Tuesday, April 21, 2026

Stress Management for GST Professionals - S. Senthamil Selvan, President, GSTPS


தமிழ் உலகம்-ஏப்ரல்
2026

ஜிஎஸ்டி தொழில் புரிபவர்களின் மன அழுத்ததை கையாள்வது எப்படி ?

Stress Management for GST Professionals

 சு. செந்தமிழ்ச் செல்வன்

 --------------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் (Stress) என்றால் என்ன?

 

மன அழுத்தம் (Stress) என்பது ஒருவர் தொழில் ரீதியாக செய்ய வேண்டிய வேலைநிலுவைப் பணிகள் குவிதல்pending work accumulation, -

அதை குறிப்பிட்டகாலக்கெடுக்குள் முடிக்க வேண்டிய பொறுப்பு, ,

அதை முடித்தால் தான் பொருளாதாரநிலை சரியாகும் என்ற சூழ்நிலை.

ஜிஎஸ்டிசட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மாறுதல்கள்

அதை உடனடியாக படித்து புரிந்து கொள்ள முடியாத நிலை (அ) அதற்கான  நேரத்தை ஒதுக்க முடியாத இயலாமை

இவைகளால்  மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதாவது நம்  திறனை விட/நேரத்தை விட அதிகமான வேலைகள்/கோரிக்கைகள் ஏற்படும் போது மன அழுத்தம் மன அழுத்தம் stress உருவாகிறது.


 

கணக்கியல் /ஜிஎஸ்டி தொழில் புரிபவர்களின் ( GST Professionals) முக்கிய வேலைகள் என்ன?

 

ü  கணக்குத் தரவை இணங்குதல்/சேகரித்தல் Complying/Collecting Accounts data

ü  IT ரிட்டர்ன் தாக்கல் செய்ய தணிக்கையாளர்களுக்கு நிதி அறிக்கை தயாரித்தல்

ü  மாதாந்திர/காலாண்டு/ஆண்டு ரிட்டர்ன் GSTR-1,GSTR-3B GSTR-9/9-C போன்றவை, குறிப்பிட்ட காலகெடுவுக்குள் தயாரித்து சமர்ப்பித்தல்.

ü  மதிப்பீட்டு நடவடிக்கைகள் -Assessment proceedings

ü  துறை அறிவிப்புகள் & SCN- அறிவிப்புகள் பதில்-Department Notices &SCN- Notices reply

ü  வழக்கு அழுத்தம்- Litigation Pressure

ü  தணிக்கை / விசாரணை -Audit /investigation

GST-இல் காலக்கெடு மிகக் கடுமையானவை. Strict Compliance Deadlines, ஒரு deadline தவறினாலும்

          தாமத கட்டணம்-Late fee

          வட்டி-`Interest

          வாடிக்கையாளர் அழுத்தம் -Client pressure         

_________________________________________________________________________________

 

ஜிஎஸ்டி தொழில் புரிபவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்(stress )என்பதை எப்படி  அடையாளம் காண்பது ?

 

ஜிஎஸ்டி துறையில் பணிபுரியும் Tax Professionals-க்கு ஏற்படும் stress (மன அழுத்தம்) என்பதை சரியாக அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது.

ஆரம்ப நிலையிலேயே அறிந்தால் தொழில்முறை பிழைகள், compliance தவறுகள் மற்றும் உடல்நல பாதிப்புகள் தவிர்க்கப்பட முடியும்.

 

வேலை சார்ந்த அறிகுறிகள் (Work-related Indicators)

 

பின்வரும் மாற்றங்கள் தொடர்ந்து காணப்பட்டால் மன அழுத்தம் stress இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள்:

ü  ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான தேதி நெருங்கும் போது (Return filing deadlines ) அதிகம் பதட்டம் கொள்ளுதல்

ü  சிறிய GST calculation கூட மீண்டும் மீண்டும் சரிபார்க்கும் பழக்கம்.

ü  GSTR-1, GSTR-3B reconciliation செய்யும்போது கவனம் சிதறுதறல்.

ü  ITC validation மீது over-checking அல்லது completely avoid செய்வது

ü  ரிட்டர்ன் தாக்கல் செய்வதை கடைசி  தேதி வரை தள்ளி வைத்தல்

ü  Reconciliation pending backlog அதிகரித்தல்.

ü  போர்டலில்  வந்துள்ள நோட்டீசை திறந்து  பார்க்காமல் கால தாமதம் செய்தல்

ü  கிளையன்ட் அனுப்பிய  ஆவணங்களை சரி பார்க்க தாமதம் செய்தல்

ü  Notice / scrutiny வந்தால் அதிக பயம் அல்லது தவிர்க்கும் மனநிலை

ü  வேலை  செய்யும் நேரத்தை கட்டுப்பாடு இல்லாமல் நீட்டுதல்

ü   

மன அழுத்தம் அதிகமாகும் போது:

. Client Interaction Changes

          கிளையன்ட் உடனான தொடர்பை  communication குறைதல்

          ஆக்ரோசமாக பதில் அளித்தல்-Aggressive response

          ஆவணங்களின் தேவையை அதிகப்படுத்துதல்

          புதிய கிளையன்ட்டை ஏற்க  தயக்கம் காட்டுதல்

 

2. மனநிலை மாற்றங்கள் (Psychological Symptoms)

          எளிதில் கோபம் வருதல்

          கிளையன்ட்  தொலைபேசியை தவிர்த்தல்

          முடிவு (Decision)எடுக்க முடியாத நிலை

          Mistake ஆகிவிடுமோ” என்ற தொடர்ந்த பயம்

          தன்னம்பிக்கை Confidence குறைவு.

          ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசித்தல்

          சிறிய தவறு or mismatch கூட பெரிய ஆபயம் போல தோன்றுதல்

          சட்ட விளக்கத்தில்  தெளிவு இருந்தாலும் சந்தேக உணர்வுகொள்ளுதல்

 

உடல் சார்ந்த அறிகுறிகள் (Physical Symptoms)

          தலைவலி / கண் சோர்வு

          தூக்கமின்மை (Return season-ல் அதிகம்)

          கழுத்து, முதுகு வலி (long system work)

          உணவு நேரம் மாறுதல்

          சோர்வு இருந்தும் ஓய்வு கிடைக்காத உணர்வு

 

Stress level individual practice model-ஐ பொறுத்து மாறுபடும்.

 

தனிப்பட்ட ஆரோக்கியம்

 


தொழில்முறை அழுத்தத்தை கட்டுப்படுத்த உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமானது.

 

* தினசரி உடற்பயிற்சி

* போதுமான தூக்கம்

* வேலை-வாழ்க்கை சமநிலை (Work-life balance)

போன்றவை கவனிக்கப்பட வேண்டும்.

 

 

வரித்துறை தொழில் புரிபவர்கள் ( GST Professionals) ஏன் அதிக மன அழுத்தம் (Stress) எதிர்கொள்கிறார்கள்?

ஜிஎஸ்டி சட்டம் தொடர்ந்து மாற்றமடையும் துறையாக இருப்பதால் தொழில் புரிபவர்கள் (GST Professionals) தொடர்ந்து புதுப்பித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்

 

தொடர்ந்து ஏற்படும் Continuous Law Changes .

          Circulars

          Notifications

          Amendments

          Portal changes

இவற்றை தொடர்ந்து update செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

உதாரணம்:

ITC eligibility, Return filing procedure, E-invoice rules போன்றவை அடிக்கடி மாற்றம் பெறுகின்றன.

__________________________________________________________________________________

 

அடிக்கடி ஏற்படும் சட்ட மாற்றத்தை  எப்படி புரிந்து கொள்வது?

 

தொழில்முறை சட்ட மாற்றங்களைப் பின்பற்றுதல்

 

Ø  தினசரி புதுப்பிப்புகளைப் படிப்பது(வாட்ஸ் ஆப், Tax Magazine)

Ø  சக ஆலோசகர்களுடன் கலந்துரையாடுதல்.,Mentor guidance

Ø  சிக்கலான வழக்குகள் பற்றி அவர்களுடன்  பேசுவது தனிமை

 உணர்வை குறைக்கும் சில  பிரச்சனைகளை தீர்க்கும்.

Ø  Periodic professional interaction

Ø  உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்பது, தொடர்ந்து கற்றல் திறன், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் (Professional development confidence)

Ø   தொழில்முறை பயிற்சிகள் (Professional seminars / webinars) மூலம் அறிவை மேம்படுத்த வேண்டும்.

__________________________________________________________________________

எந்த வேலைக்கு முன்னுரிமை (Work Prioritization)வழங்க வேண்டும்?

முதலில் அலுவல வேலை நேரம் மற்றும் தனிப்பட்ட நேரம் தெளிவாக பிரிக்கப்பட வேண்டும்.

 

ü  தினசரி பணிகளை அவசரம் /முக்கியம்அடிப்படையில் பிரிக்க வேண்டும், நாம் பெறும் தொகையின்(FEES) அடிப்படையில்அல்ல.

ü  முக்கியமான பணிகளை முதலில் முடிக்க வேண்டும்.

ü  GSTR-1, GSTR-3B, GSTR-9 போன்ற Return filing பணிகளுக்கு முன்கூட்டியே கால அட்டவணை தயாரிக்க வேண்டும். Fixed working hours (possible extent)

ü  ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளும் பழக்கம் (multitasking) குறைக்கப்பட வேண்டும்.

ஒரே நாளில் அதிக பணிகளை ஏற்காமல் திட்டமிடுவது நல்லது.

குறிப்பிட்ட நேரத்தில் (Deadline clarity) முடிக்க வேண்டும்  என்று நேரம் ஒதுக்கப் படாத வேலைகளுக்கு  காலக்கெடு தெளிவாக நிர்ணயிக்கப் பட வேண்டும். ஏனென்றால் இது போன்ற வேலைகள் பின்னால் அதிக மன அழுத்தம் (stress)உருவாக்கும்.

_________________________________________________________________________________________

மன அழுத்ததை (Stress-ஐ) எப்படி கட்டுப்படுத்தலாம்?

1.Automation tools

GST software, automation tools-ஐ பயன்படுத்தி மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய வேலைகளை எளிதாக்கலாம்.

 

          GST reconciliation tools

          Reminder systems

          Document management

இதனால் repetitive stress குறையும்.

 

2. Manual வேலை குறைக்க வேண்டும்.

Standard checklist •            Compliance calendar blocking ,

 Task scheduling,       Client document tracker

போன்றவற்றை பயன்படுத்தி filing deadlines-ஐ கண்காணிக்க வேண்டும்

 

3.வேலையை பிரித்தல் Work Segregation

 

அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல்: - பணிகளைப் பகிர்ந்து கொள்வது: Junior staff-க்கு routine வேலைகளை ஒப்படைத்து, சிக்கலான advisory பணிகளில் கவனம் செலுத்தலாம்

* Data entry Junior staff

* Return preparation Assistant

* Final review மட்டும் senior

 

GST Work Pipeline Method

Work stages clearly பிரிக்க வேண்டும்:

Stage  Work

Stage 1           Data received

Stage 2           Verification

Stage 3           Reconciliation

Stage 4           Draft return

Stage 5           Client approval

Stage 6           Filing completed

 

ஒவ்வொரு கிளையண்ட் வேலையும் எந்த நிலையில்  உள்ளது என்பது தெரிந்தால் கவலைகுறையும்

 

அனைத்து புது கிளையண்டையும் ஏற்றுக் கொள்ளலாமா ?

Illustration Decision Rule:

Capacity Available?

YES Accept

NO  Next cycle onboarding

விளைவு:

Quality maintained, stress controlled.

 

நோடீஸ் பற்றிய கவலை-Assessment Notice Anxiety

Department notice received.

Stress Reaction:

Immediate panic.

Illustration Response Framework:

Notice Received

Read Section & Due Date

Document list prepare

Reply timeline create

Draft Review Submit

________________________________________________________________________________

வாடிக்கையாளர்களுடன் தெளிவான தொடர்புஇல்லாமை மன அழுத்தம் உருவாக காரணமா ?

 

பல நேரங்களில் மன அழுத்ததை உருவாகும் முக்கிய காரணம் கிளையண்ட் உடன் சரியான தொடர்பு இல்லாதது.

 

பல வணிகர்கள் தேவையான ஆவணகளையும் லேட்டாக கொடுக்கப்பார்கள். ஆனால் வேலைகள் மட்டும் (filing timely) குறித்த நேரத்தில்ஆக வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

இதில் சிறு தவறு ஏற்பட்டாலும் தொழில் புரிபவர்கள் ( GST Professionals ) தான் தான் காரணம் என்று கூறுவார்கள் .

கவேவாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றி (Educate)தெரிவித்துதெளிவான policy அமைக்க வேண்டும்:

 

கிளையண்ட் கட்டுப்பாட்டு அமைப்பு (Client Onboarding Control System)

 

கிளையண்ட்களால் பின்னர் ஏற்படும் இணக்க அழுத்தம்-ஐ ஆரம்பத்திலேயே குறைக்க கீழ்க்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.

 

• நிறுவன GST professional ஆக ஏற்றுக் கொள்வதற்கான  கடிதம் கட்டாயம்-Engagement Letter compulsory ( Written communication Email /WhatsApp  confirmation)

• செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும், அதற்கான கட்டணம் பற்றியும் அதில் தெளிவாக குறிப்பிடுதல்

• ஆவணங்கள் மற்றும் தகவல்களை கிளையண்ட் முன்கூட்டியே குறித்த காலதிற்குள் வழங்க வேண்டும் என்று தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

·          கொடுக்காவிட்டால் கிளையன்ட் தான் பொறுப்பு என்பதை தெளிவு படுத்துதல் ( Data submission responsibility on client)

·         Deadline மற்றும் Compliance தேவைகளை Clients-க்கு முன்பே விளக்க வேண்டும்.

·         GST Professionals  கருத்துக்களை/தகவல்களை(Written opinion) எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும்.

·         இதனால் தவறுக்கு யார் பொறுப்பு என்ற சந்தேகம்  தீரும்

________________________________________

ஜிஎஸ்டி தொழில்புரிபவர்கள் எந்த செயல்களை படுத்த முடியாது  ?

 

• போர்டல் பிழைகள் /சர்வர் மெதுவாக / போர்டல் &தொழில்நுட்ப சிக்கல்கள்(Portal errors /Server slow/  Portal & Technical Issues)

• தரவு பொருந்தாமை-Data mismatch

• தானியங்கி பிழைகள் Auto-population errors

• முரண்பாடு நீக்கும் சிக்கல்கள் Reconciliation issues

மேற்குறிப்பிட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டி. தொழில்புரிபவர்கள்  கட்டுப்பாடுக்கு வெளியே இருப்பதால் அதை ஜிஎஸ்டி நெட்வர்க் தான் சரி செய்ய வேண்டும்

_________________________________________________________________________________________ 

மன அழுத்தம் குறைக்கஎன்ன செய்ய வேண்டும் ?

ஒவ்வொரு நாளும் முடிவில்:

          Pending list update

          Tomorrow priority list தயாரித்தல்

          Completed work mark செய்தல்

இதனால் “unfinished work anxiety” குறையும்.

 

மாதம்  ஒருமுறை:

 

* எந்த வேலை stress உருவாக்கியது?

* எதை automate / delegate செய்யலாம்?

* unnecessary commitments உள்ளதா?

 

என்று மதிப்பீடு செய்து  மற்ற வேலைகளை  எப்படி/யார்  செய்யலாம் என்று திட்டமிட்டால் முன்கூட்டியேமன அழுத்தம் குறைக்கலாம்.

_________________________________________________________________________________________

வேலை அழுத்தத்தின் தன்மையை புரிந்து கொண்டு  குடும்பத்தினர் பின்கண்ட  நடைமுறைகளை பற்றினால் சிறிது மன அழுத்தம் குறையும்

 

ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய காலங்களில் இயல்பை விட வேலை நேரம் அதிகமாக இருக்கும். அப்போது-

 

Ø  அடிக்கடி வேலை நேரத்தில் தலையீடு  செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

Ø  தேவையற்ற  வாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

Ø  அச் சமயங்களில் நீண்ட இரவு வேலை செய்வது, வார விடுமுறை நாட்களில் வேலை  செய்வது  தவிர்க்க முடியாதது.

Ø  அப்போது தங்களுக்கு “நேரம் கொடுக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு தவிர்க்கப்பட வேண்டும்.

இது  ஒரு தற்காலிக வேலைப் பளு  என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

அதனால்:

           குடும்ப நிகழ்ச்சிகளை இணகமாக flexible  திட்டமிடப்படலாம்

          முக்கிய குடும்ப விவாதங்கள் ஒத்திவைக்கப்படலாம்.

            வீட்டில் அமைதியான வேலை சூழல் வழங்கப்பட வேண்டும்

_______________________________________________________________________________________

ஜிஎஸ்டிநிபுணர் மன அழுத்தத்தில் இருக்கும் போதுகுடும்பத்தினர் அவரை எப்படி கையாள வேண்டும் ?

பாசமானஅணுகுமுறை:

          “நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள், ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்” என்று மென்மையான வார்த்தைகள் பேச வேண்டும்.

          அவரை சிறிய ஓய்வு எடுக்க ஊக்குவிக்க வேண்டும்

          வேலை நேரம் முடிந்ததும் குடும்பத்துடன் நேரம் செலவிட ஊக்குவிக்க வேண்டும்.

          சத்தான உணவு: ஆரோக்கியமான உணவு, தண்ணீர், பழம் போன்றவற்றை கொடுத்து உடல் நலத்தை கவனிக்க வேண்டும்.

          குடும்பத்தினர் சேர்ந்து பேசுவது, சிரிப்பது, சிறிய விளையாட்டுகள் ஆடுவது மனதை இலகுவாக்கும்

______________________________________________________________________________________

மன அழுத்தத்தை  உடல் மூலம் எப்படி  கட்டுப்படுத்துவது ? .

காலக்கெடுமுடிந்த பின் குடும்ப நேரம் உருவாக்குதல்:

 

Ø  தினமும் குறைந்தது 20–30 நிமிடம் நடைபயிற்சி, யோகா, அல்லது சுவாச பயிற்சி செய்ய ஊக்குவிக்கலாம்

Ø  அதிகமாக தேநீர்/காபி அருந்துதல், முறையற்றஉணவு பழக்கங்கள் (irregular food habits)தவிர்க்கப்பட வேண்டும்

Ø  இசை கேட்டல்அல்லது புத்தகம் படித்து மன அழுத்தத்தை குறைக்கும்

Ø  குடும்ப நேரத்தில் வேலை தொடர்பான தொலைபேசி/ இ -மெயில்/வாட்ஸ் ஆப்பை தவிர்த்து , தனிப்பட்ட நேரத்தை பாதுகாக்க வேண்டும்.

Ø  குடும்பத்துடன் வெளியில் உணவு அருந்துதல், சுற்றுலா செல்லுதல்

Ø  விடுமுறை நாள் இரவு ஒரு கிளைய்யன்ட் ஜிஎஸ்டி  பற்றி சந்தேகம்கேட்டால், அவருக்கு உடனடி பதில் வழங்குவதை தவிர்த்து நாளை அலுவல் நேரத்தில் விவரம் பார்க்கப்பட்டு பதில் வழங்கப்படும் என்று கூற வேண்டும் .இதனால் Work-life balance பாதுகாக்கப்படும்.. இவர்களலும் மன அழுத்தம் ஏற்படும்.

. 

முடிவுரை

 

ஜிஎஸ்டி நிபுணர் எதிர்கொள்ளும் மன அழுத்தம் என்பது தனிப்பட்ட பலவீனம் அல்ல; அதுஇணக்கச் சுமைகள் மிகுந்த ஒழுங்குமுறைச் சூழல்(compliance-heavy regulatory environment)காரணமாக உருவாகும் இயல்பான தொழில்முறை அழுத்தமாகும். பெரும்பாலும்

சட்ட மாற்றங்கள்,

காலக்கெடு அழுத்தம்,

Clients மேலாண்மை ஆகியவற்றால் உருவாகிறது.

மன அழுத்தம் நீங்க முக்கியமான தீர்வு தளர்வு அல்ல;

கட்டமைக்கப்பட்ட அமைப்பு( structured system)உருவாக்குதலே ஆகும்.

Workload குறையாமல் இருந்தாலும், workflow control கிடைத்தால் mental pressure கணிசமாக குறையும்.

 

சரியான பணிப்பாய்வு,workflow வாடிக்கையாளர் ஒழுக்கம், மற்றும் கட்டமைக்கப்பட்டstructured practice நடைமுறை அமைப்புகள்மன அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும்.

 

சரியான வேலை திட்டமிடல், சட்ட அறிவை தொடர்ந்து புதுப்பித்தல், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் Client management முறைகள் மூலம் இந்த அழுத்தத்தை கணிசமாகக் குறைத்து தொழில்முறை செயல்திறனை மேம்படுத்த முடியும்.


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


No comments:

Post a Comment