சில நாட்களுக்கு முன், ஒரு நிறுவன உரிமையாளர் பேசிக்கொண்டிருந்தார்.
“சார்… எங்களிடம் PF Trust இருக்கு… நாங்க
EPF-க்கு
contribution கட்டவே
மாட்டோம்… அதனால்
government sideல
எதுவும் payable இல்லையே?” என்றார்கள். அவர்கள் கேட்ட
கேள்வி
சுலபமானதுதான். ஆனா
அதன்
பின்னால் இருக்கும் சட்ட
நிலை
கொஞ்சம் ஆழமானது.
🔹
விலக்கு எடுத்ததாலே பொறுப்பு முடிவா?
பல
நிறுவனங்கள் என்ன
நினைக்கின்றன என்றால்… “EPF scheme-ல இருந்து exemption எடுத்தோம்… EDLI-யும் own arrangement இருக்கு… அதனால்
EPFO-க்கு
கட்ட
வேண்டியது எதுவும் இல்லை”
இது
முழுமையாக சரியான
புரிதல் இல்லை.
🔹
அரசு என்ன சொல்கிறது?
29.05.2026 Notification மூலம்
மத்திய
அரசு
தெளிவாக கூறியுள்ளது:
Section 143 – Code on Social
Security, 2020 கீழ் EPF
/ EDLI scheme-லிருந்து விலக்கு பெற்ற
நிறுவனங்களும் ஆய்வுக் கட்டணம் (Inspection Charges) செலுத்த
வேண்டும். அதாவது… Contribution இல்லையென்றாலும் ஆய்வுக்கட்டணம் இருக்கிறது
🔹
இந்த Inspection Charges என்ன?
இது
PF contribution இல்லை.
Insurance premium கூட
இல்லை.
இது:
“அரசு கண்காணிப்பு / ஆய்வு
செலவுக்கான கட்டணம்”
அதாவது…
நிறுவனம் டிரஸ்ட் மூலம்
scheme நடத்தினாலும், அதை
அரசு
கண்காணிக்கிறது. அந்த
கண்காணிப்பு செலவுக்கான கட்டணமே இது.
🔹
எவ்வளவு கட்ட வேண்டும்?
▶
EPF Scheme (1952)
- Wages-இன் 0.35%
- Minimum: ₹8,750
▶
EDLI Scheme (1976)
- Wages-இன் 0.005%
- Minimum: ₹1,250
இங்கே
பலர்
தவறுவது இதில்தான்… “Percentage குறைவுதான்… தொகை
குறைவாக வரும்”
என்று
நினைக்கிறார்கள் ஆனா… குறைந்தப்பட்ச கட்டணம் Minimum
amount கட்டாயம்
அதாவது:
- Calculation ₹5,000 வந்தாலும்
→ ₹8,750 கட்டவேண்டும் (EPF case)
🔹
எப்போது கட்ட வேண்டும்?
இது ஆண்டுக்கு
இல்லை… ஒருமுறை மட்டுமில்லை.
👉 Monthly compliance
- ஒவ்வொரு மாதமும்
- மாதம் முடிந்த 15 நாட்களுக்குள்
பல
நிறுவனங்களில் பார்த்த அனுபவம்:
- PF டிரஸ்ட் இருக்கிறது ✔
- தணிக்கை நடக்கிறது
✔
- Returns file செய்கிறார்கள் ✔
ஆனா…
👉 Inspection Charges மட்டும் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்
❌
பிறகு:
- நோட்டிசு
வரும்
- Demand வரும்
- வட்டிச் சேரும்
🔹
இதை தவிர்க்க என்ன செய்யலாம்?
சில
எளிய
நடைமுறைகள்:
- Monthly checklist-ல் சேர்க்கவும்
- Payroll process-க்கு இணைக்கவும்
- Compliance calendar update செய்யவும்
🔹
சட்ட நிலை
- இது Statutory
liability
- Section 143 அடிப்படையில் கட்டாயம்
- தவிர்க்க
முடியாத பொறுப்பு
👉 As per current law (2026
Notification)
👉 Subject to change / clarification
🔹
ஒரு வரியில் புரிந்து கொள்ளுங்கள்…
“EPF exemption எடுத்தால்
contribution குறையும்… ஆனால்
compliance குறையாது”
இறுதியாக...
விலக்கு என்பது
சலுகை
தான்.
ஆனால்
அந்த
சலுகைக்கு இணையாக
வரும்
பொறுப்புகளைப் புரிந்து கொள்ளாதால், அது
பின்னால் சிக்கலாக மாறும்.
நிறுவனங்கள் இதை ஒரு சிறிய கட்டணமாக பார்க்காமல், சட்ட ரீதியான தவிர்க்க முடியாத மாதாந்திர பொறுப்பு என்று எடுத்துக்கொண்டால் தான் பாதுகாப்பாக இருக்கும்.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment