ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு தொழிலாளருக்கு, அவரது யு.ஏ.என். (UAN) அடையாள எண் உருவாக்கப்பட்டு, பி.எஃப். சந்தா முறையாகச் செலுத்தப்பட்டது.
பின்னர் அவர்
இரண்டாவது நிறுவனத்தில் சேர்ந்தபோது, "பி.எஃப்.
பிடிக்கவேண்டுமா, வேண்டாமா?" என்று அந்நிறுவனம் கேட்டது. அதற்கு
அவர்
"வேண்டாம்" என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். ஆனால்
இது
சட்டப்படி முறையானதல்ல.
ஏன்? — UAN ஒருமுறை உருவாக்கப்பட்டு, பி.எஃப். சந்தா செலுத்தத் தொடங்கிவிட்டால், அந்தத்
தொழிலாளரின் Basic + DA ரூ.15,000 என்ற உச்சவரம்பை தாண்டினாலும் கூட,
பங்களிப்பை நிறுத்தும் உரிமை
அவருக்கு இல்லை
— தொடர்ந்து செலுத்தப்படவேண்டும்.
அதே
தவறை
மூன்றாவது நிறுவனத்திலும் செய்யப்பார்த்தார். ஆனால்
அந்த
நிறுவனம் உறுதியாக மறுத்தது: "பி.எஃப்.
பிடித்தே ஆகவேண்டும்" என்று தெளிவாகத் தெரிவித்தது. அது
சரியான
நடவடிக்கை.
இதற்கிடையில், இரண்டாவது நிறுவனத்தில் பங்களிப்பு நின்றுபோனது குறித்து, பி.எஃப். அமைப்பு இப்போது விசாரணை நடத்துகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
முடிவுரை: UAN தொடங்கியபின் பி.எஃப். பிடிப்பை நிறுத்துவது சட்டவிரோதம். நிறுவனங்கள் இதில்
சமரசம்
செய்துகொள்வது தங்களுக்கே வினையாக மாறும்.
விதிகளை அறிந்து, அமுல்படுத்துவதில் விழிப்புடன் இருக்கவேண்டும்.
நமது உறுப்பினர் ஒருவர் இந்த செய்தியை
நம்மிடம் பகிர்ந்தார். மற்றவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என இங்கு பகிர்ந்துள்ளேன்.
நன்றி.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment