சூழ்நிலைகள், சட்ட
மாற்றங்கள், வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவை
மாறும்போது, தாமதமின்றி தங்களை
மாற்றிக் கொண்டு,
சரியான
தீர்வை
வழங்கும் திறன்
ஆகும்.
ஒரு வரி ஆலோசகருக்கு இது எவ்வளவு அவசியம்?
வரி
துறை
என்பது
நிலையானது அல்ல.
சட்டங்கள் மாறுகின்றன, அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன, விளக்கங்கள் திருத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில்:
1.
சட்ட மாற்றங்களை உடனுக்குடன் ஏற்கும் திறன்
ஜி.எஸ்.டி, வருமானவரி போன்ற
துறைகளில் Notifications, Circulars அடிக்கடி வெளிவருகின்றன. அவற்றை
தாமதமின்றி புரிந்து, செயல்படுத்தும் திறன்
— அதுவே
agility.
“மாற்றத்தை விரைவாக உணராதவர், நடைமுறையில் பின்னடைவர்.”
2.
வாடிக்கையாளர் தேவைக்கு தகுந்த தீர்வு வழங்குதல்
ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரே
மாதிரி
அல்ல.
ஒருவருக்கு compliance முக்கியம்; மற்றொருவருக்கு tax planning முக்கியம்.
அந்த
வேறுபாட்டை உணர்ந்து, அவரவர்
சூழ்நிலைக்கேற்ற அணுகுமுறை — agility இல்லாமல் சாத்தியமில்லை.
“ஒரே விதி
எல்லோருக்கும் பொருந்தாது; சூழ்நிலை தான்
வழிகாட்டும்.”
3.
பிரச்சினைகளுக்கு உடனடி செயல்முறை தீர்வு
நோட்டிசு வந்தபோது அல்லது
ஜி.எஸ்.டி தளத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது “பார்த்து சொல்கிறோம்” என்ற
நிலை
போதாது.
அந்த
நொடியில் தீர்வு
தேடும்
மனப்பான்மை — அதுவே
உண்மையான agility.
4.
தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்கும் மனப்பான்மை
GST portal, AIS, faceless assessment
போன்ற
அமைப்புகள் வரி ஆலோசகரின் பணியை
முற்றிலும் மாற்றியுள்ளன. இந்த மாற்றங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக,
அவற்றோடு இணைந்து செயல்படுதல் — தொழில்முறை நிலைத்தன்மைக்கான அடிப்படை.
“மாற்றத்தை ஏற்றுக்கொள்வதே வளர்ச்சியின் முதல்
அடிக்கல்.”
5.
அழுத்தநிலையில் தெளிவான முடிவு எடுக்கும் திறன்
கடைசி தேதி, வாடிக்கையாளர் அழுத்தம், சட்ட
சிக்கல்கள் இந்த மூன்றும் சேர்ந்தால் குழப்பம் ஏற்படும். அந்த
நேரத்தில் அமைதியாகவும், துல்லியமாகவும் முடிவு
எடுப்பது ஒரு
வரி
ஆலோசகரின் முக்கிய திறன்.
அறிவு
மட்டும் போதாது.
அறிவை
எப்போது, எப்படி
பயன்படுத்துவது என்பது
தான் ஒரு
வரி
ஆலோசகரை வேறுபடுத்துகிறது.
-
இரா. முனியசாமி
வரி
ஆலோசகர்
GSTPS உறுப்பினர்
📞
95512 91721
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:
Post a Comment