அறிமுகம்
ஒரு
வரி
செலுத்துபவர் (Taxable Person), ஒரு அதிகார வரம்பிலிருந்து (Jurisdiction)
மற்றொரு வரம்பிற்கு மாற்றப்படும்போது, “ஏற்கனவே தொடங்கிய வழக்குகள் என்ன
ஆகும்?”
“யார்
தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள்?” என்பதில் நடைமுறையில் பல
குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இதற்கு
தீர்வாக CBIC வெளியிட்டுள்ள Circular No. 255/01/2026-GST (25.06.2026) மிகவும் முக்கியமான வழிகாட்டுதலை வழங்குகிறது.
முக்கியக் கருத்து (Core Concept)
👉 “ஒரு நடவடிக்கை தொடங்கிய நேரத்தில் அந்த அதிகாரிக்கு இருந்த
Jurisdiction தான்
முக்கியம்”
➡️
பின்னர் Jurisdiction மாற்றம் ஏற்பட்டாலும் அந்த நடவடிக்கை செல்லுபடியாகவே இருக்கும்
எளிய விளக்கம் (Simple Understanding)
1.
ஏற்கனவே தொடங்கிய நடவடிக்கைகள்
- Investigation (விசாரணை)
- Audit (தணிக்கை)
- Show Cause Notice (SCN)
- Adjudication (தீர்ப்பாணை)
👉 இவை அனைத்தும்
முந்தைய அதிகாரியால் தொடங்கப்பட்டிருந்தாலும்
➡️
முழுமையாக செல்லுபடியாகும்
2.
Jurisdiction மாற்றத்திற்குப் பிறகு
👉 அடுத்த கட்ட நடவடிக்கைகள்:
- Order implementation (ஆணை அமலாக்கம்)
- Recovery (பணம் வசூல்)
- Appeal (மேல்முறையீடு)
- Tribunal representation
➡️
புதிய அதிகாரி (Transferee Officer) மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
3.
முந்தைய அதிகாரியின் நிலை
👉 மாற்றத்திற்குப்
பிறகு:
- புதிய
Notice வழங்க முடியாது
- வழக்கை தொடர்ந்து
நடத்த முடியாது
➡️
அவரது அதிகாரம் அங்கு முடிவடைகிறது
4.
Pending வழக்குகள்
👉 வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது மாற்றம் ஏற்பட்டால்:
➡️
அதே நிலையிலிருந்து புதிய அதிகாரி தொடர வேண்டும்
நடைமுறை எடுத்துக்காட்டு
ஒரு
நிறுவனம் சென்னை
Jurisdiction-ல்
இருந்தது என
எடுத்துக்கொள்ளுங்கள்:
- SCN – சென்னை அதிகாரி issue செய்தார்
- அதற்குள்
நிறுவனம் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது
👉 இப்போது:
- SCN → செல்லுபடியாகும்
- Adjudication → கோயம்புத்தூர் அதிகாரி
- Recovery → கோயம்புத்தூர் அதிகாரி
✔
Notice வந்த
இடத்தை
மட்டும் பார்க்க வேண்டாம்
✔ Current Jurisdiction சரிபார்க்க
வேண்டும்
✔ Reply / Appeal யாரிடம் தர வேண்டும் என்பதை
சரியாக
தீர்மானிக்க வேண்டும்
✔ Case transfer நடைமுறையை கவனமாக பின்பற்ற வேண்டும்
சுருக்கமாக
- Past action → Valid
- Future action → New officer
- Old officer → No power after transfer
- Pending case → Continued by new officer
“அதிகார வரம்பு
மாற்றம் வழக்கை
நிறுத்தாது; அதை
தொடர்ந்து நடத்தும் அதிகாரியை மட்டும் மாற்றும்”
இறுதியாக...
Jurisdiction மாற்றம் என்பது சட்ட ரீதியாக “நடவடிக்கையின் செல்லுபடியாக்கத்தை அல்ல, நடவடிக்கை எடுக்கும் அதிகாரியை மாற்றும்” என்பதை
தெளிவாக புரிந்து கொண்டு
செயல்பட்டால், நடைமுறையில் ஏற்படும் பல
பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
சுருக்கமாக :
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment