Friday, March 20, 2026

GSTPS _ நமக்குநாமே ஆசிரியர்


அன்புள்ள  உறுப்பினர்களுக்கு,

வணக்கம்.

நமக்குநாமே  ஆசிரியர்


ஜிஎஸ்டி புரபெஷ்சனல் சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டு ஏழாம் ஆண்டை நிறைவு  செய்ய  இருக்கிறோம்.  நாட்டில் ஜி.எஸ்.டி நடைமுறைப் படுத்தி  ஒன்பதாம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.


இந்த காலக்கட்டத்தில் ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள தலைப்புகளிலும்தொழில்துறை, கட்டுமானம், மருத்துவம் போன்ற பல துறை சார்ந்த தலைப்புகளில் நமது சொசைட்டி தொடர்ந்து பல இணைய வழியிலும், நேரடியாகவும் கூட்டங்களை நடத்தி வந்துள்ளது. அந்தக் கூட்டங்களில் சட்டத்தின் நடைமுறை அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளன; உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பகிரப்பட்டுள்ளன; அவற்றிற்கு தேவையான விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.


இந்தப் பயணத்தில் நம்மில் சிலர் தொடர்ந்து பேச்சாளர்களாக பங்கேற்றிருக்கிறார்கள். மேலும், தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட சிறப்பு பேச்சாளர்களையும் அழைத்து, அவர்களிடமிருந்து அனுபவமும் அறிவும் பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறோம்.


அதோடு, நமது வாட்சப் குழுக்களின் மூலம் ஜிஎஸ்டி, வருமானவரி, தொழிலாளர் நல சட்டம்,மற்றும் பிஎப், இஎஸ்ஐ,  தொடர்பான சமீபத்திய மாற்றங்கள், தீர்ப்புகள், நடைமுறை விளக்கங்கள் ஆகியவை தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. உறுப்பினர்கள் இடையே கருத்துப்பகிர்வு நடைபெறும் ஒரு செயற்பாட்டு கற்றல் சூழல் உருவாகியுள்ளது.


ஆனால் கற்றல் என்ற பயணத்திற்கு இன்னும் ஒரு உயர்ந்த நிலை உள்ளது. படிப்பது ஒரு நிலை. புரிந்து கொள்வது அடுத்த நிலை. ஆனால் அதை தெளிவாக வடிகட்டி, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பது — அதுவே அறிவின் முழுமையான வெளிப்பாடு.


அதனால், இனி வரும் காலங்களில் வெளியில் இருந்து பேச்சாளர்களை அழைப்பதற்குப் பதிலாக, நம்முடைய உறுப்பினர்களே மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நம் குறிக்கோள்.  நம்மில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பரிச்சயமான ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அதை ஆராய்ந்து, உறுப்பினர்களுடன் பகிரும் நிலைக்கு வருவது நமது சொசைட்டியின் அடுத்த முன்னேற்றமாக இருக்கும்.


அதற்கான தேவையான உதவிகள் அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புக்கான ஆதாரப் பதிவுகள், சட்டப் பிரிவுகள், தீர்ப்புகள், நடைமுறை குறிப்புகள் போன்ற அனைத்தையும் வழங்க தயாராக இருக்கிறோம். தயாரிப்பில் எழும் சந்தேகங்களையும் சேர்ந்து விவாதித்து தெளிவுபடுத்த உதவுகிறோம்.


எனவே தயக்கமின்றி முன்வாருங்கள். உங்களுக்குப் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து   அலைபேசிமூலம் தெரிவியுங்கள்.


இந்த  திட்டம்   ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம்

நாள்

நே/இ

தலைப்பு

04/04/2026

இணைய வழி

 

11/04/2026

இணைய வழி

 

25/04/2026

நேரடி

 

 

நமது சொசைட்டியின் வலிமை என்பது அதன் உறுப்பினர்களின் பங்களிப்பே. அந்த பங்களிப்பு அறிவாகவும் அனுபவமாகவும் மற்றவர்களுடன் பகிரப்படும் போது, அது ஒருவரின் வளர்ச்சியை மட்டும் அல்ல; முழு சமூகத்தின் வளர்ச்சியையும் உருவாக்கும்.


ஆகையால், முன்வாருங்கள், நாம் அனைவரும் கற்றவர்களாக மட்டுமல்ல, கற்றுக் கொடுப்பவர்களாகவும் — ஆசிரியர்களாகவும் — பரிணமிப்போம்.

 

சு. செந்தமிழ்ச்செல்வன்

தலைவர்

98412 26856


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


No comments:

Post a Comment