Tuesday, April 7, 2026

Google Pay (GPay) – “Pocket Money” என்ற வசதி: குழந்தைகளுக்கு Financial Discipline கற்றுக்கொடுக்க!

 


பெற்றோர் அல்லது பெரியவர்கள், குழந்தைகள் அல்லது இளம் வயதினருக்கு

கட்டுப்பாட்டுடன் பணம் அனுப்பவும், கண்காணிக்கவும் உதவும் ஒரு வசதி.

 

நோக்கம் - குழந்தைகளுக்கு டிஜிட்டல் பண மேலாண்மை பழக்கம் கற்பித்தல். செலவுகளை கட்டுப்படுத்தி வழங்குதல், பாதுகாப்பான பரிவர்த்தனை சூழல் உருவாக்குதல்

 

எப்படி வேலை செய்கிறது?

 

1. Parent Account (பெற்றோர் கணக்கு) -  GPay-ல் இருந்து “Pocket Money” option தேர்வு செய்யலாம். குழந்தைக்கு ஒரு sub-account போன்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது

 

2. Child Account (குழந்தை பயன்பாடு)  - தனி GPay profile உருவாகும்.  பெற்றோர் அனுப்பும் பணத்தை மட்டும் பயன்படுத்த முடியும்

 

3. Money Transfer - ஒருமுறை அல்லது மாதாந்திரமாக (allowance மாதிரி) பணம் அனுப்பலாம்

 

4. Spending Control - பெற்றோர்:  எவ்வளவு செலவு செய்தார்கள் என பார்க்கலாம்

தேவையானால் வரம்பு (limit) அமைக்கலாம்

 

பாதுகாப்பு அம்சங்கள் -  முழு கட்டுப்பாடு பெற்றோரிடம் இருக்கும்.

சந்தேகமான அல்லது தேவையற்ற செலவுகளை தடுக்கலாம். UPI PIN போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் தொடரும்

 

யாருக்கு பயன்படும்? -  பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு Pocket money கொடுக்க விரும்பும் பெற்றோர். குழந்தைகளுக்கு “financial discipline” கற்பிக்க விரும்புபவர்கள்

 

இந்த வசதி எல்லா பயனர்களுக்கும் இன்னும் கிடைக்காமல் இருக்கலாம்.  Region / App update அடிப்படையில் கிடைக்கும்

 

இறுதியாக...

 

இது சாதாரண UPI transfer வசதியை விட,  பயன்பாடு + கண்காணிப்பு + கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் இணைக்கும். ஒரு family-focused digital வசதியாகும்.

 

-         இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

      📞 95512 91721


தொழில்நுட்பம்_கற்போம்_பகுதி 21


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment