Tuesday, May 26, 2026

e-Way Bill Portal-ல் முக்கிய மாற்றங்கள்

 


“இது வெறும் portal update அல்ல; GST compliance ecosystem-இல் ஒரு முக்கிய structural shift ஆக பார்க்கப்பட வேண்டும்.”

 

GSTN வெளியிட்ட புதிய அறிவிப்புவரி ஆலோசகர்கள் மற்றும் வணிகர்களுக்கான கவனிக்க வேண்டிய அம்சங்கள்

 

Goods and Services Tax Network 20.05.2026 அன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, e-Way Bill Portal-ல் பல முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த மாற்றங்கள் வெறும் தொழில்நுட்ப மேம்பாடுகள் அல்ல; எதிர்கால GST  கண்காணிப்பு மற்றும் சரக்கு நகர்வு கண்காணிப்பு முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

 

அறிவிப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய அம்சங்களும் கீழே சீராக தொகுக்கப்பட்டுள்ளன.

 

1. Bill-To / Ship-To Transaction-ல் “Ship To GSTIN” இனி கட்டாயம்

 

Bill-To / Ship-To வகை பரிவர்த்தனைகளில் இனிமேல் “Ship To GSTIN” என்ற விவரம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

 

முக்கிய விளக்கம்:

  • பொருள் பெறுபவர் பதிவு செய்யப்படாத நபராக இருந்தால்:
    • “URP” என்று பதிவு செய்ய வேண்டும்.
  • Address மட்டும் பதிவு செய்வது போதுமானதாக இருக்காது.
  • GSTIN அடிப்படையிலான validation முக்கியமாகும்.

 

அதிக தாக்கம் ஏற்படும் பரிவர்த்தனைகள்:

  • Branch Transfer
  • Drop Shipment
  • Third-Party Delivery
  • Job Work Dispatch
  • Multi-location Dispatch

 

நடைமுறை ரீதியாக கவனிக்க வேண்டியது:

 

பல நிறுவனங்களில் தற்போது customer master மற்றும் delivery master தரவுகள் முழுமையாக பராமரிக்கப்படாமல் இருக்கலாம். இனி Ship-To GSTIN mismatch அல்லது incomplete data எதிர்காலத்தில் compliance risk ஆக மாற வாய்ப்பு உள்ளது.

 

2. புதிய “e-Way Bill Closure Facility” அறிமுகம்

 

GSTN முதன்முறையாக e-Way Bill Closure என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இதன் நோக்கம்:  சரக்கு delivery முடிந்த பிறகு, அந்த e-Way Bill transaction- system-ல் முறையாக close செய்வது. தற்போது இது “Voluntary Basis” என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் இது compliance expectation ஆக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

3. யார் e-Way Bill Close செய்யலாம்?

 

பின்வரும் நபர்களுக்கு closure செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

  • Supplier
  • Recipient
  • Transporter
  • Driver
  • Authorized Person

இதனால் delivery acknowledgement மற்றும் movement confirmation மீது department அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.

 

4. Closure செய்யும் இரண்டு முறைகள்

 

(a) EWB Number அடிப்படையில்

ஒவ்வொரு e-Way Bill- தனித்தனியாக close செய்யலாம்.

 

(b) Date-wise Closure

ஒரே நாளில் உருவாக்கப்பட்ட பல EWB-களை தொகுப்பாக close செய்யலாம்.

இதனால் bulk dispatch செய்யும் நிறுவனங்களுக்கு வசதி ஏற்படும்.

 

5. Driver Mobile Number – புதிய முக்கிய அம்சம்

 

e-Way Bill உருவாக்கும் நேரத்தில் closure purpose-க்காக mobile number பதிவு செய்யலாம்.

இந்த எண்ணை பின்னரும் update செய்யலாம்:

  • Vehicle updation போது
  • Consolidated EWB செயல்பாட்டில்
  • Validity extension செய்யும் போது

 

இதன் முக்கியத்துவம்:

Delivery முடிந்தவுடன்:

  • Driver
  • Delivery staff
  • Authorized representative
    நேரடியாக closure செய்யும் வசதி கிடைக்கிறது.

இது field-level confirmation mechanism உருவாக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டமாக பார்க்கப்படுகிறது.

 

6. Mobile Number மூலம் Closure செய்யும் வசதி

 

 

Portal-இல் Search Option கீழ் mobile number பதிவு செய்து: அந்த எண்ணுடன் தொடர்புடைய active e-Way Bill-களை பார்க்க முடியும்.

அதன் மூலம் authorized person closure செய்யலாம்.

இதனால்:

  • Delivery traceability
  • Accountability
  • Real-time confirmation
    மேலும் வலுப்படுத்தப்படுகின்றன.

 

7. Closure செய்ய அனுமதிக்கப்பட்ட காலவரம்பு

 

e-Way Bill close செய்ய அனுமதிக்கப்பட்ட காலம்:

  • Delivery நடந்த அதே நாள்
    அல்லது
  • அடுத்த நாள்

 

கவனிக்க வேண்டிய நடைமுறை சிக்கல்கள்:

பின்வரும் சூழ்நிலைகளில் எதிர்காலத்தில் practical difficulty உருவாகலாம்:

  • Long-distance transport
  • Partial unloading
  • Multi-point delivery
  • Night delivery
  • Warehouse holding delay

எனவே SOP மற்றும் internal control முன்கூட்டியே வடிவமைத்துக்கொள்ளுவது நல்லது.

 

8. API / ERP Integration – மிகவும் முக்கியமான மாற்றம்

 

NIC Sandbox Environment-ல் தேவையான API மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Production Rollout:

15 ஜூன் 2026 முதல் production-ல் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

 

API மூலம் Closure செய்ய வேண்டிய விவரங்கள்:

  • e-Way Bill Number
  • Closure Date
  • Remarks

 

GSTN குறிப்பாக அறிவுறுத்தியுள்ளவர்கள்:

  • ERP Vendors
  • GSPs
  • ASPs
  • System Integrators

 

அவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது:

  • Updated API specifications பெறுதல்
  • Sandbox testing செய்தல்
  • ERP configuration மாற்றுதல்
  • Production readiness உறுதி செய்தல்

 

9. நிறுவனங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை

 

இந்த மாற்றங்களை லேசாக எடுத்துக்கொள்ளாமல், நிறுவனங்கள் உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது அவசியம்:

 

Process Level:

  • Dispatch SOP புதுப்பித்தல்
  • Delivery confirmation workflow அமைத்தல்
  • Closure responsibility தெளிவுபடுத்தல்

 

System Level:

  • ERP validation மாற்றுதல்
  • Ship-To GSTIN master cleanup
  • Driver mobile capture mechanism உருவாக்குதல்

 

Human Level:

  • Accounts Team awareness
  • Dispatch Team training
  • Transport coordination strengthening

 

10. தொழில்முறை ரீதியாக பார்க்கும்போது

 

இந்த மாற்றங்கள் மூலம் GST அமைப்பு மெதுவாக:

  • Goods Movement Intelligence
  • Delivery Authentication
  • Automated Risk Detection
  • Fake Movement Analysis
  • Circular Trading Monitoring
    போன்ற data-driven compliance கட்டமைப்புக்கு நகர்கிறது.

 

எதிர்காலத்தில் பின்வருபவை risk trigger ஆக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது:

  • நீண்ட நேரம் close செய்யப்படாத EWB
  • Ship-To mismatch
  • Delivery inconsistency
  • Repeated transporter anomaly
  • Driver mobile mismatch

 

எனவே இது வெறும் portal update அல்ல; GST compliance ecosystem-இல் ஒரு முக்கிய structural shift ஆக பார்க்கப்பட வேண்டும்.

 

இறுதியாக..

 

e-Way Bill அமைப்பு தற்போது “movement declaration” நிலையிலிருந்து “movement confirmation” நிலைக்கு நகரத் தொடங்கியுள்ளது.

அதனால்:

  • ERP discipline
  • Data accuracy
  • Delivery confirmation
  • Real-time operational control
    இவற்றின் முக்கியத்துவம் இனி அதிகரிக்கப்போகிறது.


வரி ஆலோசகர்கள், தொழில்முனைவோர், ERP நிர்வாகிகள் மற்றும் Accounts Teams அனைவரும் இந்த மாற்றங்களை முன்கூட்டியே புரிந்துகொண்டு தயாராக இருப்பது பாதுகாப்பான மற்றும் தொழில்முறை அணுகுமுறையாக இருக்கும்.

 

தமிழில் : 


-          இரா. முனியசாமி

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

📞 95512 91721


No comments:

Post a Comment