AIன்னா என்னடா இது?
இப்போ
எங்கே
பார்த்தாலும் AI… YouTube திறந்தாலும் AI. மொபைல்
வாங்கினாலும் AI. அலுவலக கூட்டத்திலும் கூட
“AI integration”ன்னு
பேசுறாங்க. இதைக்
கேட்ட
சிலருக்கு: “இது
உலகத்தையே கைப்பற்றப் போகிறதாம்!” ன்னு
பயம்.
மற்ற
சிலருக்கு: “AI இருந்தா இனிமேல் வேலை
செய்யவே தேவையில்லை!” ன்னு
அதீத
நம்பிக்கை. உண்மையிலே இந்த
இரண்டுமே முழு
உண்மை
இல்லை.
எளிமையாக சொன்னால்…
AI என்பது: “நிறைய
தகவல்களைப் பார்த்து, அதிலிருந்து முறைகளை (pattern) கற்றுக்கொண்டு, அடுத்ததாக என்ன
வரலாம்
என்று
கணிக்கும் தொழில்நுட்பம்.” தான்.
இதைக்
கேட்டு
சிலர்:
“அப்போ
இது
மனித
மூளை
மாதிரியா?” ன்னு
கேட்கிறார்கள். இல்லை. மனிதன்
புரிந்து யோசிப்பான். AI கணக்கிட்டு கணிக்கும். இரண்டுக்கும் பெரிய
வித்தியாசம் இருக்கு.
வரித்துறையிலேயே எடுத்துக்கொள்ளுங்கள்
ஒரு
அனுபவமுள்ள ஜி.எஸ்.டி ஆலோசகரிடம் நோட்டிசு கொடுத்தால்… அவர்
முழுவதையும் படிக்காமலேயே: “இது
ITC mismatch பிரச்சனை போல…”
“இது
probably 3B vs GSTR-1 பிரச்சனை…” “இதுக்கு துறை வழக்கமாக என்ன
கேட்கும் தெரியும்…” என்று
உடனே
ஒரு
கணிப்பு வரலாம்.
ஏன்?
ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோப்புகளை பார்த்த அனுபவம். AI-யும்
அதே
மாதிரி
தான்.
கோடிக்கணக்கான தகவல்களைப் பார்த்து: “இந்த
கேள்விக்குப் பிறகு
பொதுவாக என்ன
பதில்
வரும்?”
என்று மனம் கணிக்கிறது.
ஆனா இங்க தான் முக்கியமான டிவிஸ்ட் இருக்கு
பலர்
நினைப்பது: “AI சொன்னா
சரிதான்.” அதுதான் ஆபத்து.
ஏன்னா
AIக்கு:
வெட்கம் கிடையாது, மானம் கிடையாது. மன்னிக்கவும்.
தயக்கம் கிடையாது, “எனக்கு
தெரியாது”ன்னு
சொல்லும் பழக்கம் குறைவு.
தவறான
தகவலாக
இருந்தாலும்… அதை
நம்பிக்கையுடன் சொல்லிவிடும்.
சில
நேரம்:
இல்லாத
வழக்குகளை கற்பனையில் உருவாக்கும், தவறான
செக்சனை சுட்டிக்காண்பிக்கும். பழைய
சர்க்குலரை அமுலில் உள்ளது மாதிரி
சொல்லும், கணக்கீடு செய்வதில் பிழை
விடும்.
ஆனா
படிக்கிறவர்களுக்கு அது
தெரியாமல் போகலாம். ஏன்னா
அதனுடைய வழங்கும்முறை ரொம்ப
தெளிவாக இருக்கும்.
இதுதான் இப்போ நடக்கும் பெரிய பிரச்சனை
முன்னாடி: கூகுளில் இருந்து காபி பேஸ்ட் பண்ணினார்கள். இப்போ: “ChatGPTல இருந்து காபி பேஸ்ட்” பண்ண
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனா
சரிபார்க்கிற பண்ணுற
பழக்கம் மட்டும் இன்னும் வரல.
அதுதான் ஆபத்து.
AI எதுக்கு நல்லா பயன்படும்?
சரியாக
பயன்படுத்தினால் நிறைய
பயன்
இருக்கு.
குறிப்பாக:
- Notice draft,
- Client mail,
- Reconciliation analysis,
- Data sorting,
- Excel formula help,
- Legal summary,
- Research starting point
இவைகளில் நேரத்தை மிச்சப்படுத்தும். ஒரு
வேலைக்கு 3 மணி
நேரம்
எடுத்துக்கொண்டது… 30 நிமிடமாக குறையலாம். அதனால்தான் உலகமே
இதைப்
பற்றி
பேசுகிறது.
ஆனா ஒரு விஷயம் மட்டும் மறக்கக்கூடாது
AI:
“தகவல்
தரும்
கருவி.” மனிதன்: “பொறுப்பு ஏற்கும் நபர்.”
இந்த
இரண்டு
வேறுபாடு இன்னும் மாறவில்லை. துறை சார்ந்த நோட்டிசு வந்தால்… “இதைக்
ChatGPT தான் சொன்னது சார்…”
ன்னு
சொல்லி
தப்பிக்க முடியாது.
கையெழுத்து போட்டது யார்?
பதிலை தாக்கல் செய்தது யார்?
ஆலோசனை
கொடுத்தது யார்?
இறுதியில் மனிதர்தான் பொறுப்பேற்கவேண்டும்.
அடுத்த காலத்தில் என்ன ஆகும்?
முன்பு:
“கணிப்பொறி தெரிந்தவர்” முன்னேறினார்கள். இப்போது: “AI-ஐ
சரியாக
பயன்படுத்த தெரிந்தவர்” முன்னேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனா
இன்னும் முக்கியமானவர்கள் யார்
தெரியுமா? AI சொல்வதை கூட
cross-check செய்ய
தெரிந்தவர்கள். ஏன்னா…
கருவி
புத்திசாலி ஆகலாம்.
ஆனா
தீர்மானம் இன்னும் மனிதரிடமே இருக்கு.
இறுதியாக...
AI என்பது சினிமாவில் காட்டுவது போல
உலகத்தை கைப்பற்ற வந்த
ரோபோ
இல்லை.
அதே
நேரத்தில்: “இதெல்லாம் வெறும்
hype” ன்னு
dismiss பண்ணக்கூடிய விஷயமும் இல்லை.
இது
ஒரு
சக்திவாய்ந்த கருவி.
சரியாக
பயன்படுத்தினால்: நேரத்தை மிச்சப்படுத்தும். சிந்திக்காமல் நம்பினால்: பிரச்சனையை வேகமாக
பெரிதாக்கும்.
அதனால்...
AI-ஐப் பார்த்து பயப்பட
வேண்டாம். ஆனால்
சோதிக்காமல் நம்பவும் வேண்டாம்.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment