Friday, January 9, 2026

வருங்கால வைப்பு நிதி : சில கேள்விகளும் பதில்களும்

 


“As per EPFO guidelines, it is mandatory to mark the Date of Exit (DOE) for a member within one month from the date of leaving from your establishment.” –  நிறுவனத்திற்கான பி.எப். தளத்தில் நுழைந்ததும், இந்த அறிவிப்பு கண்ணில்படுகிறது.

 

ஒரு EPF உறுப்பினர்  ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது, அந்த உறுப்பினரின் சேவை முடிந்தது என்பதை EPFO தளத்தில் சரியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையாகிறது. குறைந்தபட்சமாக, விடுப்பதிலிருந்து 1 மாதத்திற்குள் நிறுவனம் DOE- EPFO தளத்தில் அப்டேட் செய்ய வேண்டும்.

 

 விலகிய தேதி : ஏன் அவசியம்? யாருக்காக? என்ன பயன்?

 

ஒரு ஊழியர் நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது, அந்த விலகிய தேதியை (Date of Exit – DOE) EPFO பதிவுகளில் சரியாகப் பதிவு செய்வது நிறுவனத்தின் சட்டப்பூர்வப் பொறுப்பாகிறது.  இந்த விதிமுறையின் நோக்கம் வெறும் தொழில்நுட்ப நடைமுறை அல்ல. ஊழியரின் நிதி பாதுகாப்பும், சேவை பதிவுகளின் துல்லியமுமே இதன் மையக் காரணம்.

 

DOE ஏன் அவசியம் என்றால், PF நிதி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், பதிவு செய்யப்படாவிட்டால், ஊழியர் PF தொகையை பெறவும் அல்லது புதிய நிறுவனத்திற்கு மாற்றவும் விண்ணப்பமே திறக்காது. அதாவது, DOE இல்லாமல் PF நடைமுறை அடுத்த கட்டத்திற்கு செல்லாது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

 

மேலும், சில நேரங்களில் ஊழியர் வேலையை விட்ட பிறகும், தவறுதலாக அவரின் கணக்கில் பணம் செலுத்தப்படும் அபாயம் உண்டு. அதையும் தவிர்க்கும்.  DOE பதிவு செய்யப்பட்டவுடன், அந்த உறுப்பினர் இன்னும் பணியில் இல்லை என்பதை EPFO தெளிவாக அறிந்து கொள்கிறது. தேவையற்ற செலுத்தல்கள் தடுக்கப்படுகின்றன.

 

DOE சரியாக இருந்தால் மட்டுமே, பணியாளரின் வேலை செய்த வரலாறு, சேவை கால கணக்கீடு, ஓய்வூதிய சேவை கணக்கீடு, இவை அனைத்தும் துல்லியமாக அமையும்.

 

நியமனையாளர் DOE புதுப்பிக்கவில்லை என்றால், ஊழியர் EPFO புகார் வழியாக முறையிட முடியும். நிறுவனத்தின் நடவடிக்கைகள் EPFO மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் ஊழியரின் உரிமை பாதுகாக்கப்படுகிறது.

 

பணி விலகல் தேதி (DOE) எப்படி பதிவு செய்யப்படுகிறது?

 

EPFO நிறுவனத்தின் தளத்தில் உள்நுழைந்ததும்

  • “Member”
  • “Mark Exit”

அதில், விலகிய தேதி, விலகிய காரணம், பதிவு செய்யப்பட வேண்டும்.

DOE இரண்டு வகைப்படும்.

  • EPF DOE
  • EPS DOE

பணி விலகல் நாள்  - பொதுவாக இரண்டும் ஒரே தேதியாக இருக்கும்

EPF – நேபாளம் போன்ற வெளிநாட்டு தொழிலாளர்களை இணைக்க முடியுமா?

 


முடியும். சட்டப்படி இணைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது. இந்திய EPF சட்டத்தில், இந்திய குடியுரிமை இல்லாதவர் இந்திய நிறுவனத்தில் வேலை செய்தால், அவர் “International Worker” எனக் கருதப்படுகிறார். நேபாளம் SAARC நாடாக இருந்தாலும், EPF நோக்கில் அவர்கள் International Worker வகையில்தான் வருகிறார்கள்.

 

International Worker என்றால் யார்?

 

EPF Scheme, 1952 – Paragraph 83 படி - இந்திய குடியுரிமை இல்லாத ஒருவரை, இந்தியாவில் உள்ள நிறுவனம் வேலைக்கு எடுத்தால், அவர் EPFO பதிவுகளில் International Worker. இதில் ஆதார் இல்லாதவர்களும் அடங்குவர் என்பது முக்கியமானது.

 

ஊதியத்திற்கு உச்சவரம்பு (Wage Ceiling) பொருந்துமா?

இயல்பாக EPF-க்கு ₹15,000 ஊதிய வரம்பு உண்டு. ஆனால் International Worker-க்கு இந்த வரம்பு இல்லை.  முழு ஊதியத்தின் மீதே 12% PF கணக்கிடப்படும். உதாரணமாக  ₹60,000 ஊதியம்முழு ₹60,000-க்கும் PF பிடித்தம்.

 

 ஆதார் இல்லாமல் EPF-க்கு எப்படி சேர்ப்பது?

 

International Worker-களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை. EPFO தளத்தில் அவர்களுக்கான தனி நடைமுறை உள்ளது:

Employer login → Register International Worker

தேவையான முக்கிய விவரங்கள்:

·         Passport (முக்கிய அடையாளம்)

·         Visa / Work Permit

·         Nationality (Nepal)

·         Date of Joining

·         Monthly Wages

·         இந்திய முகவரி (நிறுவனம் வழங்கியது)

 

 KYC & வங்கி விவரங்கள் - ஏற்கப்படும் ஆவணங்கள்:

·         Passport

·         Visa / Work Permit

·         இந்திய வங்கி கணக்கு

International Worker-களுக்கான வங்கி KYC EPFO ஏற்றுக் கொள்கிறது.

 

Pension (EPS) பொருந்துமா? ஆம், பொருந்தும். இந்தியாநேபாளம் இடையே Social Security Agreement (SSA) இல்லை. அதனால்:

·         EPF மட்டும் அல்ல

·         EPS (Pension) contribution-வும் கட்டாயம்.

 

 EPF தொகையை திரும்பப் பெற முடியுமா?

முடியும். நேபாளத்திற்கு திரும்பிச் சென்ற பிறகு:

·         Passport

·         Exit details

·         வங்கி விவரங்கள் (இந்தியா அல்லது சொந்த நாடு)

இவற்றின் மூலம் EPF தொகையை கோரலாம்.

 

நிறுவனங்களுக்கான (Employer) நடைமுறை

 

1.       Passport & Visa நகல் பெறுதல்

2.       Work Permit சரிபார்ப்பு

3.       இந்திய வங்கி கணக்கு

4.       International Worker வகையில் UAN உருவாக்கல்

5.       KYC உறுதி

6.       மாதந்தோறும் PF / EPS செலுத்தல்

 

Paragraph 83-ன் மைய நோக்கம்


இந்தியாவில் வேலை செய்ய வரும் வெளிநாட்டு தொழிலாளர்களும்:

·         இந்திய தொழிலாளர் சட்டத்தின் கீழ்

·         ஒரே மாதிரியான ஓய்வூதிய மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை
பெற வேண்டும் என்பதே Paragraph 83-ன் அடிப்படை நோக்கம்.

 

நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் EPF, ESIC (ESIC வரம்பில் இருந்தால்) இரண்டிற்கும் முழுமையாக தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

EPF : பெயரில் உள்ள குழப்பம் - ஆகையால் வேலையில் சேர இயலவில்லை

 


சமீபத்தில் நமது வாசகர் ஒருவர் திருச்சியில் இருந்து அழைத்தார்.   அவர் ஒரு மென்பொறியாளர். தான் நான்கு நிறுவனங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் வேலை செய்ததாகவும்,  இப்பொழுது தன்னுடைய ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட UAN எண்ணை சோதித்தால், வேறு ஒரு  பெயர் வருவதாகவும்,  துவக்கத்தில் இருந்து கவனிக்க தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

அதனால் கடைசியாக வேலை செய்த நிறுவனம் தன்னை பி.எப்.பில் இணைக்க முடியாததால், சம்பளத்தையே மூன்று மாதம் நிறுத்தி வைத்திருந்ததாகவும், பிறகு தன்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு, மூன்று மாதத்திற்கு சம்பளத்தை கொடுத்து வேலையை விட்டு நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

இனி வேலை தேடுவதிலும் இந்த சிக்கல் பெரிய சிக்கலாக வந்து முன்நிற்கிறது. திருச்சி பி.எப் அலுவலகத்தையும், சென்னையில் தலைமை பி.எப். அலுவலகத்தையும் தொடர்பு கொண்டால், இப்பொழுது நான்கு நிறுவனங்களையும் அணுகி, வேறு பெயரில் இருப்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தன்னுடைய பெயரில் மாற்றுவதற்கு அணுகவேண்டும் என சொல்கிறார்கள் என்றார்.  இது போல  4 லட்சம் வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

தான் வேலை செய்த நிறுவனங்கள் எல்லாம் இந்திய அளவு நிறுவனங்கள் என்பதால் மும்பை, தில்லி என தலைமை இடங்களாக இருப்பதால், அவர்களைத் தான் கேட்கவேண்டும் என்கிறார்கள். வேலை செய்கிறவரை இருக்கும் மதிப்பு, வேலையை விட்டு நின்றுவிட்டால், இருப்பதில்லை. இது இப்போதைக்கு செய்து முடிக்கும் வேலையாக தெரியவில்லை. தான் மென்பொறியாளர் என்பதால், பி.எப். இல்லாத நிறுவனமாக வேலையில் இணைவதற்கும் வாய்ப்பில்லை என வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

 

பி.எப். பணம் சம்பந்தப்பட்டது என்பதால், ஆதார் வந்த பொழுதே அதை இறுக பிடித்துக்கொண்டது.  ஆதாரில் பிரச்சனை என்றால், அதை சரி செய்த பிறகே இணைக்கமுடியும் என்ற சிக்கல் உருவான பொழுது, கொஞ்சம் அச்சமாய் இருந்தது.  பத்து ஆண்டுகள் பிரச்சனையை இவர் சரி செய்வதற்குள் எத்தனை மாதங்கள் ஆகுமோ தெரியவில்லை!

 

அவர் சொன்னது போல… ஒவ்வொரு நிறுவனத்தையும் அணுகி, தனக்கு பதிலாக வேறு ஒருவருக்கு செலுத்தப்பட்ட பணத்தை நிறுவனம் சரிப்பார்த்து, பி.எப். யிடம் அதற்கான மாற்றங்களை அதற்குரிய விண்ணப்பத்தை கொடுத்து இவர் பெயருக்கு அந்த நிதியை கொண்டு வரவேண்டும். இது நடந்தது சில ஆண்டுகள் என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் HR துறை விரைந்து செயலாற்றவேண்டும்.  ஆனால் நடைமுறையில் மெதுவாக தான் செயலாற்றுவார்கள்.  பி.எப் நிறுவனம் விரைந்து செயலாற்றவேண்டும்.  ஆனால் அதன் வேகமும் சொல்லிக்கொள்ளும்படி அத்தனை ஆரோக்கியமில்லை.

 

ஆகையால், நாம் கவனமாக செய்யவேண்டியது…  ஒவ்வொரு மாதமும் பி.எப். பணம் செலுத்தும் பொழுது  நாம் கொடுக்கும் பணியாளர்களின் பெயரும், பி.எப். சரிப்பார்த்து, அதன் சிஸ்டத்தில் இருக்கிற பெயர்களையும் ஒப்பிடுவதற்கு தரும். அதை சரிப்பார்த்து தான் பணமே செலுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

 

குறைவான ஊழியர்கள் இருந்தால் இப்படி எளிதாய் செய்துவிடலாம்.  300, 500 என ஊழியர்கள் பணியாற்றும் பொழுது, கவனமாக சரிப்பார்க்கவேண்டும்.  இல்லையெனில் சரிப்பார்ப்பதற்கு அதற்கென மென்பொருள் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளவேண்டும்.  இல்லையெனில் இந்த பணியாளர் மாதிரி ஊழியர் நிச்சயம் பாதிக்கப்படுவார்.

 

பணியாளர்களுக்கு இந்த மாதிரி தவறுகளை தவிர்க்கும் விதமாக, பி.எப். உமாங் (Umang) என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பணியாளர்கள் அதில் தன் பெயரை பதிவு செய்துகொண்டு, ஒவ்வொரு மாதமும் தங்கள் கணக்கில் பணம் வருகிறதா என உறுதி செய்துகொள்ளவேண்டும் என்பது மிகவும் அவசியம்.

 

இன்னும் வளரும்….!

வணக்கங்களுடன்,


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

📞 95512 91721


குறிப்பு :  இந்தக் கட்டுரை  தொழில் உலகம் ஜனவரி 2026 இதழில்  வெளிவந்துள்ளது.


தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/


No comments:

Post a Comment