Wednesday, June 3, 2026

ESI, PF பதிவிற்கான (Registration) புதிய தளம்

 


ESI, PF பதிவு (Registration) செய்வதற்கான Shram Suvidha (தமிழாக்கம் – தொழிலாளர் வசதி) தளத்தில்   முன்பு பதிவு செய்து கொண்டிருந்தோம்.  புதிய தொழிலாளர் சட்டம் அமுலுக்கு வந்ததால், தளத்தையும் புதிதாக மாற்றியிருக்கிறார்கள்.  அதற்கான தளத்தின் முகவரி…

 

https://shramsuvidha.gov.in/register .

 

முன்பு எளிமையாக இருந்த முறையை,  இப்பொழுது கொஞ்சம் கடினமாக மாற்றியிருக்கிறார்கள்.

 

இப்பொழுது மின்னஞ்சல் கொடுத்தால், உடனே சரிப்பார்க்கிறது (Verify).  அதே போல மொபைல் எண் கொடுத்தாலும்,  GST பதிவு எண் கொடுத்தாலும் உடனே , சரிப்பார்க்கிறது. 

 

அதெல்லாம் கூட பிரச்சனையில்லை.   ஆனால் தளம் இன்னும் முழுமையடையாமலேயே அறிமுகப்படுத்தியதால்,  சரிப்பார்க்கும் அந்த லிங்க் சரியாக வேலை செய்யாமல் நொண்டுகிறது அல்லது வேலை செய்ய மறுக்கிறது. அடுத்த பக்கத்திற்கு நகர மறுக்கிறது.  இப்படி ஒவ்வொரு படிநிலையையும் தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அல்லது அவர்கள் அந்த பிரச்சனையை சரி செய்ய நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

 

இப்படி ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இறுதியில் ஆதார் சரிப்பார்ப்பு நிலைக்கு (Aadhar Authentication)  வந்து…  ஆதார் எண் தந்து, ஓடிபியும் வந்து.. கொடுத்தால், வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என சொல்லி சந்தோசப்படுத்துகிறது. பிறகு பழைய நிலைமைக்கே வந்து நிற்கிறது.   இப்படி விட்டு விட்டு போராடி, 18 நாட்களுக்கு பிறகு, இன்று வெற்றிகரமாக பி.எப்பிற்கும், இ.எஸ்.ஐக்கும் பதிவு எண் உடனே தந்துவிட்டது.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

No comments:

Post a Comment