Thursday, April 23, 2026

நிறுவனத்தின் DSC ஒப்புதல் தாமதம் – சட்ட ரீதியான தீவிர விளைவுகள்

 


ஒரு நிறுவனம் தனது பணியாளர்களின் (Employees) விவரங்களை EPFO தளத்தில் பதிவு செய்யவும், திருத்தவும், உறுதிப்படுத்தவும், நிறுவனத்தின் பொறுப்பாளர் (Authorised Signatory) அவர்களின் DSC (Digital Signature Certificate) பதிவு மற்றும் அதன் ஒப்புதல் (Approval) அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்நிபந்தனையாக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய நடைமுறைகளின் படி, DSC தயார்(Active) நிலையில் இருந்தால் மட்டுமே… புதிய பணியாளர்களை சேர்க்க முடியும். பணியாளர் விவரங்களை திருத்த முடியும். KYC போன்ற அம்சங்களுக்கும் ஒப்புதல் தரமுடியும். மாதாந்திர நிதியை தாக்கல் செய்ய என அனைத்தையும் செய்ய முடியும்.

 

சட்ட ரீதியான கட்டுப்பாடுகள்

 

இந்த நடைமுறைகள், கீழ்கண்ட சட்டப் பிரிவுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன:

Section 6 of EPF Act, 1952 -  பணியாளர்களின் PF நிதி பங்களிப்பு கட்டாயம்

Paragraph 36(1) of EPF Scheme, 1952 - பணியாளர்களின் விவரங்களை சரியாக பராமரிக்கும் பொறுப்பு நிறுவனத்திற்கு இருக்கிறது.

Paragraph 38 of EPF Scheme, 1952 - மாதாந்திர நிதி செலுத்த வேண்டிய கடமை

Section 14B of EPF Act - தாமதத்திற்கு அபராதம்

Section 7Q of EPF Act -  தாமதத்திற்கு வட்டி

 

நிறுவனங்கள் DSC பதிவு செய்த பின்னர், அந்த DSC-க்கு PF அலுவலக ஒப்புதல் பெற
1 மாதம் முதல் 2 மாதங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்படுகிறது.  இந்த தாமதம் காரணமாக - புதிய பணியாளர்களை EPF-ல் பதிவு செய்ய முடியவில்லை.  ECR தாக்கல் செய்ய முடியவில்லை  PF நிதியை செலுத்த முடியவில்லை

 

1.      சட்டப்படி தவறு (Statutory Default)

நிறுவனம் தவறு செய்யவில்லை என்றாலும், DSC அப்ரூவல் இல்லாததால் நிதியை செலுத்த முடியாத நிலை  சட்டப்படி செலுத்த மறுத்ததாக (default) கருதப்படும்

 

2. வட்டி &  அபராதத்தை தவிர்க்க முடியாது

  • Section 7Q –  வட்டி
  • Section 14B – அபராதம்

தாமதத்திற்கு நிறுவனத்தின் மீது தவறே இல்லையென்றாலும், இப்பொழுது சட்டப்படி தவறாகிவிடுகிறது. இதை செலுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை உருவாகிறது.

 

3. பணியாளர் உரிமை பாதிப்பு

புதிய பணியாளர் EPF-ல் சேர்க்கப்படவில்லை என்றால், PF தொகை செலுத்த முடியாது போகும்.  இந்த காலத்தில் வேலை செய்யும் பொழுது பணியாளர் உயிர் துறந்தால், அவரது குடும்பத்தினருக்கு, PF நிதி, EPS ஓய்வூதியம், EDLI Insurance (₹7 lakh வரை)  இவற்றை பெற முடியாத நிலை உருவாகலாம்.


இதில் நிறுவனத்தின் தவறு இல்லாதபோது..  PF  தன்னுடைய அலுவலக தாமதத்தினால் காரணமாக ஏற்பட்ட விளைவுக்கு யார் பொறுப்பு ஏற்பது?  என்ற கேள்வி எழுகிறது.


நடப்புச் சட்டப்படி- EPFO தாமதம் குறித்து வெளிப்படையான நிவாரண ஏற்பாடு இல்லை. நீதிமன்றத்திற்கு சென்று தான் முறையிடவேண்டிய நிலை வரும்.    இது நிறுவனத்திற்கு தேவையில்லாத அலைச்சலையும், செலவையும் கொண்டு வரும்.

 

நிர்வாக ரீதியான குறைபாடு என்பது ஒரு சாதாரண தொழில்நுட்ப தாமதம் அல்ல:

 

பணியாளர்களுக்கான தொகை செலுத்த முடியாததால் வரும் (Statutory compliance) பாதிப்பு, பணியாளருக்கான பலன்கள் (Social security) பாதிப்பு , நிறுவனத்தின் மீது தவறான பொறுப்பு (liability ) உருவாகிறது. இது அலுவலக ரீதியான தோல்வியாக (Systemic Failure) பார்க்கவேண்டும்.

 

இந்த நிலைமையில் நிறுவனங்கள், தங்களுக்கான பாதிப்புகளில் இருந்து தப்பிக்க..

  1. DSC பதிவு செய்த உடனே புகார் ஒன்றை (Grievance) இணையத்தின் வழியே பதிவு செய்ய வேண்டும்
  2. பி.எப் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். (Email / letter)
  3. நிறுவனம்  இது தொடர்பான ஆதாரங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும்
  4. தாமதம் காரணமாக அபராதம் வந்தால் நிறுவனத்தின் தரப்பில் ஆதாரமும், விளக்கமும் (representation) தர தயாராக இருக்க வேண்டும்

 

பணியாளர்களுக்கான சமூக பாதுகாப்பு (Social Security) என்பது சட்டத்தின் நோக்கம்; தொழில்நுட்ப தடை காரணமாக அதை மறுக்கும் நடைமுறை ஏற்க முடியாது.  இந்த தாமதம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினை ஆகும்.

 

இந்த நிலைமைக்கு EPFO துறையிலிருந்து தெளிவான வழிகாட்டுதல் (clarification) அல்லது தற்காலிக தளர்வு (relaxation) வழங்கப்படுவது மிகவும் அவசியம் என நிறுவனத்தின் சார்பாகவும், பணியாளர்களின் சார்பாக நமது கோரிக்கையை முன் வைப்போம்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


 

No comments:

Post a Comment