Basic + DA ₹15,000/-க்கு மேல் இருந்தாலும்
PF கட்ட வேண்டிய நிலை எப்போது?
Aadhaar மூலம் UAN இருப்பதா என்பதை பணியாளர் தாமே எப்படி சரிபார்க்கலாம்?
ஒரு பணியாளரின் Basic + DA தொகை ₹15,000/- ஐ
மீறினால், பொதுவாக அந்த
பணியாளருக்கு PF கட்டாயம் இல்லை
என்பது
பலரிடையே நிலவும் புரிதலாகும்.
ஆனால்,
இதற்கு
முக்கியமான ஒரு விதிவிலக்கு உள்ளது.
1. PF சீலிங்
– சட்ட நிலை
Employees’ Provident Funds &
Miscellaneous Provisions Act, 1952 EPF Scheme, 1952 – Para 26, Para 2 (f) முதல் முறையாக வேலைக்கு சேரும்
நாளில் Basic + DA ₹15,000/-க்கு மேல் இருந்தால்
அவர்
Excluded Employee Excluded
Employee-க்கு PF கட்டாயம் இல்லை.
2. ஏற்கனவே
UAN இருந்தால்?
EPF Scheme, 1952 – Para 26(1)படி பணியாளருக்கு ஏற்கனவே
ஒரு நிறுவனத்தின் வேலை செய்து PF உறுப்பினராக இருந்திருந்தால் அல்லது ஏற்கனவே UAN (Universal
Account Number) ஒதுக்கப்பட்டிருந்தால் புதிய நிறுவனத்தில்: Basic + DA ₹15,000/-க்கு மேல்
இருந்தாலும் PF கட்டாயம் தொடரும் என்பது முக்கியமானது.
“ஒரு பணியாளருக்கு ஏற்கனவே UAN இருக்கிறதா?” EPFO
Employer Portal-ல் Aadhaar அடிப்படையிலான நேரடி UAN
Search வசதி தற்போது வழங்கப்படவில்லை. ஆனால்,
பணியாளர் தன்னுடைய ஆதாரை பயன்படுத்தி தானே UAN இருக்கிறதா என்பதை
சரிபார்க்க முடியும்.
3. Aadhaar மூலம் UAN இருப்பதா என்பதை பணியாளர் சரிபார்க்கும் வழிமுறை
EPFO Member Portal – “Know Your
UAN” Facility இந்த
வசதி
மூலம் EPFO
பணியாளருக்குக்கான Self-Service
Facility பணியாளரின் சம்மதத்தின் (Consent) அடிப்படையில் செயல்படுகிறது.
அதற்கான நடைமுறை என்னவென்றால்…
- EPFO
Member Portal-க்கு செல்ல வேண்டும்
- “Know
Your UAN” என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்
- Aadhaar
number, Name, Date of Birth போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்
Aadhaar-க்கு இணைக்கப்பட்ட Mobile-க்கு OTP வரும் OTP சரிபார்த்தவுடன் ஏற்கனவே UAN இருந்தால்… அதனை
தளம்
காட்டும் UAN இல்லையெனில் “UAN not generated” என தெரிவிக்கும் இதன் மூலம் பணியாளர் தாமே “எனக்கு முன்பே UAN இருக்கிறதா?” என்பதை உறுதி
செய்து நிறுவனத்திடம் தெரிவிக்கமுடியும்.
Basic + DA ₹15,000/-க்கு மேல்
உள்ள
பணியாளர்களிடம் Form 11, Self Declaration
ஆகியவை
கட்டாயமாக பெறப்பட வேண்டும் மேலும் பணியாளர் தன் ஆதார் மூலம் சரிபார்த்து தெரிவித்த தகவலை ஆதாரமாக
பயன்படுத்தலாம். இது முதன்மை சட்ட ஆதாரமாக (primary legal proof) அல்ல,
ஆனால்
நடைமுறை சார்ந்த உறுதிப்படுத்தல் ஆக பயன்படும்.
PM Scheme பலன் பெற – EPF EEC
2025 தளத்தில் பணியாளர் விவரங்கள் பதிவேற்றம் அவசியம்
இது
சம்பந்தமாக சிலர் தொலைபேசியில் சந்தேகம் கேட்டார்கள். அவர்களுக்கான விளக்கம் கீழே
தரப்படுகிறது.
EPFO அறிவுறுத்தலின்படி,
பிரதமர் வேலைவாய்ப்பு இணைந்த
ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் அரசு
ஊக்கத்தொகை (Incentive) பலன் பெற
விரும்பும் நிறுவனங்கள், தங்களது தகுதி
வாய்ந்த புதிய
பணியாளர்களின் விவரங்களை EEC 2025 (Employer
Enrollment Campaign – 2025) தளத்தில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய
வேண்டும்.
இந்த செயல்முறை, புதிய
வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும், Formal Employment அமைப்பில் பணியாளர்களை கொண்டு
வருவதற்கும் ஒன்றிய
அரசு
மேற்கொண்டுள்ள முக்கிய முயற்சியாகும்.
திட்டத்தின் சாராம்சம்
இந்த
திட்டத்தின் கீழ்,
புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கான பங்கு (Contribution) மீது
குறிப்பிட்ட காலத்திற்கு
அரசு சார்பில் நிதி
ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்
மூலம்
நிறுவனங்களுக்கு பணிச்சுமை குறைவதுடன், புதிய
பணியாளர்களை நியமிக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஏன் EEC 2025 தளத்தில் தாக்கல்
செய்வது (Upload) அவசியம்?
இந்த திட்டத்தின்
பலனைப்
பெறும்
முன்,
புதியதாக EPF-ல்
இணைக்கப்பட்ட பணியாளர்களின் UAN, பணியில் இணைந்த தேதி, சம்பள விவரங்கள் போன்ற தகுதி சார்ந்த விவரங்கள் அனைத்தும் EEC 2025 Portal-ல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இந்த பதிவேற்றப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பணியாளர் திட்டத்திற்கு தகுதியானவரா? அரசு
ஊக்கத்தொகை வழங்கலாமா? நிறுவனத்திற்கு EPF பங்கு
மானியத்தொகை கிடைக்குமா? என்பன
EPFO மூலம்
சரிபார்க்கப்படும்.
நிறுவனங்கள் கவனத்துடன் வேண்டியவை
- Aadhaar இணைக்கப்பட்ட UAN அவசியம்
- ECR Filing முறையாக செய்யப்பட்டிருக்க வேண்டும்
- பணியாளர் இணைந்த தேதி
துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
- முன்னர் EPF உறுப்பினராக
இருந்தால் தகுதி பாதிக்கப்படலாம்
- தவறான / போலியான தகவல்கள்
பதிவேற்றம் செய்தால் ஊக்கத்தொகை மறுக்கப்படும்
சட்டரீதியான குறிப்புகள்: இந்த திட்டத்தின் கீழ்
வழங்கப்படும் ஊக்கத்தொகை என்பதால் பிரதான் மந்திரி விக்சித் பாரத்
ரோஸ்கர் யோஜனா அடிப்படையில் வழங்கப்படுவதால் EPFO சரிப்பார்ப்புக்கு உட்பட்டது.
தவறான தகவல்கள் அளிக்கப்பட்டால், ஊக்கத்தொகை (Incentive) மறுப்பு,
செலுத்திய நிதியை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை, அபராதம் போன்றவற்றை எதிர்கொள்ள
நேரிடும். ஆகையால் எல்லா விவரங்களையும், செயல்பாடுகளையும் கவனமாக செய்யுங்கள்.
ESIC : கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு ESI வரம்பு
(Coverage) குறித்து…
ESIC - 12.02.2026 அன்று
வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சர்க்குலர் மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை
(Employees) கொண்ட
கல்வி நிறுவனங்கள் மற்றும்
மருந்து
நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ESI சட்டத்தின்
(ESI Act, 1948) வரம்பை (Coverage) விரிவாக்கம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், 21.11.2025 முதல் புதிய தொழிலாளர் சட்டம் (Code on Social Security) 2020 அமலுக்கு வந்துள்ளதால் ESI Act, 1948 இன்
Section 1(5) கீழ் வெளியிடப்பட்ட மாநில அறிவிப்புகள்
சட்டபூர்வ நிலையை (Legal
validity) இழந்துள்ளன.
இதனால் முன்னர் வெளியிடப்பட்ட Coverage Notification-ஐ ரத்து (Cancellation) செய்ய
மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்
விளைவாக, ESI Coverage வழங்கும் சட்ட அடித்தளம் தற்போது Code on Social Security, 2020 ஆக மாறியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ESI உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டால் – பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டால், அது வேலைக்குரிய காயம் (Employment Injury) எனக் கருதப்படும். இப்படிப்பட்ட சூழலில், பணியாளர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நலன்களை பெற சில முக்கிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
ESI Act, 1948 – செக்சன் 51A to 51E ESI (General) Regulations, 1950 – Regulation 68 படி நாம்
செயல்படவேண்டும்.
உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
காயமடைந்த பணியாளரை அருகிலுள்ள ESI அங்கீகரிக்கப்பட்ட
மருத்துவமனை / டிஸ்பென்சரிக்கு
உடனடியாக செல்ல வேண்டும். அவசர நிலை என்றால் அருகிலுள்ள ஏதேனும் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று, பின்னர் ESI மருத்துவமனைக்கு
மாற்றிக்கொள்ள வேண்டும். ESI அடையாள அட்டையை (Pehchan Card) மற்ற
விவரங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
நிறுவனத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்
விபத்து நடந்தவுடன், நிறுவன மேலாளர் / HR /
மேற்பார்வையாளர் ஆகியோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். நிறுவனமே, 24 மணி நேரத்திற்குள்
விபத்து அறிக்கை (Accident Report – Form 12) ESI இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு செய்யப்படாவிட்டால், பணியாளர்களுக்கு
கிடைக்க வேண்டிய நலன்கள் தாமதமாகும் அல்லது மறுக்கப்படலாம்.
சம்பளம் கிடைக்குமா?
வேலைக்குரிய விபத்து உறுதிப்படுத்தப்பட்டால், பணியாளர்களுக்கு
பின்வரும் நலன்கள் கிடைக்கும்.
தற்காலிக ஊனமுற்ற நலன் (Temporary Disablement Benefit)
காயம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத காலத்திற்கு, சம்பளத்தின் சுமார் 90% வரை, ESI மூலம் வழங்கப்படும்.
நிரந்தர ஊனமுற்ற நலன் ((Permanent Disablement Benefit)
காயம் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தினால், மருத்துவ குழு (Medical
Board) பரிசோதனைக்கு பிறகு மாதாந்திர
உதவித்தொகை வழங்கப்படும்.
குடும்ப நலன்
விபத்து காரணமாக பணியாளர் மரணம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
முழுமையான மருத்துவ சிகிச்சை
காயம் குணமாகும் வரை தேவையான அனைத்து சிகிச்சைகளும் ESI மூலம் வழங்கப்படும்.
வீடு–வேலை இடையிலான விபத்து
வீட்டிலிருந்து வேலைக்கு வரும் போது அல்லது வேலையிலிருந்து வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் வேலைக்குரிய விபத்து ஆகக் கருதப்படும்.
வேலை செய்யும் இடத்தில் அல்லது வேலைக்கு வரும்/திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதும், நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பதும் மிகவும் அவசியம். உரிய நேரத்தில் விபத்து பதிவு செய்யப்பட்டால்
மட்டுமே, பணியாளர்களுக்குக்
கிடைக்க வேண்டிய சம்பள நலன்கள் மற்றும் மருத்துவ உதவிகள் தாமதமின்றி வழங்கப்படும். ஆகையால்
நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் கவனத்துடனும், விரைந்தும் செயல்படுவது
அவசியம்.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்
📞 95512 91721
- இந்தக் கட்டுரை தொழில் உலகம் மார்ச் 2026 இதழில் வெளிவந்தது.






No comments:
Post a Comment