Saturday, May 2, 2026

GSTPS : 175th Zoom meeting successfuly held

 


இன்றைய GSTPS சொசைட்டியின் 175வது ஜூம் கூட்டம் திரளான உறுப்பினர்களுடன், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலர் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது.

 

இந்த அமர்வில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி விதிப்பு மற்றும் வசூல் தொடர்பான முக்கிய அம்சங்களை ஒருங்கிணைந்த பார்வையில் விளக்கமாக Dr. வில்லியப்பன் எடுத்துரைத்தார்.

 

முதன்மையாக, எந்த பரிவர்த்தனைகள் வழங்கல் ஆக கருதப்படுகின்றன, அவை எப்போது வரிக்குட்படும் என்பதற்கான அடிப்படை புரிதலை தெளிவுப்படுத்தினார்.

 

தொடர்ந்து, வழங்கல்களின் வகைப்பாடு (கூட்டு மற்றும் கலப்பு) சரியாக இருக்க வேண்டிய அவசியமும், தவறான அணுகுமுறையால் ஏற்படும் கூடுதல் வரிச் சுமை அபாயத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

அதன்பின், வரி விதிப்பு நடைமுறைகள், குறிப்பாக பெறுநர் வரி செலுத்தும் சூழ்நிலைகள் போன்ற முக்கிய அபாயப் பகுதிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

 

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பொருந்தக்கூடிய தொகுப்பு திட்டத்தின் நடைமுறை பயன்கள் மற்றும் அதன் வரம்புகளையும் எடுத்துரைத்தார்.

 

மேலும், வரி பொறுப்பு உருவாகும் நேரம், விகித மாற்றங்களின் தாக்கம், மற்றும் வழங்கலின் மதிப்பு கணக்கீடு போன்ற நடைமுறை முக்கிய அம்சங்கள் எளிமையாக விளக்கினார்.

 

இத்துடன், சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட டிஜிட்டல் மாற்றங்கள், இணக்க நடைமுறைகளின் கடுமை, மற்றும் தவறுகள் ஏற்பட்டால் ஏற்படும் வட்டி, அபராதம் போன்ற விளைவுகள் பற்றியும் விளக்கினார்.

 

இறுதியாக, இந்த தலைப்பில் துல்லியமான அணுகுமுறை இல்லையெனில், நிதி இழப்பு மட்டுமின்றி, தொழில்முறை நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் வலியுறுத்தினார்.

 

கடந்த முறை ஆங்கிலத்தில் தயார் செய்திருந்தார்.  தமிழில் தயார் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஆங்கில கலப்பே இல்லாமல் இந்த முறை தமிழில் தயார் செய்திருந்தார். 

 

கொஞ்சம் டல் மாணவர்களின் புரிதலை கணக்கில் கொண்டு கொஞ்சம் மெதுவாக எடுங்கள் என கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் வழக்கமாய் வேகமாய் விளக்குவார். இந்தமுறை கொஞ்சம் அந்த வேகத்தை குறைத்துக்கொண்டார்.  நன்றி.

 

வகுப்பு எடுத்து முடிந்ததும், கேள்வி பதில்களில் நிறைய கேள்விகள், சந்தேகங்களை கேட்டதற்கு, பேச்சாளரும், நிர்வாகிகளும் பதில் அளித்தார்கள். வழக்கறிஞர் திரு. இளஞ்செழியன் அவர்களும் கலந்துகொண்டு பதில் அளித்தார். அவருக்கு நன்றி.

 

கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 

கூட்டங்களைப் பொறுத்தவரை , ஒரு பேச்சாளர் பொதுவாக எத்தனை அனுபவம் இருந்தாலும், இந்த கூட்டத்திற்காக சிறப்பாக படித்து, பிபிடி தயாரித்து பேசுவதற்கு குறைந்த பட்சம்  இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறார்.

 

இந்த மாதிரி கூட்டங்களை கலந்துகொள்ளும் பொழுது தான், ஒவ்வொரு செக்சனும் மற்ற செக்சனுகளுடன் ஊடும் பாவுமாய் கலந்து இருக்கிறது என தெரியவருகிறது.  ஒவ்வொரு கூட்டமும் நமக்கு அறிவையும், தெளிவையும் தருகிறது. தவறவிடுவது நமக்கு தான் பெரிய இழப்பு.  ஆகையால்  கூட்டங்களில் தவறாது கலந்துகொள்வோம்.

 

நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment