ஜி.எஸ்.டி (GST) நடைமுறையில் பணிபுரியும் வரி ஆலோசகர்களுக்கு அடிக்கடி எதிர்கொள்ள வேண்டிய ஒரு நடைமுறை சிக்கல் GST Notice கண்காணிப்பு (Monitoring) ஆகும். GST Portal-ல் எந்த நேரத்திலும் நோட்டிஸ்கள் வரக்கூடிய சூழல் இருப்பதால், அவற்றை தவறாமல் கவனிப்பது மிகவும் அவசியமாகிறது. இதற்காக பலர் தனிப்பட்ட முறையில் பல்வேறு மென்பொருட்கள் அல்லது App களை சந்தா செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பின்னணியில், கோவையைச் சேர்ந்த தணிக்கையாளர் (Auditor) திரு. பால் தங்கம் அவர்களுடைய குழு உருவாக்கியுள்ள ஒரு பயனுள்ள மென்பொருள் குறித்து அறிய வாய்ப்பு கிடைத்தது. அந்த மென்பொருளின் பெயர் Zentax Software.
இந்த மென்பொருள் குறிப்பாக GST Notice போன்ற தகவல்களை கண்காணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த மென்பொருளை அவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மென்பொருள் குறித்து தொடர்பு கொண்டபோது, அவர்களது குழுவைச் சேர்ந்த தணிக்கையாளர் திரு. தனசேகர் அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு, Ultra Viewer மூலமாக கணினியில் மென்பொருளை நிறுவி, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் சுருக்கமாக விளக்கி வழங்கினார். பயன்படுத்தும் முறை மிகவும் எளிமையாக அமைந்துள்ளது.
இந்த மென்பொருளின் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், ஒரு GST Notice-க்கு பதில் தயாரிக்க உதவும் வகையில் அவர்களது தளத்தில் உருவாக்கப்பட்ட AI வசதி உள்ளது. அந்த வசதியை பயன்படுத்தி பதில் தயாரிக்க விரும்பினால், அந்த சேவைக்கே மட்டும் கட்டணம் இருக்கும் என தெரிவித்தனர். ஆனால் மென்பொருளின் அடிப்படை பயன்பாடு இலவசமாகவே வழங்கப்படுகிறது.
இந்த முயற்சி, வரி ஆலோசகர்கள் எதிர்கொள்ளும் ஒரு நடைமுறை சிக்கலை உணர்ந்து அதற்கான தீர்வாக உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், இதுபோன்ற ஒரு மென்பொருளை உருவாக்கி அதை இலவசமாக பகிர்ந்து கொள்வது பாராட்டத்தக்க முயற்சியாகும்.
இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய விரும்புவோர்:
https://www.zentaxclinic.com/ என்ற
தளத்தைப் பார்க்கலாம்.
இறுதியாக...
வரி ஆலோசகர்களின் நடைமுறை பணியை எளிதாக்கும் இத்தகைய முயற்சிகள் தொழில்துறைக்கு பயனளிப்பவை. இந்த மென்பொருளை உருவாக்கிய தணிக்கையாளர் திரு. பால் தங்கம் அவர்களுக்கும், அவர்களது தொழில்நுட்பக் குழுவிற்கும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்வோம். அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்துவோம்.
அவர்களைத் தொடர்பு கொள்ள
:
தணிக்கையாளர் திரு
தனசேகரன் - 9092951122
நன்றி.
-
இரா. முனியசாமி
வரி
ஆலோசகர்
GSTPS உறுப்பினர்
📞
95512 91721
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:
Post a Comment