ஒரு வரி ஆலோசகராக ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்வது என்பது வெறும் கால அளவல்ல; அர்ப்பணிப்பு, நேர்மை, கற்றல், உழைப்பு ஆகியவற்றின் நீண்ட பயணம்.
இந்த முக்கியமான தருணத்திலும் தமது சாதனைகளை மட்டும் முன்னிறுத்தாமல், தம்முடன் பணியாற்றியவர்கள், வழிகாட்டியவர்கள், சக வரி ஆலோசகர்கள், வாடிக்கையாளர்கள் என பலருக்கும் நன்றியைத் தெரிவிப்பது அவருடைய உயர்ந்த பண்பை வெளிப்படுத்துகிறது.
தாம் மட்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விட, தம்மைச் சுற்றியுள்ளவர்களும் வளர வேண்டும் என்ற மனப்பான்மை அவர் இன்னும்
தனித்துவமானராக்குகிறது.
அவருடைய நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கு உரிய மதிப்பும், நல்ல ஊதியமும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதைவிட முக்கியமாக, அவர்கள் தனியாக தொழில் தொடங்க விரும்பியபோது அதற்கும் ஆதரவாக நின்றுள்ளார். ஒரு நல்ல தொழில்முனைவோரை உருவாக்குவது எளிது; ஆனால் பல நல்ல தொழில்முனைவோர்களை உருவாக்குவது அரிது.
அந்தப் பகிர்வு மனப்பான்மையும், பிறரை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணமும்தான் இன்று GST Professionals Society போன்ற அமைப்பு உருவாகவும், அதன் மூலம் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வளரவும் காரணமாக அமைந்துள்ளது.
தினமும் தம்மை புதுப்பித்துக் கொள்வது, புதிய சட்ட மாற்றங்களை அறிந்து கொள்வது, தொழிலில் நேர்மையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது, தொடர்ந்து உழைப்பது ஆகியவை அவருடைய அடையாளங்களாக உள்ளன.
வயது எழுபதைக் கடந்திருந்தாலும், கற்றலிலும் செயல்பாட்டிலும் இன்னும் இளமை ததும்பும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார். சிலர் வயதால் முதிர்கிறார்கள்; சிலர் அனுபவத்தால் உயர்கிறார்கள். தலைவர் அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
ஐம்பது ஆண்டுகள் என்பது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; பலரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய சேவையின் சான்றாகும்.
இந்த அரிய சாதனையை எட்டியுள்ள எங்களது அன்பு தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், அவருடைய ஐம்பது ஆண்டு கால அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே உற்சாகத்துடன், இதே நேர்மையுடன், இதே வழிகாட்டும் பண்புடன் சமூகத்திற்கும் தொழில்துறைக்கும் பங்களிக்க இயற்கை உங்களை வாழ்த்தி இன்னும் பல
ஆண்டுகள் வாழவைக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.
-
இரா.
முனியசாமி,
-
வரி
ஆலோசகர்
-
9551291721


No comments:
Post a Comment