2. PF பணத்தை எடுக்கும்போது வரி பிடித்தம் உண்டா? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்?
3. பி.எப். க்கு பணம் செலுத்தும் பொழுது, பணியாளர்களின் பெயர்கள், எவ்வளவு நாள் வேலை செய்த விவரங்கள் என்பதை முன்பு கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த மாதத்தில் இருந்து பி.எப். பணியாளர்கள் விவரத்தை தருவதில்லை. பி.எப். விவரங்கள் மறைக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
சமீபத்தில் இரண்டு
பேர் தங்களுக்கு இரண்டு UAN இருப்பதாகவும், அதை எப்படி இணைப்பது என்பதையும்
கேட்டார்கள். இந்த பிரச்சனையை பல
பணியாளர்கள் எதிர்கொள்கிறார்கள். ஆகையால் அதை விரிவாக பார்க்கலாம்.
ஒரே பணியாளருக்கு இரண்டு UAN இருக்குமா? இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
பணியாளர்களின் PF கணக்கை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட முக்கிய அடையாள எண் தான் UAN (Universal Account Number). சட்டப்படி, ஒரு பணியாளருக்கு ஒரே
UAN மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், சில தவறுகள் மற்றும் தகவல் முரண்பாடுகள் காரணமாக, ஒரே நபருக்கு இரண்டு அல்லது அதற்கு மேல் UAN உருவாகும் நிலை காணப்படுகிறது.
எந்த சூழ்நிலைகளில் இரண்டு அல்லது பல UAN உருவாகும்?
அ) புதிய வேலைக்கு சேர்ந்தபோது பழைய
UAN வழங்காதது. பணியாளர்கள் முன்பு இருந்த நிறுவனத்தின் UAN எண்ணை புதிய நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் இருப்பது பொதுவான காரணம். இதனால் புதிய நிறுவனம், புதிய UAN உருவாக்கி விடுகிறது.
ஆ) KYC தகவல் பொருந்தாமல் இருப்பது
- பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்கள் ஆதார் மற்றும் PF பதிவுகளில் வேறுபட்டிருந்தால், அதே நபர் என்பதை அடையாளம் காண முடியாமல், புதிய UAN உருவாகும்.
இ)
நிறுவனத்தின் தரவு பதிவில் தவறுகள்
- Form
11 சரியாக நிரப்பப்படாதது. முந்தைய வேலை விவரங்கள் பதிவு செய்யப்படாதது போன்ற காரணங்களால் இன்னொரு UAN உருவாகும்.
ஈ) ஆதார் இணைப்பு இல்லாத பழைய பதிவுகள்
– இது தான் முக்கியமான காரணம். முன்னர் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லாத காலத்தில் வேலை செய்த
ஒவ்வொரு நிறுவனமும் ஓவ்வொரு UAN உருவாக்கி, பல UAN உருவாக்கியிருக்கலாம். பின்னர் ஆதாரோடு இணைத்தபொழுது, நிறைய UAN இருக்கிறது என தெரியவருகிறது.
உ)
அடிக்கடி வேலை மாற்றம்
- ஒவ்வொரு புதிய வேலைக்கும் புதிய UAN உருவாக்கும் தவறுகள் ஒப்பந்த (Contract) / தற்காலிக (Temporary) வேலைகளில் அதிகமாக காணப்படுகிறது.
இரண்டு UAN அல்லது பல UAN இருந்தால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?
PF தொகை பல கணக்குகளில் சிதறி இருக்கும் பி.எப். நிதியை கோரும் (claim) பொழுது பி.எப். அலுவலகம் நிராகரிப்பார்கள். இதனால், ஒரு பணியாளரின் முழுமையான வேலை வரலாறு பதிவு ஆகாது ஓய்வுநிதி (EPS - Pension) பெறும் தகுதி பாதிக்கப்படும் என்பது இதில் முக்கியமான பிரச்சனை.
இந்திலையில் என்ன செய்ய வேண்டும்?
PF அமைப்பில் இணைப்பது (Merge) என்பது.. மற்ற (duplicate) UAN-ஐ செயலிழக்கச் செய்தல். அனைத்து தொகையையும் சேவை வரலாறுகளையும் (Service History) ஒரே UAN-க்கு மாற்றவேண்டும்.
இணைப்பு (Merge) நடைமுறைகள்
1) “ஒரு
பணியாளர் (One Member) – ஒரு ”UAN” சேவை - PF இணையதளத்தில் உள்நுழைந்து மற்ற (Duplicate) UAN விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும். பின்னர், தகவல் சரிபார்ப்பு நடைபெறும். ஆதாரோடு இணைக்கப்பட்டதை சரியென கொண்டு, மற்ற தவறான UANகளை செயலிழக்க செய்வார்கள். PF தொகை ஆதாரோடு இணைக்கப்பட்ட சரியான UAN-க்கு மாற்றப்படும்
2) PF Transfer
(Form 13) - பழைய கணக்கிலிருந்து புதிய கணக்குக்கு தொகை மாற்றலாம். இதன் மூலம் ஒரே UAN-ல் தொகையை ஒருங்கிணைக்கமுடியும்.
3) குறைதீர் மனு
(Grievance) மூலம் PF குறைதீர் தளத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய அடிப்படையான
விவரங்களை கொடுத்து, “Multiple
UAN” பிரச்சினை என்று குறிப்பிட வேண்டும். அலுவலகம் நேரடியாக சரிசெய்யும்,
4) நிறுவனம் மூலம்
- சில சிக்கலான வழக்குகளில்,நிறுவனத்தின் உதவி அவசியமாக இருக்கலாம்.
இணைப்பதற்கு முன் கவனமாக செய்யவேண்டியவை :
முதலில் சரியான UAN எது என்று உறுதி செய்ய வேண்டும் அதோடு ஆதார் இணைப்பு அவசியம்.
பெயர் / பிறந்த தேதி இவற்றில் தவறுகள் இருந்தால், ஆதாரின்
அடிப்படையில் திருத்தம் செய்யவேண்டும் அல்லது கூட்டு அறிவிப்பு (Joint
Declaration) மூலம் சரி செய்யவேண்டும். அதே போல இரண்டு UAN-களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடாது. பி.எப். நிதி கோரும் பொழுது, ஒரே UAN மட்டுமே பயன்படுத்த வேண்டும்
இறுதியாக.. இரண்டு UAN உருவாகுவது ஒரு திட்டமிட்ட செயலல்ல; இது தகவல் பிழைகள் மற்றும் நடைமுறை தவறுகளால் உருவாகும் நிலை. அதை சரியான முறையில் ஒன்றாக்காமல் விட்டால், பணியாளர்களின் PF தொகை, ஓய்வூதிய உரிமை மற்றும் வேலை வரலாறு ஆகியவை பாதிக்கப்படும்.
அதனால், “ஒரே UAN – சரியான விவரங்கள் – முழுமையான பதிவு” என்பதே பாதுகாப்பான மற்றும் சரியான நடைமுறையாக கருதப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
PF பணத்தை எடுக்கும்போது வரி பிடித்தம் உண்டா? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்?
பல தொழிலாளர்கள் வேலை மாற்றம் அல்லது வேலை நிறுத்தம் ஏற்பட்டபோது பி.எப். நிதியை விண்ணப்பித்து பெறுகிறார்கள். அந்த நேரத்தில் சிலருக்கு எதிர்பாராத விதமாக வரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டு பணம் குறைவாக கிடைக்கிறது. இந்த நிலை ஏன் வருகிறது? எப்போது வரி பிடிக்கப்படும்? எப்படி தவிர்க்கலாம்? என்பதனை எளிமையாகப் பார்ப்போம்.
அ) PF பணம் எடுக்கும்போது எப்போது வரி பிடிக்கப்படும்?
1. வேலை செய்த காலம் 5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால்…
2. எடுத்துக் கொள்ளும் PF தொகை ₹50,000-ஐ விட அதிகமாக இருந்தால்
இந்த இரண்டு நிபந்தனைகளும் இருந்தால் மட்டுமே வரி பிடித்தம் வரும்.
ஆ) PAN கொடுத்திருந்தால் என்ன? PAN எண் பணியாளரின் கணக்கில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால்,
10% மட்டுமே வரி பிடிக்கப்படும். இதனால்
பண
இழப்பு
குறைவாக
இருக்கும்.
இ) PAN இல்லையெனில் என்ன ஆகும்?
PAN பதிவு செய்யத நிலையில்… அதிகபட்ச வரி விகிதத்தில் (சுமார் 30%)
பிடித்தம் செய்யப்படும்.
இதன்
விளைவாக
பெற வேண்டிய பணம் மிகவும் குறைந்து கிடைக்கும்.
பலர் இதனால் பெரிய அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஈ) எப்போது வரி பிடிக்கப்படாது? கீழ்க்கண்ட
சூழ்நிலைகளில்
PF பணம்
எடுத்தாலும்
வரி
பிடிக்கப்படாது:
1.
5 ஆண்டுகள் வேலை முடிந்திருந்தால்
வரி இல்லை.
2. தொடர்ந்து 5 ஆண்டுகள் வேலை செய்திருந்தாலும் வரி இல்லை
3.
வேலை மாற்றம்
(Transfer) செய்தால்
பணம் எடுக்காமல் PF-ஐ புதிய நிறுவனத்திற்கு
மாற்றினால் வரி இல்லை
4.
வேலை நிறுத்தம்
கட்டாய காரணங்களால்
இருந்தால்,
உடல்நலம் குன்றியிருந்தால், நிறுவனம் மூடப்பட்டது என்ற காரணத்தால்,
கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளே காரணங்கள்
5) பி.எப் தொகை ₹50,000-க்கு கீழே இருந்தால்..
6)
Form 15G / 15H என்றால் என்ன? வருமானம் வரி வரம்பை எட்டாதவர்கள் இந்த படிவத்தை கொடுத்தால்… வரி பிடிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது ஆனால், PAN அவசியம் இருக்க வேண்டும். தகுதி இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
உதாரணமாக…
ஒரு
பணியாளர் 3 ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.
PF தொகை ₹2,00,000
➤ PAN இருந்தால்: 10% → ₹20,000 மட்டும் பிடிக்கப்படும்
➤ PAN இல்லையெனில்: 30% → ₹60,000 வரை பிடிக்கப்படும்
ஒரே நிலைமையில் ₹40,000 கூடுதல் இழப்பு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இறுதியாக...
PF பணம் என்பது தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்பு. அதை எடுக்கும்போது விதிகள் தெரியாமல் செயல்பட்டால் தேவையற்ற இழப்பு ஏற்படும். குறிப்பாக PAN இல்லாமல் பணம் எடுத்தால் அதிக வரி பிடித்தம் தவிர்க்க முடியாது. ஆகையால், சிறிய முன்னெச்சரிக்கை எடுத்தால் பெரிய இழப்பைத் தவிர்க்க முடியும்.
பி.எப். க்கு பணம் செலுத்தும் பொழுது, பணியாளர்களின்
பெயர்கள், எவ்வளவு நாள் வேலை செய்த விவரங்கள் என்பதை முன்பு கொடுத்துக்கொண்டிருந்தது.
இந்த மாதத்தில் இருந்து பி.எப். பணியாளர்கள் விவரத்தை தருவதில்லை. பி.எப். விவரங்கள் மறைக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
இது
ஏன்?
இதனால்
யாருக்கு என்ன
பாதிப்பு? இதை
எப்படிச் சமாளிப்பது?
1)
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு
- தொழிலாளர்களின் பெயர்,
அடையாள
எண்,
வங்கி
தகவல்
போன்றவை தனிப்பட்ட தகவல்களாக கருதப்படுகின்றன. அதனால்,
அவை
யாருக்கும் சுலபமாக பகிரப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.
2)
முழுமையான மின்னணு முறை - பி.எப். கணக்குகள் அனைத்தும் இப்போது இணைய
தளத்தில் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. இதனால்
காகித
ஆதாரங்கள் பகிர்வது குறைக்கப்பட்டுள்ளது.
இந்த
மாற்றம், முக்கியமாக முதன்மை நிறுவனம் (Principal Employer) க்கு சிக்கலை உருவாக்குகிறது. துணை
ஒப்பந்ததாரர் உண்மையில் பி.எப். செலுத்துகிறார்களா? எல்லா தொழிலாளர்களுக்கும் செலுத்துகிறார்களா? முழு தொகை செலுத்தப்பட்டதா? இவற்றை சரிபார்ப்பது கடினமாகிறது
இது தொழிலாளர்களுக்கு ஆபத்தா? ஆம்
— சில
சூழ்நிலைகளில் ஆபத்து
உள்ளது.
துணை
ஒப்பந்ததாரர்கள் தவறாக
நடந்துகொண்டால்… சில
தொழிலாளர்களை பதிவு
செய்யாமல் விடலாம். குறைந்த சம்பளம் காட்டி
பி.எப். குறைக்கலாம் பி.எப். செலுத்தவே செய்யாமல் இருக்கலாம். இதனால்
தொழிலாளர்களின் உரிமை
பாதிக்கப்படும்
சட்டப்படி பொறுப்பு யாருக்கு? பி.எப். சட்டப்படி: துணை
ஒப்பந்ததாரர் மூலம்
வேலை
செய்தாலும் தொழிலாளர்களுக்கு
பி.எப். செலுத்தப்பட வேண்டும். சரியாக செலுத்தப்படவில்லை
என்றால் முதன்மை நிறுவனத்திற்கே பொறுப்பு உள்ளது. அதாவது, “நான் ஒப்பந்ததாரருக்கு வேலை
கொடுத்தேன், எனக்கு
தெரியாது” என்று
சொல்லி
பொறுப்பை தவிர்க்க முடியாது
இந்நிலையில் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியது
தங்களுடைய UAN எண்ணை
தெரிந்து வைத்திருக்க வேண்டும். தங்களின் பி.எப். தொகை தன் கணக்கிற்கு மாதம் மாதம் வரவு
வைக்கப்படுகிறதா என்று அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். சம்பளத்திலிருந்து பி.எப். பிடித்தால், அது
செலுத்தப்பட்டதா என்பதை
உறுதி
செய்ய
வேண்டும்
நிறுவனங்கள் செய்ய வேண்டியது
துணை
ஒப்பந்ததாரர்களிடம் மாதந்தோறும் பி.எப். ஆதாரம் கேட்க
வேண்டும். பணம் வழங்கும் முன்,
அந்த
ஆதாரங்களை சரிபார்க்க வேண்டும். வேலைக்கு வரும்
தொழிலாளர்கள் மற்றும் பி.எப். பட்டியல் ஒத்துப்போகிறதா என
பார்க்க வேண்டும்
இறுதியாக... பி.எப். விவரங்கள் பகிரப்படாதது, பாதுகாப்பு காரணமாக வந்த மாற்றம்.
ஆனால்
அதே
நேரத்தில், இது
புதிய
சிக்கல்களையும் உருவாக்குகிறது. துணை
ஒப்பந்ததாரர்கள் தவறு
செய்தால், அதன்
விளைவு
தொழிலாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால்,
தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை விழிப்புணர்வுடன் கவனிக்க வேண்டும் நிறுவனங்கள் தங்களுடைய பொறுப்புகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும்.
அப்போதுதான் பி.எப். அமைப்பின் உண்மையான நோக்கம் “பணியாளர்களின் நிதி
பாதுகாப்பு” என்பது நடைமுறையில் உறுதி
செய்யப்படும்.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, இபி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
📞 95512 91721
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987



No comments:
Post a Comment