங்குகிறோம். நேரடிக் கூட்டத்திற்கு வருகைத் தாருங்கள் என தெரிவித்தார். வந்துவிட்டேன்.
இப்படி ஒரு சொசைட்டி இயங்குவது அருமையான விசயம். இதில் உறுப்பினராவதில் மிகவும் மகிழ்ச்சி என்றார். தன் தொழில் நிமித்தம் உள்ள சந்தேகத்தையும் கேட்டார். விளக்கம் அளித்தார்கள். விரைவில் நம்முடன் இணைவார். மகிழ்ச்சி.
கூட்டத்தின்
புகைப்படங்களை புதிய உறுப்பினர் திரு. பாலாஜி
அவர்கள் எடுத்து தந்தார். அவருக்கு நன்றி.
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கூட்டம் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
-
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987






No comments:
Post a Comment