Saturday, January 24, 2026

GSTPS : New labour code - ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


புதிய தொழிலாளர் சட்டம் குறித்த இன்றைய இணைய வழிக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


கோவையிலிருந்து வரி ஆலோசகர் திரு. பெருமாள் அவர்கள், PowerPoint Presentation (PPT) மூலம் விரிவாகவும், தெளிவாகவும் வகுப்பு எடுத்தார்.

 

நமது GSTPS உறுப்பினர்களும், பிற பகுதிகளில் இருந்தும் பலரும் திரளாக கலந்துகொண்டனர்.

 

பலரும் தற்போது MSME-யில் Udyam Certificate பெறும் போது, தங்கள் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 10, 20 என பதிவு செய்து வருகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்படும் சூழல் உருவாகி வருவதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் எச்சரித்தார்.

 

தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Dearness Allowance) தொடர்பாக, இந்த புதிய சட்டத்தின் கீழ் மத்திய அரசு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைவாக வழங்க முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

 

இந்த சட்டம் 01/04/2026 முதல் அமலுக்கு வருகிறது. சட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, சட்ட மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைப் பொருத்திக்கொள்ள பல பெரிய நிறுவனங்கள் ரூ.1000 கோடி, ரூ.2000 கோடி என நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளன. இதன் மூலம், இந்த சட்டத்தின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

 

தொழிலாளர்கள் பணியில் சேரும் போதே, அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெளிவாக குறிப்பிட்டு, நியமனக் கடிதம் (Appointment Letter) வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

சம்பளம் வழங்குதல் தொடர்பாக:

·         நாள் சம்பளம்அதே நாளில்

·         வாரச் சம்பளம்வார இறுதியில்

·         15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் சம்பளம் – 17ஆம் நாளுக்குள்

·         மாதச் சம்பளம்அடுத்த ஒரு வாரத்திற்குள்

·         பணியில் இருந்து விலகும் நிலையில்இரண்டு நாட்களுக்குள்

சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சட்டம் வகுத்துள்ளதாக விளக்கப்பட்டது.

 


வேலை நேரம்:

·         நாளுக்கு 8 மணி நேரம்

·         வாரத்திற்கு 48 மணி நேரம்

 

இதனை மீறி கூடுதல் நேரம் பணிபுரிந்தால், இரட்டிப்பு சம்பளம் (Overtime Wages) வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

 

மேலும், GIG தொழிலாளர்கள் (Gig Workers) என்பவர்களுக்கும் இந்த சட்டத்தின் கீழ் உரிமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.

 

இவ்வாறு பல முக்கிய அம்சங்களை அவர் கோடிட்டு காட்டியதுடன், பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்.

 

ஒரு மணி நேர உரைக்குப் பிறகு, சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களை மட்டுமே தாம் குறிப்பிட்டு எடுத்துரைத்ததாகவும், இது ஒரு தொடக்கமே என்றும் அவர் தெரிவித்தார். ஆகையால், இந்த வகுப்பை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் தொடர்ந்து இந்த சட்டத்தை ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இன்றைய வகுப்பை YouTube-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என Dr. வில்லியப்பன் அவர்கள் கோரிக்கை வைத்தார். அதற்கு திரு. பாலாஜி அருணாச்சலம் அவர்கள் உடனடியாக ஒப்புதல் தெரிவித்தார். ஆகையால் விரைவில் யூடியூப்பில் வலையேற்றுகிறோம்.

 

எனவே, கலந்து கொள்ள இயலாத மற்ற உறுப்பினர்கள், இந்த உரையை அவசியமாகக் கேட்டு பயன் பெற வேண்டும்.

 

நன்றி.

 

--    -  GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety



No comments:

Post a Comment