Tuesday, March 10, 2026

GST பதிவு இடைநீக்கம் – Rule 21(a) விளக்கம் - Welcome Letter importance




 வரவேற்பு கடிதம் திரும்பியதின் தாக்கம்

 

GST துறை, புதிய பதிவாளர்களுக்கு “Welcome Kit” அனுப்புகிறது. அந்தக் கடிதம் பதிவு செய்யப்பட்ட முகவரியில் பெறப்படாமல் திரும்பி வந்தால், அந்த முகவரி உண்மையில் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதன் விளைவாக, GST பதிவு இடைநீக்கம் செய்யப்படலாம்.

 

இது வணிகர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை: பதிவு செய்யப்பட்ட முகவரி எப்போதும் செயல்படக்கூடியதாகவும், அதிகாரிகள்/தபால் தொடர்புகளைப் பெறக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

 

Rule 21(a) – சட்டப்பூர்வ அடிப்படை


Rule 21 – GST பதிவு ரத்து செய்யப்படும் சூழல்கள்

CGST Rules, 2017 இன் Rule 21 படி, கீழ்க்கண்ட சூழல்களில் GST பதிவு ரத்து செய்யப்படலாம்:


பிரிவு காரணம்

21(a) அறிவிக்கப்பட்ட வணிக முகவரியில் வணிகம் நடத்தாதது

21(b) பொருட்கள்/சேவைகள் வழங்காமல் பில் அல்லது இன்வாய்ஸ் வெளியிடுவது

21(c) Anti-profiteering விதிகளை (Section 171) மீறுவது

21(d) Rule 10A (PAN-Aadhaar இணைப்பு) மீறுவது

21(e) தவறான முறையில் Input Tax Credit (ITC) பெறுவது

21(f) தவறான/பொய்யான தகவல்களை GST Portal-இல் சமர்ப்பிப்பது

 

CGST Rules, 2017 இன் Rule 21(a) படி:


  • அறிவிக்கப்பட்ட வணிக முகவரியில் வணிகம் நடைபெறவில்லை என்றால், GST பதிவு ரத்து செய்யப்படலாம்.
  • அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, அந்த முகவரியில் வணிகம் நடைபெறவில்லை என கண்டறியப்பட்டால், பதிவு ரத்து/இடைநீக்கம் செய்யப்படும்.
  • முகவரி மாற்றம் ஏற்பட்டால், GST Portal-இல் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

 

வணிகர்களுக்கான ஆலோசனைகள்

 

  • முகவரி எப்போதும் திறந்திருக்கும் நிலையில் இருக்க வேண்டும்.
  • முகவரி மாற்றம் உடனடியாக GST Portal-இல் புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • ஆவண ஆதாரங்கள் (வாடகை ஒப்பந்தம், மின்சார பில், சொத்து வரி ரசீது) வைத்திருக்க வேண்டும்.
  • பொய்யான முகவரியை தெரிவிக்ககூடாது.

 

இறுதியாக…

பதிவு என்பது வணிகத்தின் சட்டப்பூர்வ அடையாளம். Rule 21(a) வணிக முகவரியின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. முகவரி சரியாக பராமரிக்கப்படாவிட்டால், பதிவு இடைநீக்கம்/ரத்து செய்யப்படும்.


-          இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

No comments:

Post a Comment