Tuesday, March 10, 2026

GST Portal – GSTR-3B தாக்கல் செய்யும் முறையில் புதிய மாற்றம்


GST Portal இல் சமீபத்தில் செய்யப்பட்ட புதுப்பிப்பின் அடிப்படையில், GSTR-3B Return தாக்கல் செய்யும் செயல்முறையில் ஒரு புதிய கட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.


முக்கிய மாற்றம்


இனி “Proceed to File” என்ற பொத்தான் உடனடியாக செயல்படாது.

அதற்கு முன், வரித்தொகை விவரங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


நடைமுறை


1. GSTR-3B Form திறந்த பின்,

“Tax Liability Breakup, As Applicable” என்ற புதிய பொத்தானை முதலில் அழுத்த வேண்டும்.


2. அந்த பகுதியில்,


Portal தானாக கணக்கிட்ட Auto-computed tax liability விவரங்கள் காணப்படும்.

தேவையான இடங்களில் திருத்தக்கூடிய (editable) வசதியும் இருக்கும்.


3. அந்த விவரங்களை  சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.


4. இந்த உறுதிப்படுத்தல் செய்யப்பட்ட பிறகே

“Proceed to File” பொத்தான் செயல்படும்.


அதன் பிறகு செய்யப்படும் செயல்கள்

“Proceed to File” செயல்பட்ட பின்,

வரி கட்டணம் செலுத்துதல்

Electronic Credit Ledger / Cash Ledger இல் பதிவேற்றம்

Return தாக்கல் செயல்முறை முடித்தல்

இவற்றை வழக்கம்போல் தொடர முடியும்.


நோக்கம்


Portal கணக்கிட்ட வரி பொறுப்பை (Tax Liability) வரிபணியாளர் முன்பே சரிபார்க்க வேண்டும் என்பதற்காகும்.


தவறான கணக்கீடு அல்லது கவனக் குறைவு காரணமாக ஏற்படும் பிழைகளை குறைப்பதே இதன் நோக்கம்.


இறுதியாக...


GSTR-3B தாக்கல் செய்யும் போது, இனிமேல் “Tax Liability Breakup, As Applicable” பகுதியை முதலில் திறந்து, விவரங்களை உறுதிப்படுத்திய பின்னரே தாக்கல் செய்யும் நடைமுறையை வரிபணியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


-          இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

 


No comments:

Post a Comment