ஒரு
சின்ன
கேள்வி.
ஒரு
சொசைட்டியில் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று
வைத்துக் கொள்ளுங்கள். அந்த
100 பேரும்
"புதிய உறுப்பினர்களை சேர்ப்பது நிர்வாகிகளின் வேலை" என்று நினைத்தால் என்ன
ஆகும்?
சொசைட்டி இருக்கும். ஆனால்
வளராது.
அதே
100 பேரும்,
"இந்த சொசைட்டி எனக்கு பயன் தந்திருக்கிறது; இன்னொருவருக்கும் இதை அறிமுகப்படுத்தலாம்" என்று நினைத்தால் என்ன
ஆகும்?
சொசைட்டி வளரத்
தொடங்கும்.
உண்மையில் ஒரு
சொசைட்டியின் பலம்
அதன்
உறுப்பினர்களின் உண்மையான ஈடுபாட்டில்தான் இருக்கிறது. ஒரு
தோட்டத்தில் புதிய
செடிகள் நட்டுக் கொண்டே
இருந்தால்தான் அது
பசுமையாக இருக்கும்.
அதேபோல், ஒரு
சொசைட்டியிலும் புதிய
உறுப்பினர்கள் இணைந்துக் கொண்டே
இருந்தால்தான் புதிய
சிந்தனைகள், புதிய
உறவுகள், புதிய
வாய்ப்புகள் உருவாகும்.
புதிய உறுப்பினர்கள் ஏன் தேவை?
அவர்கள் உறுப்பினர் கட்டணம் மட்டும் செலுத்த வருவதில்லை. அவர்களுடன் புதிய
அனுபவங்களும் வருகின்றன. புதிய
தொழில்களும் வருகின்றன. புதிய
கேள்விகளும் வருகின்றன.
சில
நேரங்களில் நாம்
பல
ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு
பிரச்சினைக்கு, புதிதாக இணைந்த
ஒருவர்
ஐந்து
நிமிடத்தில் ஒரு
புதிய
தீர்வைச் சொல்லிவிடலாம். அதுதான் புதிய
மனிதர்களின் பலம்.
இன்னொரு விஷயம்.
புதிய
உறுப்பினர்கள் வரும்போது, பழைய
உறுப்பினர்களுக்கும் ஒரு
புதிய
உற்சாகம் பிறக்கிறது. புதிய
முகங்கள். புதிய
உரையாடல்கள். புதிய
நட்புகள். புதிய
கற்றல்கள். நின்று
கொண்டிருக்கும் நீர்
தேங்கிவிடும். ஓடிக்
கொண்டிருக்கும் நீர்தான் புத்துணர்ச்சியாக இருக்கும். சொசைட்டிகளுக்கும் அதே
விதிதான்.
சிலர்
சொல்வார்கள்: "நான் உறுப்பினராக இருக்கிறேன். சந்தா கட்டுகிறேன். அதுவே போதும்." நிச்சயமாக அது
முக்கியம். ஆனால்
ஒரு
சொசைட்டி வெறும்
சந்தா
பணத்தால் மட்டும் வளராது.
அதைப்
பற்றிப் பெருமையாக பேசும்
உறுப்பினர்களால், அதன் பலனை உணரும்
உறுப்பினர்களால் தான் வளர்கிறது. ஏனெனில் விளம்பரம் நம்பிக்கையை உருவாக்கும். ஆனால்
உறுப்பினரின் அனுபவம் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
நீங்கள் ஒரு
நண்பரிடம் "இந்த சொசைட்டியில் எனக்கு நல்ல தொடர்புகள் கிடைத்தன." "பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்." "நீங்களும் ஒரு முறை வந்து பாருங்கள்." என்று சொன்னால், அது
ஒரு
அழைப்பு மட்டுமல்ல. அவருக்கு ஒரு வாய்ப்பை அறிமுகப்படுத்தும் செயல்.
ஒரு
புதிய
உறுப்பினரை சேர்ப்பது என்பது
எண்ணிக்கையை அதிகரிப்பது அல்ல.
ஒரு
புதிய
சிந்தனையை உள்ளே
கொண்டு
வருவது.
ஒரு
புதிய
அனுபவத்தை இணைப்பது. ஒரு
புதிய
உறவை
உருவாக்குவது. சில
நேரங்களில், நாளைய
தலைவரை
இன்று
அறிமுகப்படுத்துவதும் கூட.
அதனால்,
புதிய
உறுப்பினர்களை சேர்ப்பது நிர்வாகிகளின் வேலை
மட்டுமல்ல. ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்பும் கூட.
ஏனெனில் சொசைட்டி என்பது
"அவர்கள்" நடத்தும் அமைப்பு அல்ல.
"நாம்"
உருவாக்கிய சமூகமாகும்.
இறுதியாக...
ஒரு
நல்ல
சொசைட்டி உறுப்பினர்களால் உருவாகிறது. ஒரு
வலுவான
சொசைட்டி உறுப்பினர்களால் வளர்கிறது. ஒரு
தலைமுறைக்குப் பிறகும் வலுவாய் நிலைத்து நிற்கும் சொசைட்டி,
"நான் மட்டும்
பயன் பெற வேண்டும்" என்று நினைக்கும் உறுப்பினர்களால் அல்ல, "இன்னொருவரும்
இந்தப் பயனைப் பெற வேண்டும்" என்று நினைக்கும் உறுப்பினர்களால் உண்மையில் சொசைட்டி வளர்கிறது.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment