ஒரு புதிய நிறுவனம் ESI பதிவு செய்துவிட்டோம். ஆனால் பி.எப். பதிவு செய்யமுடியவில்லை. பதிவு செய்து தாருங்கள் என கோவையில் இருந்து வந்தார்கள்.
இப்பொழுது
மின்னஞ்சல், மொபைல் எண், பான் எண் எல்லாமே உடனுக்குடன் ஓடிபி கொடுத்து சரிப்பார்த்து
கொள்கிறது. GST எண் மட்டுமே சரிப்பார்க்க முடியவில்லை. தளம் இரண்டு நாட்களாக மக்கர்
செய்தது.
பதிவு எங்களுக்கு
உடனடியாக எவ்வளவு அவசியம் என சொல்லி, தளத்தின் தொடர்பு மின்னஞ்சலுக்கு விரிவாக ஒரு
கடிதம் அனுப்பினோம். என்ன ஒரு ஆச்சர்யம். GST எண் (Verify) சரிப்பார்ப்பையே நிறுத்திவைத்துவிட்டார்கள். மற்ற விவரங்களை பூர்த்தி செய்து, பி.எப். எண் பெற்றுவிட்டோம்.
(நமது மின்னஞ்சலுக்கு உடனே மதிப்பளித்துவிட்டார்கள் என நம்பவில்லை. நம்மைப் போல பலரும்
மின்னஞ்சல் செய்திருப்பதால், சரி செய்திருப்பார்கள் என நம்புகிறேன்)
நான்கு நாட்களுக்கு
முன்பு வரை, பி.எப், இ.எஸ்.ஐ இரண்டுக்கும்
சேர்த்து பதிவு எண்களையும் இணைத்து தான் தருவோம் என்கிற மாதிரி அடம்பிடித்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தனித்தனியாக விண்ணப்பிக்கும் வசதியை தரவில்லை.
இப்பொழுது
அப்படி தந்துவிடுமோ என பதிவு செய்தால், இறுதியில் தளமே ஏற்கனவே இ.எஸ்.ஐ இருப்பதை கண்டுபிடித்து,
பி.எப். பதிவு எண்ணை மட்டுமே தந்தது. ஆக கொஞ்சம் கொஞ்சமாக தளத்தின் பிரச்சனைகளை சரி
செய்து வருகிறார்கள். மகிழ்ச்சி.
நன்றி
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment