தவறான பி.எப். கணக்கை நீக்க புதிய வசதி (Delink)
பணியாளர்கள் பெயரில், அவர்களுக்கு
தெரியாமலோ அல்லது தவறுதலாகவோ தவறான
பி.எப். கணக்கு இணைக்கப்பட்டிருந்தால், அதை இப்போது நீக்குவதற்கான வசதி வந்துள்ளது.
முன்பு ஒரு பணியாளர் வேலையில் சேரும் பொழுது, நிறுவனம் அவரை தளத்தில் இணைக்கும். அன்றைக்கே அந்த பணியாளர் வேலை பிடிக்காமலோ அல்லது வேறு காரணங்களிலோ வேலையை விட்டு நின்றுவிடுவார். அவருடைய கணக்கில் அந்த ஒரு நாளைக்கு கூட நிறுவனம் பணம் செலுத்தியிருக்காது. அதை நீக்கவும் வழி இல்லாமல் இருந்தது. பி.எப். அலுவலகம் ஏன் சேர்த்துவிட்டு பணம் செலுத்தவில்லை என கேட்க சொல்லி, பணியாளரை வலியுறுத்தும். அந்த பணியாளர் வேலை செய்த அலுவலகத்தை கேட்க முடியாத சூழ்நிலையில் இருப்பார். இந்த சிக்கலை சரி செய்யத்தான் முதலில் இந்த வசதி கொண்டுவரப்பட்டது. இப்பொழுது கூடுதலாகவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது.
இந்த
வசதி எப்போது பயன்படும்?
பணியாளர் வேலை செய்யாத நிறுவனத்தின்
பி.எப். கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் பயன்படும். ஒரே நபருக்கு இரண்டு பி.எப்.
கணக்குகள் இருந்தால் நீக்கப் பயன்படும்.
நிறுவனம் தவறாக பணியாளர் பெயரில் கணக்கு இணைத்திருந்தால் பயன்படும்.
முன்பு… பணம் செலுத்தப்பட்ட
(contribution) கணக்கை நீக்க முடியாது. இப்போது, சில நிபந்தனைகளுடன், பணம் செலுத்தப்பட்ட கணக்கையும் நீக்க அனுமதிக்கிறது.
எந்த
கணக்குகளை நீக்க முடியாது?
ஏற்கனவே பணம் எடுத்த கணக்குகளை நீக்க
முடியாது. 6 மாதங்களுக்கு மேல் பணம் செலுத்தப்பட்ட கணக்குகளை நீக்க முடியாது. பணம்
மாற்றம் செய்யப்பட்ட கணக்குகளை நீக்கமுடியாது.
எப்படி
நீக்குவது?
பணியாளர் உறுப்பினருக்காக இருக்கும் பி.எப். இணைய
தளத்தில் உள்நுழைய வேண்டும் பணியாளரின்
கணக்கு விவரங்களில் சென்று… தவறான கணக்கை தேர்வு செய்து “நீக்கு” என்ற தேர்வை அழுத்த வேண்டும். அதை பணியாளரின்
ஆதார் மூலம் உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பு, பணியாளரின் நிறுவனம் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும்.
ஒருவேளை நிறுவனம் பதில் அளிக்காவிட்டால்… பி.எப்.
அலுவலகம் தரவுகளை சரிப்பார்த்து தீர்மானம் எடுக்கும்
இப்படி நீக்குவதை பணியாளர் கவனமாக செய்யவேண்டும். ஒருமுறை கணக்கு நீக்கப்பட்டால்… மீண்டும் சேர்க்க முடியாது. அந்த கணக்கில் இருக்கும் பணம் உடனடியாக
கிடைக்காது. அதன் நிலை குறித்து முழு
விளக்கம் இன்னும் வரவில்லை
பணியாளர்கள்
கவனத்துடன் செய்ய வேண்டியது
கணக்கை நீக்குவதற்கு முன் பணியாளரின்
பணம் எவ்வளவு உள்ளது என்று பார்க்க வேண்டும் எந்த கணக்கு சரியானது என்று உறுதி செய்ய
வேண்டும் சந்தேகம் எழுந்தால், விபரம்
தெரிந்த நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்
ஏன்
இந்த மாற்றம்?
ஒரே நபருக்கு பல கணக்குகள் இருப்பதை
தவிர்ப்பதற்காகவும், பணியாளரின் வேலை வரலாறு (Service history) சரியாக
இருப்பதற்காகவும், எதிர்காலத்தில் பணம் பெற சிக்கல் வராமல் இருப்பதற்காகவும் இந்த
வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
-
இரா. முனியசாமி
வரி
ஆலோசகர்
GSTPS உறுப்பினர்
📞
95512 91721
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

No comments:
Post a Comment