Tuesday, June 2, 2026

Pradhan Mantri Suraksha Bima Yojana இந்தத் திட்டம் என்ன? பலன் என்ன? நிபந்தனைகள் என்ன?

 


இது ஒரு விபத்து காப்பீட்டு திட்டம். சாதாரண மரணம் அல்லது உடல்நலக் கோளாறுகளுக்கு அல்ல; விபத்தால் மரணம் அல்லது நிரந்தர ஊனமுற்ற நிலை ஏற்பட்டால் நிதி உதவி வழங்கும் திட்டம்.

 

இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட குறைந்த கட்டண காப்பீட்டு திட்டம் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

 

முக்கிய பலன்கள்

 

நிலை                காப்பீட்டு தொகை

விபத்து காரணமான மரணம்   ₹2 லட்சம்

இரு கண்களும் / இரு கைகளும் / இரு கால்களும் நிரந்தர செயலிழப்பு          ₹2 லட்சம்

ஒரு கண் அல்லது ஒரு கை / கால் மட்டும் நிரந்தர செயலிழப்பு               ₹1 லட்சம்

 

பிரீமியம் - வருடத்திற்கு ₹20 மட்டும்.

 

ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கிலிருந்து தானாக கழிக்கப்படும் (Auto Debit).

பொதுவாக காப்பீட்டு காலம்ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை.


யார் சேரலாம்?


18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் Auto-debit அனுமதி வழங்கியிருக்க வேண்டும்

 

ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கின் மூலம் மட்டும் இந்தத் திட்டம் அனுமதி.

 

முக்கிய நிபந்தனைகள்


1. இதுவிபத்து காப்பீடு மட்டும்

 

சாதாரண உடல்நல மரணம், இதயஅடைப்பு, நோய் போன்றவற்றுக்கு பொதுவாக காப்பீட்டு தொகை கிடையாது.

 

2. வங்கி இருப்பு அவசியம்

 

குறிப்பிட்ட காலத்தில் கணக்கில் ₹20 இல்லையெனில் புதுப்பிப்பு நடக்காமல் போகலாம்.

 

3. 70 வயதுக்குப் பிறகு காப்பீடு நிறுத்தம்

 

70 வயது முடிந்ததும் பொதுவாக காப்பீட்டு பாதுகாப்பு முடிவடைகிறது.

 

4. விபத்து ஆதாரங்கள் அவசியம்

 

Claim பெற:

 

FIR / Police Report

மருத்துவ சான்றுகள்

மரணச் சான்று

மருத்துவமனை பதிவுகள்

போன்ற ஆதாரங்கள் தேவைப்படலாம்.

கவனிக்க வேண்டிய ஒரு நடைமுறை விஷயம்

 

சில நேரங்களில் வங்கிகள், வாடிக்கையாளர்களின் பழைய ஒப்புதல் அல்லது bundled consent அடிப்படையில் இந்தத் திட்டத்தை இயக்கியிருக்கலாம். அதனால் பலருக்குநாம் பதிவு செய்தோமா?” என்ற சந்தேகம் வரும். இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் புகார்கள் காணப்படுகின்றன.

 

எனவே:

 

வங்கியில் PMSBY செயலில் உள்ளதா?

எப்போது பதிவு செய்யப்பட்டது?

Nominee யார்?

என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

இந்தத் திட்டம் பயனுள்ளதா?

 

₹20 என்ற மிகவும் குறைந்த தொகையில் ₹2 லட்சம் வரை விபத்து பாதுகாப்பு கிடைப்பதால்,

குறிப்பாக:

 

தினசரி பயணம் செய்பவர்கள்,

இருசக்கர வாகனம் பயன்படுத்துபவர்கள்,

தனியார் வேலை செய்பவர்கள்,

குடும்ப வருமானத்தை தாங்கி நிற்பவர்கள்

 

போன்றவர்களுக்கு இது ஒரு அடிப்படை பாதுகாப்புத் திட்டமாக பயன்படக்கூடும்.

 

*ஆனால் இது முழுமையான வாழ்க்கை அல்லது மருத்துவ காப்பீட்டிற்கு மாற்றாக அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.*

 

-        இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

No comments:

Post a Comment